24 special

சிக்குமா திமுக..? தப்பித்த திமுக அமைச்சர் !


சென்னை : திமுக பேச்சாளர்கள் மட்டுமன்றி திமுக அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே அவதூறாக பேசுவது நாடறிந்த விஷயம். வட்டாட்சியரா கொட்டாட்சியரா என துரைமுருகனும் நாங்கள் போட்ட பிச்சை எனவும் மீடியாக்களை ரெட் லைட் எனவும் பொதுவெளியில் பேசிய ஆர்.எஸ்.பாரதியும் முன்னாள் முதல்வர் எடப்பாடியின் தாயார் குறித்து அவதூறாக பேசிய ராசாவையும் கொண்ட கழகம் திமுக என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.


இதனிடையே கடந்த 2011 ஜூன் 5 அன்று திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தற்போதைய அமைச்சர் பொன்முடி மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக அதிமுக நகரச்செயலாளர் தட்சிணாமூர்த்தி பொன்முடி மீது புகாரளித்திருந்தார். பொன்முடி தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பொன்முடி தரப்பில் 2015ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னர் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திருவாரூர் காவல்நிலையத்தில் பொன்முடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டார். 

இந்த வழக்கு குறித்து பேசிய அமைச்சர் பொன்முடி வட்டாரங்கள் அதிமுகவினர் வீண்பழி சுமத்த முயன்றனர். ஆனால் நீதி வென்றது என கூறிவருகின்றனர். அதிமுகவினர் கூறுகையில் இந்த வழக்கு குறித்து மேல்முறையீடு செய்ய தலைமையிடம் பேசிடவுள்ளோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்போம் என தெரிவித்தனர்.