தமிழகத்தில் கடந்த 10 மாத கால ஆட்சி குறித்து திமுக மிக பெரிய அளவில் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று இருப்பதாக ஆளும் கட்சி கருதி இருந்தது, குறிப்பாக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஓர் ஆண்டு நிறைவு பெரும் நாளை "திராவிட நாள்" என்ற பெயரில் கொண்டாட ஆளும் கட்சி தயாராகி வருகிறது.
இந்த சூழலில் தற்போது "தமிழகம் முழுவதும்" பரவலாக நிகழும் மின்வெட்டு தமிழக மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மின் வெட்டு உண்டாகும் என எதிர்கட்சிகள் கடும் எச்சரிக்கை விடுத்த சூழலில் தற்போது அது உண்மையாக மாறிவிட்டதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
பல்வேறு தொழில் நிறுவனங்களும் எங்கு மீண்டும் பழைய காலம் போல் மீண்டும் " மின் வெட்டு" உண்டாகுமோ என்ற அச்சத்தில் உறைந்து இருக்கின்றன, இப்படி மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஒருபுறம் கவலையில் இருக்க மற்றொரு புறம் ஒரு குழு நேரடியாக களத்தில் இறங்கி பாடல் வரிகளை மாற்றி பதிலடி கொடுத்துள்ளது.
சங்கீத ஸ்வரங்கள் என்ற பாடலை.. இங்கே மின்வெட்டு அங்கே இருக்கா? இல்லை உருட்டா என பாடல் பாடியுள்ளனர், இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரலாகி வருகிறது, அதே நேரத்தில் இந்த பாடல் தற்போது ஆளும் கட்சியை சேர்ந்த நபர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிதான் என திமுகவினர் பிரச்சாரம் செய்து வந்த நேரத்தில் ஆட்சிக்கு வந்து "10 மாதத்தில்" உண்டான மின் தடையால் எங்கே அந்த கனவு கலைந்து விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறதாம் ஆளும் தரப்பு. இணையத்தில் வைரலாகும் ட்ரோல் பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.