நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஜோதிமணி குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார் என்னை பாலியல் குற்றவாளி என கூறும் ஜோதிமணியை நான் கையை பிடித்து இழுத்தேனா என கேள்வி எழுப்பினார், இந்த சூழலில் அவர் அருகில் அமர்ந்து இருந்த நாச்சியாள் சுகந்தி ரிஆக்ட் செய்தார் என்ற விமர்சனம் எழுந்த நிலையில் அதற்கு நாச்சியாள் பதில் கொடுத்துள்ளார் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-
திமுக ஆட்சிக்கு வந்த பின்பு வெளியே வராத சமூகநீதி புரட்சியாளர்கள் எல்லாம் இப்போது வெளியே வருகிறார்கள். காரணம் சீமான் ஜோதிமணி குறித்து சொன்னதுக்கு ரியாக்ட் செய்துவிட்டேனாம்.
அதற்கு மகாலட்சுமி டீச்சர் அன்றே சொன்னார் செந்தில்வேல் என்கிறார். எனக்கு சர்டிபிகேட் கொடுக்க செந்தில்வேலுக்கு என்ன பெரிய சமூகநீதி இருக்கிறது என்று தெரியவில்லை.
அப்புறம் அவர்தான் இங்கு யார் எப்படி என்பதற்கு சர்டிபிகேட் கொடுக்கும் ஏஜெண்சியின் தலைவரா? பேரறிவாளன் விடுதலைக்கு பிறகு காங்கிரஸ்காரர்களுக்கு விமர்சிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. ஆனால் தான் ஒரு பெண்ணாக இருப்பதையே அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்டு ஒரு கட்சியின் தலைவரை பாலியல் குற்றவாளி என்று தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதுதான் அரசியல் செயல்பாடா?
இந்த தனிமனித கேள்வி என்ன விளைவை தரும் என்று எதிர்பார்க்காமல் தான் பேசினாரா? இன்று பொங்கும் சமூகநீதியாளர்கள்? எல்லாம் இதே ஜோதிமணியை தம்பி உறவுமுறை இருக்கும் செ.பாலாஜியோடு எல்லாம் தொடர்புபடுத்தி பேசியபோது, அவர்களிடம் சண்டை போட்டதை பார்த்தும் பார்க்காமல் போய்விடுவார்கள்.
அப்புறம் இதுதான் சாக்கு என்று திமுகவை நான் விமர்சித்ததுக்கெல்லாம் பதிலாக புழுதிவாரி இறைக்க சரியான சந்தர்ப்பம் இதிதான் என எண்ணி பேசுபவர்களுக்கு.....ஓடி விடமாட்டேன். களத்தில் நின்று பதில் சொல்வேன். அதுவரை தூற்றுபவர்கள் தூற்றுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.