24 special

"அது குரங்கு பொம்மை சார்" விவாதத்தில் தெரிவித்த கருத்தால் எதிர் கருத்தை எதிர்கொண்ட "ஷாநவாஸ்"!


விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவரும் தமிழக சட்டசபை உறுப்பினருமான  "ஷாநவாஸ்" தனியார் ஊடகத்தில் தெரிவித்த கருத்திற்கு கடும் எதிர்விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார், நேற்றைய தினம் தனியார் ஊடகம் ஒன்றில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் அமைச்சர் ஒருவர் இந்தி மொழி தெரியாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என்று தெரிவித்த கருத்தின் அடிப்படையில் விவாதம் நடைபெற்றது.


இதில் கலந்து கொண்ட அரசியல் விமர்சகர் ஸ்ரீனிவாசன் முதலில் ஒரு கருத்தை தெரிவித்தார் முதலில் உத்திர பிரதேசம் அமைச்சர் சொன்னது என்றதும் அந்த அமைச்சர் பாஜகவை சேர்ந்தவர் என்று பலரும் தவறாக நினைக்கிறார்கள் அவர் பாஜக கூட்டணியை சேர்ந்தவர் அவர் பெயர் சஞ்சய் நிஷாத் என குறிப்பிட்டார் எனவே அவருடைய கருத்தை பாஜக கருத்தாக எடுத்து கொள்ள தேவையில்லை என ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் கொடுத்து ஷாநவாஸ் பாஜக அமைச்சரவையில் இடம்பெற்ற ஒருவரின் கருத்தை முதல்வர் மறுக்காத போது, அவர் மீது நடவடிக்கை எடுக்காத போது அதனை பாஜகவின் குரலாகத்தான் பார்க்கவேண்டும் எனவும், அமைச்சர் ஒருவர் பேசியதற்கு முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பல்வேறு விவாதங்களை முன்வைத்தார்.

இந்த சூழலில் இந்த விவாதத்தை பார்த்த பொது பார்வையாளர் இராமநாதபுரத்தை சேர்ந்த மகேஸ்வரி நமது TNNEWS24க்கு தனது கருத்தை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி இருந்தார் அதில் அவர் குறிப்பிட்ட தகவல்கள் பின்வருமாறு : நேற்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் பேசியது உண்மையில் சிரிப்வை வரவைத்தது.

உத்திர பிரதேசத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற வேறு கட்சியை சேர்ந்த ஒருவர் சொல்லிய கருத்திற்கு பாஜக பொறுப்பேற்க வேண்டுமாம் அவரது மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆவேசமாக கேட்டார் சரி அப்படியே நம்ம தமிழ்நாட்டிற்கு வருவோம், அதே சிறிது நாட்களுக்கு முன்னர், தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ராஜா கண்ணப்பன் அரசு அலுவலர் ஒருவரை சாதியை சொல்லி திட்டினார் என புகார் வந்தபோது.,

இதே "ஷாநவாஸ்"  போன்றோர் ஏன் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் கண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டாரா? பாஜக கூட்டணியில் இடம்பெற்ற ஒரு அமைச்சரின் கருத்தே பாஜக கருத்தாக பார்க்கவேண்டும் என சொல்லும் ஷாநவாஸ், கண்ணப்பன் கருத்தை ஸ்டாலின் கருத்தாக பார்ப்பாரா?

அட அத்தனை ஏன் ஒரு ஒருவார்த்தையாவது இது வரை அது குறித்து பேசி இருப்பாரா? ஆனால் இவர் உத்திர பிரதேச அரசை விமர்சனம் செய்கிறார், உண்மையில் நேற்றைய தினம் ஷாநவாஸ் பேசியது வடிவேல் திரைப்படம் ஒன்றில் அந்த குரங்கு பொம்மை என்ன விலை என கேட்பார். அதற்கு அது கண்ணாடி சார் என அந்த கடை காரர் சொல்லும் கதையாக இருந்தது நேற்றைய தினம் ஷாநவாஸ் விவாதத்தில் பேசியது என கிண்டல் செய்துள்ளார் இராமநாதபுரத்தை சேர்ந்த மகேஸ்வரி.