24 special

மெகா திட்டத்துடன் காத்திருக்கும் பாஜக! இந்த முறை விஷயமே வேறயாமே!

Annamalai, modi
Annamalai, modi

2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் பயணத்தை மேற்கொண்டு வரும் நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பாதைகளை இப்போதே வகுத்து வருகின்றனர். ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் மெகா கூட்டணி அமைத்து தற்பொழுது தேர்தல் பணிகளுக்கான வேலைகளை தொடங்கியுள்ளனர் அந்த வகையில் எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் ஒருங்கிணைந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்ப்பதற்கு தயாராக உள்ள நிலையில் மறுபக்கம் பாஜகவும் பல கூட்டணிகளை அமைத்து தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளது மேலும் தமிழகத்தை பொறுத்தவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது நடை பயணத்தின் மூலம் பாதி வெற்றியை அடைந்து விட்டார் என்றே கூறலாம்.


இது மட்டுமல்லாமல் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தலில் களமிறங்க உள்ளதால் அதற்காக பல ஆலோசனை கூட்டங்களை நடத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சியில் உள்ள பல முக்கிய தலைவர்கள் சிக்கலில் மாட்டியுள்ளதால் எதிர்க்கட்சிகள் சற்று பின்னடைவை கண்டுள்ளது அதாவது திமுகவின் முக்கிய அமைச்சராக கருதப்படும் செந்தில் பாலாஜி அமலாகத் துறை வசம் சிக்கி இருப்பதும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாதபடி குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததும் எதிர்க்கட்சிகளுக்கு பேரழிவை ஏற்படுத்தியது என்றே கூறலாம் இது மட்டுமல்லாமல் யாரை பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்ற பிரச்சனை எதிர்க்கட்சி கூட்டணிக்குள்ளேயே வெடித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மறு பக்கம் டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு உள்ளே யார் அதிக தொகுதியில் போட்டியிடுவது போன்ற அரசியல் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும் தெரிகிறது தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிக்குள்ளே மோதல்கள் ஏற்படுவதும் முக்கிய தலைவர்கள் வழக்குகளில் சிக்குவதும் வழக்கமாகி கொண்டு வருகின்றன.

 மேலும் ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதைப் பற்றி அரசியல் விமர்சனங்கள் பல எழுந்துள்ளன. அந்த வகையில் சென்னையில் ஆசிய ஹாக்கி கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில் அதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடுவதை குறித்து கூறினார். அதாவது மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில் தற்போது தமிழகத்தில் நடக்கும் அமலாக்கத்துறை சோதனை மற்றும் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு தரமான பதிலை அளித்ததுடன் தமிழகத்தில் பாஜக போட்டியிடுவதை குறித்து கூறியதுதான் அல்டிமேட்டான பதிலாக இருந்தது. 

அதாவது தமிழகத்தில் கடந்த முறை பாஜக போட்டியிட்ட இடங்களை விடவும் இந்த முறை தமிழகத்தில் போட்டியிடுவதற்கு அதிக இடம் கிடைக்கும் என்றும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் அதிக இடங்களில் போட்டியிடும் என்ற அதிரடியான பதிலை வழங்கினார் . ஏற்கனவே பாரத பிரதமர் மோடி தமிழகத்தில் ராமநாதபுரத்தில் போட்டியிடப் போகிறார் என்ற செய்தி வெளியானது இதனைத் தொடர்ந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் போட்டியிட இருப்பதும் மேலும் தமிழகத்தில் 39 தொகுதிகள் இருக்கும் நிலையில் 15 தொகுதிகளுக்கு மேலாக தொகுதிகளைகேட்டு வாங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளதால் எதிர்க்கட்சியினர் இதை எண்ணி என்னசெய்வதென்ற தெரியாமல் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனவே வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கொள்வதற்கு பாஜக பக்கா பிளான் உடன் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.