கடந்த சில நாட்களாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நீதிமன்ற தீர்ப்பு என்றால் அது செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவின் தீர்ப்பு தான். செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து அமலாக்கத்துறையினர் ஆட்கொணர்வு மனுவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர். மேலும் இந்த வழக்கின் தீர்ப்பில் இரு நீதிபதிகளின் கருத்து மாறுபட்ட நிலையில் இருந்ததால் வழக்கு விசாரணை மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்ட நிலையில் நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அமலாக்க துறையினருக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியான நிலையில் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை கைது செய்த அமலாக்க துறையினரை நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் என செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் . செந்தில் பாலாஜி மனைவி உட்பட அவரது தரப்பில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு மற்றும் அமலாக்கத் துறையினர் மேல்முறையீடு செய்த வழக்கான செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்ற தீர்ப்பு நேற்று வெளிவந்த நிலையில் செந்தில் பாலாஜி மனைவி மற்றும் அவரது தரப்பிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நேற்று வெளியான தீர்ப்பில் செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணையில் இருப்பதால் தற்பொழுது எந்த உத்தரவையும் பிறக்கக் கூடாது என்றும் மேலும் நீதிபதி நிஷா பானு வெளியிட்ட தீர்ப்பான அமலாக்க துறையினர் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டப்படி தவறு என்றும் மேலும் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற தீர்ப்பில் உறுதியாக இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.மேலும் செந்தில் பாலாஜி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் அமலாக்கத் துறையினர் அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிப்பதை உச்சநீதிமன்றமே முடிவு எடுக்கும் என்றும் அதில் நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
எப்படியும் செந்தில் பாலாஜியின் மீது அமலாக்கத் துறையினர் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என அமலாக்கத்துறையினருக்கு எதிராக நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்கள் என்று எதிர்பார்த்த செந்தில் பாலாஜியின் மனைவி மற்றும் அவரது தரப்பிற்கு இந்த தீர்ப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றால் ஏற்கனவே செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அனுப்பப்பட்டது போலவே அமலாக்க துறையினருக்கு இந்த வழக்கு சாதகமாக அமையும். எனவே இந்த வழக்கில் அமலாக்கத்துறையினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என செந்தில் பாலாஜியின் தரப்பு தனது தோல்வியை ஒப்புக்கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளனர்.
செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த செந்தில் பாலாஜியின் மனைவி மற்றும் அவரது தரப்பிற்கு இந்த தீர்ப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில் அடுத்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற பயத்தில் இருந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் சிறையில் செந்தில்பாலாஜியை இதுவரை சென்று அவரது தரப்பினர் பார்த்ததற்கு அவர் நீதிமன்ற தீர்ப்பை முக்கியமாக விசாரித்தது குறிப்பிடத்தக்கது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.