24 special

பெரியாரிஸ்டுகளுக்கு சோபனா ரவி கொடுத்த பெரிய அடி...

periyar,  sobana
periyar, sobana

திராவிட முன்னேற்றக் கழகம் பெரியாரின் இயக்கமாகவும், எதற்கெடுத்தாலும் பெரியார் இதைக் கூறினார், அதை கூறினார் என்று பல கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி வருவார்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி சனாதன தர்மத்தை எதிர்க்க கூடாது ஒழிக்கத்தான் வேண்டும் என்றும் கொடிய நோய்களோடு சனாதன தர்மத்தை ஒப்பிட்டு ஒழித்தே தீருவேன் என்ற சபதம் இட்டார். ஆனால் இதற்கு இன்றளவும் நீதிமன்ற வழக்குகளை சந்தித்து வரும் அமைச்சர் உதயநிதி தற்பொழுது பாட்னா உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்ற சம்மனும் உதயநிதிக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தன் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு அதற்குரிய பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டாலும் ஏதேனும் கடவுள் கருத்தை முன் வைத்தாலும் அவர்களை திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் சங்கிகள் என்று அழைக்கின்றனர். இந்த நிலையில் தற்பொழுது இந்த சங்கீகள் குறித்த பேச்சு சமூக வலைதளத்தில் விவாத பொருளாக மாறி உள்ளது. 


மேலும் சங்கி குறித்த கேள்வியை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனிடம் பத்திரிகையாளர்களும் முன்வைத்தனர் அதற்கு வானதி சீனிவாசனும், தங்கள் கட்சிக்கு எதிராக கருத்து உள்ளவர்கள் இதனை இழிவு படுத்துவதற்காக பயன்படுத்துகின்றனர் மேலும்! சங்கி என்றால் நாட்டை நேசிக்கும் நாட்டின் நலனில் சமரசம் செய்து கொள்ளாத இந்தியர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சங்கி என்று அழைக்கலாம் என்றால் சங்கி என்ற பெயரால் எங்களுக்கு மகிழ்ச்சியே என கூறினார். இவரின் இந்த புதிய விளக்கம் இணையங்களில் வைரலானது இதனை அடுத்து சமூக வலைத்தளத்தில் சங்கி என்ற வார்த்தை விவாத பொருளாக மாறியது.  இந்த நிலையில் தற்பொழுது, எழுத்தாளர் ஆன ஷோபனா ரவி அவர்கள் தனது எக்ஸ் வலையதள பக்கத்தில், உன் தெய்வங்களும் தேசமும் உனக்கு எல்லாவற்றையும் விட முக்கியமா? ஓ அப்படியானால் நீ சங்கி!” “உன் தெய்வங்களை நிந்தித்தால் நீ வெளிப்படையாக எதிர்ப்பாயா? ஓ அப்படியானால் நீ சங்கி!”“நீ ப்ராமண வகுப்பில் பிறந்தும் இன்னும் உன்னை வளர்த்து ஆளாக்கிய மூதாதையர் மீது அபாண்டமாகப் பழி சுமத்தாமல் மரியாதையாகப் பேசிக் கொண்டிருக்கிறாயா ? ஓ அப்படியானால் நீ சங்கி!”

“நீ ப்ராமண வகுப்பில் பிறந்தும் இன்னும் உன்னை வளர்த்து ஆளாக்கிய மூதாதையர் மீது அபாண்டமாகப் பழி சுமத்தாமல் மரியாதையாகப் பேசிக் கொண்டிருக்கிறாயா ? ஹிந்தி சமஸ்கிருத மொழிகளின் வளத்தை ரசித்து அதைப் பிறருடன் பகிர்ந்து கொள்வாயா?  உனக்குத் தெரிந்த ராமாயண மஹாபாரதக் கதைகளைப் பொது இடங்களில் குறிப்பிடுகிறாயா? ஓ அப்படியானால் நீ சங்கி! ஆசாமிகளுக்காக உன் சாமியை விட்டுக் கொடுக்கமாட்டாயா? ஓ அப்படியானால் நீ சங்கி!  பஜனை கோஷ்டியில் பாடிக்கொண்டு போகிறாயா? ஓ அப்படியானால் நீ சங்கி! கர்நாடக சங்கீதத்தை பக்தியோடு பாடுகிறாயா? ஓ அப்படியானால் நீ சங்கி! அநியாயமாகக் கைவிட்டுப் போன  பழம்பெரும்  கோயில்களை மீட்டெடுக்க விழைகிறாயா? ஓ அப்படியானால் நீ சங்கி! கோயில் சிலைகள் களவு போவதைக் கேள்விப்பட்டுப் பதைபதைக்கிறாயா? ஓ அப்படியானால் நீ சங்கி! தேசம் முன்னேறுவதை எண்ணி சந்தோஷம் கொள்கிறாயா?

ஓ அப்படியானால் நீ சங்கி! சைனாவையும் பாகிஸ்தானையும்   உயர்த்திப் பேசுவோரின் போக்கைக் கண்டிக்கிறாயா?  ஓ அப்படியானால் நீ சங்கி! தேசச் செல்வத்தைக் கொள்ளையடிக்கும் கும்பலுக்கு ஜாலரா அடிக்காமல் விலகி இருக்கிறாயா? ஓ நீ சங்கி! சத்தியத்தையும் தர்மத்தையும் அடிநாதமாகக் கொண்டிருக்கிறாயா? ஓ அப்படியானால் நீ சங்கி! பிற மதங்களின் கொள்கைகளையும் போக்கையும் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொண்டு பேசுகிறாயா? ஓ அப்படியானால் நீ சங்கி! உனக்கு நீ உண்மையாக இருந்து மனத்தில் பட்டதை  வெளிப்படையாகச் சொல்கிறாயா? ஓ! அப்படியானால் நீ சங்கியே தான்! என சங்கி என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்களை தெரிவித்து பெரியாரிஸ்டுகளுக்கு பலத்த அடியை கொடுத்துள்ளார்.