Cinema

1)ஒருத்தன் சிவனை கும்பிட்டா பிடிக்காதா ? 2) இந்தா என்னென்ன சொல்லிருக்காரு பாருங்க..!

Pa. Ranjith
Pa. Ranjith

தமிழ் சினிமாவில் இந்து மத அடையாளங்களை காட்சிகளில் வைக்கும் இயக்குனர்கள் தற்போதைய காலத்தில் மிக மிக குறைவு, அதிலும் புது முக இயக்குனர்கள் பலர் இந்து மதத்தை விமர்சனம் செய்வதற்கு என்றே திரைக்கதையை வடிவமைத்து வருகின்றனர். இதில் சற்று வேறுபட்டு இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.


இவர் தனது திரைப்படத்தில் எந்த மதத்தையும் இழிவாக காட்டியது இல்லை, மாறாக ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும் சிவாலயத்திற்கு சென்று வழிபடும் வழக்கத்தை கொண்டுள்ளார், இது தவிர்த்து தனது திரைப்பட நடிகர்கள் ஏதேனும் ஒரு காட்சியில் திருநீறு அணிந்து வரும் வகையில் திரையில் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படம் மாநகரம் பெரும் வெற்றி பெற்றது, அப்போது அந்த திரைப்படத்தில் வரும் வசனம் குறித்து, பா. ரஞ்சித் விமர்சித்து பேசி இருக்கிறார், சென்னையில் மட்டும்தான் கெட்டை வார்த்தை பேசுகிறார்களா? உனக்கு காண்டு சென்னையில் உன்னை அசால்ட்டாக டீல் செய்கிறான் என வாய்க்கு வந்த வகையில் என்னென்ன எல்லாமோ அடித்து விடுகிறார். ரஞ்சித்.

ஏற்கனவே ராஜ ராஜ சோழன் குறித்து பேசி ரஞ்சித் கடும் சர்ச்சையில் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது, இந்த சூழலில் ரஞ்சித் முன்னர் பேசிய வீடியோ தற்போது விவாத பொருளாக மாறி இருக்கிறது, ஏன் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படத்தில் வரும் ஒரு வார்த்தை குறித்து பேசும் ரஞ்சித், அட்டை கத்தி படத்தில் இடம்பெறும் வசனம் குறித்து நினைத்து பார்க்கவில்லையா?

லோகேஷ் கனகராஜ் திரையிலும் நிஜத்திலும் தனது அடையாளங்களை மறைக்காமல் இருப்பது ரஞ்சித் போன்ற நபர்களுக்கு இடையூறாக இருக்கலாம் எனவும் பலரும் தற்போது விமர்சித்து வருகின்றனர், கிருஷ்ணகுமார் என்பவர் எழுப்பிய கேள்வியில் ரஞ்சித்திற்கு என்னதான் பிரச்சனை, எதற்கெடுத்தாலும் சென்னை சென்னை அப்படி என்றால் இனி ரஞ்சித் படத்தை மற்ற மாவட்டங்களில் வெளியிடாமல் சென்னையில் மட்டும் வெளியிட ரஞ்சித்திற்கு தைரியம் இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறது.

ஒருவன் சிவ பக்தனாக தெரிந்தால் அவனை சினிமா துறையில் உள்ள ரஞ்சித் போன்றவர்களுக்கு பிடிக்காதே எனவும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.