24 special

ஓ வாண்டடாகவே வந்து சிக்குறீங்களா...!? கீதா ஜீவன் விவகாரத்தில் சம்பவம் செய்ய காத்திருக்கும் காவிகள்...!

Annamalai,geetha jeevan
Annamalai,geetha jeevan

தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய அமைச்சரும் மற்றும் கனிமொழி ஆதரவாளருமாக கீதா ஜீவன் இருந்து வருகிறார். அமைச்சர் கீதா ஜீவன் திமுகவின் முக்கிய அமைச்சர் பொறுப்பில் இருந்து வரும் நிலையில் அவ்வப்போது பல சர்ச்சைகளில் சிக்கியதும் உண்டு. சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகளுக்கு வழங்கும் சத்துணவு முட்டையில் அழுகிய முட்டையை வழங்கியதாக கூறி அமைச்சர் கீதா ஜீவன் மீது புகார் எழுந்த நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.  


அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  குழந்தைகளுக்கு அழுகிய  முட்டை வழங்கியது குறித்து அமைச்சர் கீதா ஜீவனை கடுமையாக விமர்சித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை அமைச்சர் கீதா ஜீவன் ஏற்காத நிலையில் நெல்லை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்நிலையில் கீதா ஜீவன் நெல்லை வந்தால் பாஜகவினர் கருப்பு கொடி காட்டுவோம் என்று ஏற்கனவே எச்சரித்த நிலையில் பாஜக செயலாளர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் கீதா ஜீவனுக்கு மகாராணி என்ற நினைப்பா? என்றும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு சர்வாதிகாரி என்ற நினைப்பா ?என்ற கேள்வி எழுப்பினார்.

திமுகவின் முக்கிய அமைச்சரான கீதா ஜீவன் மற்றும் பாஜகவினர் இடையே பிரச்சனைகள் அவ்வப்போது தலைதூக்கி வரும் நிலையில் முதற்கட்டமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணத்தை மேற்கொள்வதற்கு ராமேஸ்வரத்தை தேர்ந்தெடுத்துள்ளார். ராமேஸ்வரத்தில் துவங்க இருக்கும் நடை பயணம் தொடர்ந்து தூத்துக்குடி திருச்செந்தூர் வழியாக நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் தற்போது மணிப்பூர் விவகாரத்தில் பிரதம மந்திரி மோடியின் கடுமையாக சாடி பேசியுள்ளார். 

தனது சொந்தத் தொகுதியிலேயே தண்ணீர் வரவில்லை மற்றும் பல பிரச்சினைகளை மக்கள் எழுப்பும் நிலையில் அதையெல்லாம் கண்டு கொள்ளாத அமைச்சர் கீதா ஜீவன் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கேள்வியை எழுப்பியதனால் பாஜகவினர் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால் என் மண் என் மக்கள் என்ற நடை பயணத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜகவினர் இறங்கி வேலை செய்ய உள்ளதாக தெரிகிறது. மேலும் அமைச்சர் கீதா ஜீவன் தொகுதியில் மக்களுக்கு நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் என்ன என்பதையும் கீதாஜீவன் மீது உள்ள பஞ்சாயத்து என்ன என்பதையும் கேட்டறிந்து அமைச்சர் கீதா ஜீவன் தொகுதியிலேயே அம்பலமாக்க பாஜகவினர் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் முகவர்களின் கூட்டம் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியபோது பாஜகவிற்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்த நிலையில் எதிர்க்கட்சிகள் அனைவரும் இந்தியா என்ற பெயரில் ஒன்றிணைந்து பாஜகவை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்த காத்திருக்கிறோம் என்று கூறினார். 

இது மட்டும் இல்லாமல் மணிப்பூரில் நடந்து வரும் பிரச்சனையை பாஜகவிற்கு எதிராக திருப்பி பாஜக அவர்களுக்கு எதிரானவர்களை அடக்கி வருவதாகவும் மேலும் மணிப்பூர் விவகாரத்தில் எந்த முக்கிய முடிவும் எடுக்கவில்லை என்றும் மணிப்பூர் மாநில முதலமைச்சர் முதற்கொண்டு காவலர்கள் ராணுவம் வரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள் என குற்றச்சாட்டை வைத்தார். 

கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன்  முகவர்கள் கழகத்தில் செயல் வீரர்கள் என்றும் நீங்கள் மனது வைத்தால் தான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை கைப்பற்ற முடியும் என்றும் பேசினார். மணிப்பூர் விவகாரத்தில் அரசியல் பேசுகிறேன் என்ற பெயரில் பிரதமர் மற்றும் பாஜகவை தாக்கி பேசி தற்பொழுது கீதா ஜீவன் அவராகவே வந்து வாண்ட்டாக சிக்கி உள்ளார் என கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன