அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை காலம் முடிந்து தற்போது புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக புழல் சிறையில் உள்ள மருத்துவக் கண்காணிப்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு உடல்நிலை சரியான உடன் தனியான அறை ஒதுக்கப்படும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏசி ரூம், கட்டில், மேசை, 55 இன்ச் டிவி மற்றும் புது பாத்திரங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.மேலும் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவ சிறையில் 60க்கும் மேற்பட்ட கைதிகள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதே மருத்துவ சிறையில் தனி அறை ஒன்றும் உள்ளது. அதில் மூன்று பேர் சிகிச்சை பெற்று வருவதாக கூறிவந்த நிலையில் செந்தில் பாலாஜியும் அந்த அறையில் தான் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனால் பிற கைதிகளை செந்தில்பாலாஜி இருக்கும் அறைக்கு அருகில் அவருக்கு தொல்லை தரக்கூடாது என்பதற்காக அனுமதிக்கவில்லை எனவும் தகவல்கள் பரவின.
சிறையில் உள்ள மருத்துவமனையில் மூன்று மருத்துவர்கள் பணியாற்றி வரும் நிலையில் அவர்களின் பரிந்துரைப்படி செந்தில் பாலாஜிக்கு உணவு வழங்கப்படுகிறது .இந்நிலையில் சிறப்பு மருத்துவர்கள் வாரத்தில் ஒருமுறை வந்து சிறையில் இருக்கும் கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் மேலும் அவசர தேவை ஏற்பட்டால் அரசு பொது அரசு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் வருவார்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது .
செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வரும் நிலையில் அவருக்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுவாக சிறையில் இருக்கும் கைதிகளுக்கு குளிப்பதற்கு பொதுவாக ஒரு தொட்டி இருக்கும் அதில் தான் அனைத்து கைதிகளும் குளிக்க வேண்டும் என்ற நிலையில் செந்தில் பாலாஜியும் அதே பொது தொட்டியில் தான் குளிக்க வேண்டும் என்ற நிலையில் அவர் அதனை பயன்படுத்தாமல் குளிப்பதற்கு தனியாக அறை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளது.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆடைகளை துவைப்பதற்கு தனியாக ஆள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர்களுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டும் என்ற வசதியும் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுமட்டுமில்லாமல் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் சிறப்பு உணவுகளாக கேசரி, போண்டா மற்றும் 53 இன்ச் டிவி என அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் விதிமுறைகளை மீறி நட்சத்திர ஹோட்டல் போல செந்தில் பாலாஜிக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அலறியடித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என்றும் மேலும் முதல் வகுப்பு சிறை கைதிகளுக்கு என்ன வசதி வழங்கப்பட்டுள்ளதோ அதுவே செந்தில்பாலாஜிக்கும் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் திமுகவின் முக்கிய அமைச்சர் என்பதால் அவருக்கு சிறப்பாக. எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதன் பின்னணியை விசாரித்த போது அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அவருக்கு உதவி செய்யும் அனைத்து அமைச்சரும் சிக்குவார்கள் என தகவல்கள் வெளிவந்ததால் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இவ்வாறு தானாகவே முன்வந்து விளக்கம் தரும் வகையில் பேட்டி அளித்துள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.