தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது மத்திய மாநில அரசுகளின் கடமை மேலும் எந்தெந்த நபர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அறிக்கை கொடுப்பது என்பது உளவு அமைப்புகளின் கடமை.
அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் சிலரது செயல்பாடுகள் அவர்களது செயல்பாடுகளுக்கு கிடைத்த எதிர்வினை அடிப்படையில் சில முக்கிய தகவல்கள் காவல்துறை தரப்பில் பகிரபட்டுள்ளதாக கூறப்படுகிறது, ஒன்று தமிழகத்தை சேர்ந்த சில அரசியல்வாதிகள் குறிப்பாக பாஜகவிற்கு எதிர் நிலைப்பாடு கொண்ட அரசியல்வாதிகள் தமிழகத்தை தாண்டி வெளியே சென்றால் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறதாம்.
இதற்கு உதாரணமாக கடந்த மாதம் 24 -ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு ஏற்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டனர், கடந்த மாதம் 24 -ம் தேதி சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற திருமாவளவன், சர்ஜாப்பூர் பகுதியில் நடைபெற்ற அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் முக்கிய விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களும் கட்சி வேறுபாடு இன்றி அம்பேத்கர் விழா என்பதால் கலந்து கொண்டனர்,மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ஏ. நாராயணசாமி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர், அப்போது நிகழ்ச்சியில் பலரும் அம்பேத்கரை புகழ்ந்து பேசும் போது திருமாவளவன் திடீர் என பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார்.
அதாவது அம்பேத்கர் தான் எப்போதும் ஹீரோ. அந்த காலத்தில் அவருக்கு வில்லனாக இருந்தவர் காந்தி. இந்த காலத்தில் வில்லனாக இருப்பவர் பிரதமர் மோடி” என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் விமர்சித்து பேசினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பை உண்டாக்கியது, மேடையின் கீழே இருந்து எதிர்ப்பு குரல் எழுந்தது, மோடி வந்த பிறகுதான் நாங்கள் சாதி வேறுபாடுகளை கடந்து ஒற்றுமையாக இருக்கிறோம்அது உங்களுக்கு பிடிக்கவில்லையா என கண்டனங்கள் எழுந்தன.
அப்போது படாபல் சீனிவாசன் என்பவர் மைக்கை பிடித்து மோடி இந்தியாவின் ஹீரோ அவரை விமர்சனம் செய்வது தவறுசார் என திருமாவளவனுக்கு பதிலடி கொடுக்க அந்த மேடையில் இருந்து திருமாவளவன் வெளியேறினார் அவரை அவரது கட்சி நிர்வாகிகள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர், சிறிது நேரம் தாண்டி இருந்தால் கூட மேடையின் கீழே இருந்த தொண்டர்கள் மேடையின் மேலே ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கணித்தே திருமாவளவன் வெளியேறியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் ஒன்றே தமிழகத்தை தாண்டி பிரதமரை விமர்சனம் செய்தால் சொந்த சமுதாய மக்களிடம் இருந்தே தப்பிக்கும் நிலைதான் என்பதை உணர்த்தியுள்ளது, இது ஒரு புறம் என்றால் தமிழகத்தை சேர்ந்த ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பி. எஸ். ஓ பாதுகாப்பு அளிக்கப்படும் 20 முக்கிய நபர்களுக்கு காவல்துறை தரப்பில் சில வழிமுறைகள் கூறப்பட்டு இருக்கிறதாம்.
வெளி மாநிலம் செல்லும் போது பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் குறித்து தவறாக பேச வேண்டாம் குறிப்பாக பாஜக செல்வாக்கு உள்ள மாநிலங்கள் பகுதிகளுக்கு சென்றால் தவிர்க்கும்படி அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டு உள்ளதாம், மாநிலம் கடந்து தமிழக காவல்துறையால் தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் உள்ள சிரமம் ஒரு புறம் என்றால், பிரதமர் மோடியை பாஜகவினரை தாண்டி பொது மக்களும் நேசிக்க தொடங்கி இருப்பதால் அவரை நோக்கி வைக்கும் கடுமையான விமர்சனங்களை பொது மக்களால் ஏற்று கொள்ளாமல் ஒரு வேலை மோதல் உண்டாகலாம் என்பதால் இது போன்ற முன்னெச்சரிக்கை அறிவுறுத்தலை தமிழக உளவு அமைப்புகள் கொடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் பிரதமர் மோடியை தமிழகத்தில் கால் வைக்க விடமாட்டோம் என போராட்டம் நடத்தி வந்த அரசியல்கட்சி தலைவர்கள் இப்போது தமிழகத்தை தாண்டி கால் வைக்க முடியாத நிலை உண்டாகி இருப்பது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.