புதுதில்லி : தேசத்துரோக வழக்குகள் அப்பாவிகள் பாதிக்கபப்டும் வகையில் தவறாக பயன்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குரல்கொடுத்து வருகின்றனர். இதுதொடர்பான பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் இந்த வழக்கில் மத்திய அரசுக்கு காலக்கெடு விதித்துள்ளது.
தேசத்துரோக குற்றத்தை கையாளும் இந்திய தண்டனைச்சட்டம் 124ஏ வின் அரசியலமைப்பின் செல்லுபடியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட மனுக்கள் மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் முன்வந்தது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா நீதியரசர்கள் ஹிமா கோஹ்லி மற்றும் சூர்யகாந்த் கொண்ட மூன்றுபேர் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் பிரபல காங்கிரஸ் வழக்கறிஞரான கபில்சிபல் ஆஜரானார்.
இந்த வழக்கை எதிர்கொண்ட நீதிபதிகள் மனுதாரர்கள் மற்றும் மத்திய அரசிடம் வருகிற மே 7ஆம் தேதிக்குள் தங்களது வாதங்களை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றவும் பரிந்துரை செய்தது. மேலும் மே 9க்குள் மத்திய அரசு தேசத்துரோக வழக்கின் அரசியல்சாசன நிலைப்பாட்டை குறித்து எதிர் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் 1962 பிஹார் மாநில வழக்கை நினைவுகூர்ந்தார். எந்த ஒரு பெரிய அமர்வுக்கும் வழக்கை அனுப்பவேண்டியதில்லை என கூறியதோடு டில்லி எம்பியான நவநீத் ராணா மற்றும் அவரது கணவரும் சட்டமன்ற உறுப்பினருமான ராணா ஆகிய இருவர் மீதும் தேசத்துரோக வழக்கு மஹாராஷ்டிரா அரசால் தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் வாதிட்டார்.
மேலும் 124ஏ சட்டத்தை தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க வழிமுறைகள் வகுக்கப்படவேண்டும் எனவும் கூறினார். வாதங்களை கேட்டறிந்த அமர்வு வழக்கின் வாதங்களை முழுமையாக கேட்டறிந்த பின்னரே பெரிய அமர்வுக்கு மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் மே 10 அன்று வாதங்களை கேட்கவிருப்பதாகவும் கூறி வழக்கை தள்ளிவைத்துள்ளது.