24 special

அண்ணாமலை சொன்னது நிஜமானது அட்டாக் லேயர் வெளிவந்தது..26 என்ன நடக்க போகிறது !

stalin and annamalai
stalin and annamalai

தமிழக அரசியல் களம் திமுக அரசை மையமாக சுழன்ற நாட்கள் மாறி தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் கொடுக்க அமைச்சர்கள் ஒவ்வொருவராக முன் வருவதும் சிலர் வரம்பு மீறி வார்த்தைகளை விடுவதும் அதிகரித்து இருக்கிறது, இந்த சூழலில் அண்ணாமலை 72 மணி நேரம் திமுக அரசிற்கு கெடு விதித்து இருந்தார்.


இந்த கெடு விவகாரம் தமிழக அரசை நிச்சயம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது, வருடம் வருடம் பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என மாநிலத்தில் ஆட்சியில் உள்ள எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தும், ஏன் தமிழகத்தில் பலருக்கு தமிழக அரசும் பெட்ரோல் டீசல் விலையில் வெகுவான வருமானத்தை வரியாக பெறுகிறது என்பதே தெரியாது.

அப்படி இருக்கையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைந்த நிலையில் மாநில அரசான திமுக அரசும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார், அதோடு நிற்காமல் பெட்ரோல் விலையை குறைக்கவில்லை என்றால் 72 மணி நேரத்தில் தமிழக தலைமை செயலகத்தை முற்றுகை இடுவோம் என தெரிவித்தார்.

இது முதல்வர் முதற்கொண்டு அமைச்சர்கள் வரை அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது, தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தை  எப்படி கையாளுவது என முக்கிய துறை சார்ந்த அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார் இந்த நிலையில் அரசியல் ஆய்வாளர் ஒருவர் கொடுத்த ஐடியாவை தமிழக அரசு செயல்படுத்த போகிறதாம்.

அதாவது வருகின்ற 26-ம் தேதி தமிழகத்திற்கு பிரதமர் வருகை தர இருக்கிறார் எனவே அன்றைய தினம் அண்ணாமலை தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த மாட்டார் அதே நேரத்தில் 27-ம் தேதி நிச்சயம் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் எனவே அதற்கு முன்பே கூட்டணி கட்சியான விசிக கம்யூனிஸ்ட் இன்னும் பிற இயக்கங்களை கொண்டு மத்திய அரசிற்கு எதிராக பெட்ரோல் டீசல் விலையை மேலும் கட்டு படுத்த வேண்டும் என்று ஆரப்பாட்டத்தை நடத்த திமுக அரசு கட்டளை போட்டு இருக்கிறதாம்.

இதனை உடனடியாக செய்து முடிக்க சில கட்சிகளும் தயாராகி இருக்கிறதாம். அதாவது பாஜக நடத்தும் போராட்டம் போன்றே ஒரு போராட்டத்தை நடத்த திமுக கூட்டணி கட்சிகள் தயாராகி இருக்கிறதாம் மேலும் இந்த முறை வலுவாக கூட்டத்தை கூட்டவும் திமுக அரசு தனது கூட்டணிகளுக்கு உத்தரவு போட்டுள்ளதாம்.

அண்ணாமலையை சமாளிக்க இப்படி கூட்டணி கட்சிகளே களத்திற்கு வர கூடிய சூழ் நிலை உண்டாகி இருக்கும் நிலையில் இன்னொரு புறம் தமிழக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் திமுகவிற்கு அண்ணாமலை 72 மணி நேரம் சவால் விடுகிறார் அண்ணாமலை அவர் சொந்த ஊரான கரூரை தாண்ட முடியாது என பன்னீர் செல்வம் எச்சரிக்கை விடுத்தார்.

அட என்ன அமைச்சர் இந்த அளவு தைரியமாக பேசுகிறாரே என வியப்பில் பார்க்க அங்குதான் மற்றொரு உண்மை வெளியாகி இருக்கிறது, சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நபர்கள் இணைந்தார்கள் இதில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நல்ல செல்வாக்கு மிக்க நபர் விரைவில் பாஜகவில் இணைய இருக்கிறாராம் அவருக்கு அமைச்சர் குறித்த அனைத்து விஷயங்களும் தெரியுமாம் ஏன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முன்னணி வார நாளிதழ் விகடன் தமிழகத்தில் அதிக அளவில் கலெக்சன் செய்யும் அமைச்சர் என எம்ஆர்கே பன்னீர் செல்வம் குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

இதை காட்டிலும் பாஜகவில் இணையவுள்ள அந்த முக்கிய நபருக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் குறித்து பல விவகாரங்கள் தெரியும் என்பதால் அவர் பாஜகவில் இணைந்தால் தனது பதவிக்கே ஆபத்து வரலாம் என அமைச்சர் அஞ்சுவதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் திமுகவில் அதிருப்தி என்றால் அதிமுகவில் இணைவார்கள் பெரும்பாலான திமுக அதிமுக மாவட்ட முக்கிய தலைவர்கள் இடையே பின்புறத்தில் டீலிங் இருக்கும் ஆனால் இப்போது அண்ணாமலை விஸ்வரூபம் காரணமாக பாஜகவில் சென்று சேரும் நபர்களால் பல முக்கிய தலைகளுக்கு ஆபத்து என்பதால்தான் அமைச்சர் பன்னீர்செல்வம் அண்ணாமலை மீது ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.இது போன்ற பிண்ணனி செய்திகளை தெரிந்து கொள்ள மறக்காமல் நமது TNNEWS24 டிஜிட்டல் பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.