திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி பணமோசடி வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு தற்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், 5 நாட்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது அமலாக்கதுறை!
செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது அவருடன் தொடர்புடையவர்களிடம் அமலாக்கத்துறை சோதனையை மேற்கொண்டது அதில் செந்தில் பாலாஜியின் சகோதரர் மனைவியின் பெயரில் கட்டப்பட்ட வரும் கரூர் பங்களாவும் அடங்கும். அந்த பங்களா கட்டப்படுவதற்கான தொகை அங்கு வாங்கப்பட்டுள்ள பொருட்களின் விவரங்கள் அனைத்தையும் ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜியின் சகோதரர் மனைவிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் நேரில் ஆஜராக வேண்டும் அவருக்கும் செந்தில் பாலாஜி செய்த பல மோசடிகளுக்கும் தொடர்பு உள்ளது, குறிப்பாக கரூர் கேங் என்று கூறப்படுகின்ற ஒரு குழுவை நிர்வகித்ததே அசோக்குமார் என்று கூறப்படுகின்ற நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக நேரில் ஆஜராகும் படி அமலாக்கத்துறை 4 முறை சம்மன் அனுப்பியும் அசோக் குமார் நேரில் ஆஜராகவில்லை தலைமறைவாகவே இருந்து வந்தார்.
தலைமுறைவாக உள்ள அசோக்குமார் வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீசையும் அனுப்பியது. அமலாக்கத்துறை மட்டுமல்லாது வருமானவரி துறையும் செந்தில்பாலாஜியின் சகோதரர் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது. இப்படி செந்தில் பாலாஜியின் சகோதரர் ஆஜராகும் படி நான்கு முறை அவருக்கு சம்மன் அனுப்பியும் தலைமறைவாக இருந்ததால், அவர் அந்த மாநிலத்தில் இருக்கிறார் ஹைதராபாத்தில் இருக்கிறார் பெங்களூருவில் இருக்கிறார் என்ற தகவல்கள் வந்த நிலையில் அசோக் குமார் எங்கு தலைமறைவாக பதுங்கி இருக்கிறார் என்ற தகவல் வெளிவராமல் இருந்து வந்தது.
இதற்கு இடையே 5 நாட்கள் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை மேற்கொண்ட விசாரணையின் முடிவில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3000 பக்க ஆவணங்களையும், 120 பக்க குற்ற பத்திரிகைகளையும் தாக்கல் செய்ததுடன் செந்தில் பாலாஜியையும் ஆஜர் படுத்தியது. இது போதாது என்று வருகின்ற ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அமலாக்கத்துறை அசோக் குமாரை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டது, இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் தம்பி கேரளாவில் இருப்பதை அறிந்த அமலாக்க துறையின் ஸ்பெஷல் டீம் கேரளா சென்று அசோக்குமாரை கைது செய்து சென்னை கொண்டுவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் செந்தில்பாலாஜி வெளிநாட்டிற்கு தப்பியோட முயற்சி செய்து பதுங்கியிருக்கும் வேளையில் அவர் கைது செய்யப்பட்டார் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் வெளிநாடு தப்பிவிட்டால் செந்தில்பாலாஜி வழக்கு சிக்கலில் சென்றுவிடும் என தெரிந்துதான் அமலாக்கத்துறை செந்தில்பாலாஜி தம்பியை தூக்கியுள்ளதாகவும் இதனால் வழக்கு இன்னும் வேகமெடுக்கும் எனவும் தெரிகிறது...!
இனி செந்தில் பாலாஜியின் சகோதரனை அமலாக்க துறை தூக்கிய காரணத்தினால், செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி ஆகிய இருவரும் கொடுக்கும் தகவல்களை வைத்தே அமலாக்கத்துறை மொத்தமாக குற்றங்களை கண்டுபிடிக்கும் எனவும், அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு தெரிந்த உண்மைகளை கக்கினால் தமிழக முதல்வரின் குடும்பமே சிறை செல்வது உறுதி என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.