24 special

சவுக்கு சங்கரரே "சில்லறை" ராஜவேல் கொடுத்த பதிலடி..! பட்டியலே போட்டார்!

Savuku shankar, rajavel nagarajan
Savuku shankar, rajavel nagarajan

சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு சவுக்கு சங்கரை ஆதரிப்பவர்களுக்கும் ராஜவேல் நாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார் இது குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு,


சாவித்ரி கண்ணனுக்கு நீதிமன்ற உத்தரவு பொருந்தும் என்றால் சவுக்குக்கும் நீதிமன்ற உத்தரவு பொருந்தும். நமக்கு பிடிக்காதவர்களை ஒருவர் இழிவுபடுத்துகிறார் என்பதற்காக அவரை நாம் ஆதரிக்க அவசியமில்லை. இங்கு சவுக்கை ஆதரிப்பது மிகவும் ஆபத்தான போக்காக பார்க்கிறேன்.

13 ஆண்டுகள் பிழைப்பூதியம் வாங்கிக்கொண்டு அரசியல் தரகு வேலைகள் பார்த்தவர் சவுக்கு காவல்துறையில் வேண்டாத அதிகாரிகளை வஞ்சம் தீர்க்க சில நேர்மையான அதிகாரிகள் மீதும் அவதூறுகளை அள்ளித்தெளித்தவர் சவுக்கு. காங்கிரஸ் கட்சிக்கும் கனிமொழிக்கும் பிடிஆருக்கும் பிஆர்ஓ வேலை பார்ப்பவர் சவுக்கு.

நீதித்துறை பற்றி அவதுறான வாதங்களை அள்ளித்தெளித்துவிட்டு நீதித்துறையில் தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகளை பேசு பொருளாக்கவே பேசினேன் என திரித்தவர் சவுக்கு. சீமானின் புதுவீட்டுக்கு 2.5 லட்சம் வாடகையை வைகுண்டராஜன் தருகிறார் என பரப்பியவர் சவுக்கு.அடிப்படை ஆதாரங்களே இல்லாமல் தனக்கு பிடிக்காதோரை பற்றியெல்லாம் புரணி பேசிக்கொண்டிருந்த அரசியல் ப்ரோக்கருக்கு இவ்வளவு பொங்கல் அவசியமே இல்லை.

யூடியுபில் இந்த நபரை பார்த்து இவர் தான் புரட்சியாளர் என கதறும் சில்லறைகள் சத்தம் போடாமல் ஒதுங்கி நிற்கவும். ஏன்னா சவுக்கே ஒரு சில்லறைதான் என சவுக்கு சங்கரை ஆதரிக்கும் நபர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பத்திரிகையாளர் ராஜவேல்.