பல ஆண்டு காலம் திமுகவில் இருக்கேன் ஆனா இப்ப வந்தவனுக்கு எல்லாம் பொறுப்பு கொடுக்கிற தேர்தல் நேரத்தில் குவாட்டாரும்,500 ரூபாய் பணமும் கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? உன் சாதி பாசத்தை வேறு எங்காவது வைத்து கொள் என அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அப்பாவி உடன் பிறப்பு கொந்தளித்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் திமுக கட்டிவைத்த சமூக நீதி கட்சி என்ற பிம்பத்தை அடியோடு உடைத்து எடுத்து இருக்கிறது.அதிலும் நான் பக்கா திமுக காரன் ஆனா எங்களை இப்ப மதிப்பதே இல்லை எல்லாம் ஜாதி தான் என உடன்பிறப்பு செய்தியாளர்கள் மத்தியில் கொந்தளித்த சம்பவம் நாடு முழுவதும் பரவ தொடங்கி இருக்கிறது.திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியம் சார்பில் 384 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த குடியிருப்பில் ஆய்வு செய்வதற்காக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் மேயர் தினேஷ்குமார் சென்றனர்.
இந்த நிலையில் பாரதி நகர் பகுதியை சேர்ந்த தி.மு.க.வினர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் திடீரென அங்கு திரண்டுஇந்த பகுதியில் 40 வருட காலமாக கட்சியில் இருக்கின்றேன்.ஒரு உறுப்பினர் கார்டு கூட தர மறுக்கிறார்கள், இந்த பகுதியில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை பார்வையிடுவதற்கு அமைச்சர் வருவது குறித்த தங்களைப் போன்ற கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை, கட்சிக் கொடியும் கட்டவில்லை எனவும் கூறி திடீரென 20க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர்கள தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறைஅமைச்சர் மு.பெ. சாமிநாதன், மேயர் தினேஷ்குமார் ஆகியோரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில்திருப்பூர் மாநகரம் வடக்கு தி.மு.க. செயலாளரும் திருப்பூர் மாநகராட்சி மேயருமான தினேஷ்குமார் கட்சி நிர்வாகிகளை சமாதானம் செய்ய முற்பட்டபோது நேற்று மாற்றுக் கட்சியில் இருந்து தி.மு.க.வில் சேர்ந்த நபர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது.
40 ஆண்டு காலமாக கட்சிக்காக உழைத்த எங்களுக்கு உறுப்பினர் அட்டை மறுக்கப்படுகிறது.என்ன குவாட்டர் கோழி பிரியாணி கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவோம் என்ற நினைப்பா எனவும் பாதிக்கப்பட்ட திமுக உறுப்பினர் ஆவேசத்துடன் கூறியதால் திமுக நிர்வாகிகள் சமாதானம் செய்து வைத்துவிட்டு வேகமாக காரில் புறப்பட்டு சென்றார்.இதன் காரணமாக அமைச்சர் சிறிது நேரம் வெளியே வராமல் உள்ளே இருந்தார்... தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் திமுக என்றால் அது ஜாதிக்கு எதிரான கட்சி, திமுகவின் அடிமட்ட தொண்டர்களுக்கு மதிப்பு அளிக்கும் கட்சி என முதல்வர் ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை பக்கம் பக்கமாக சமூக நீதி சமூக நீதி என பேசிவந்த நிலையில்.திமுகவின் நீண்ட கால நபரே அமைச்சர் முன்பு கட்சியில் என்ன நடக்கிறது என்பதை போட்டு உடைத்து இருப்பதன் மூலம் கொங்கு மண்டலத்தை கைப்பற்ற வேண்டும் என்ற திமுக கனவு கனவாக போய்விட்டது.அடுத்த பதிவில் அதிமுகவை 10 இடங்களில் பின்னுக்கு தள்ளும் பாஜக கூட்டணி ரகசிய சர்வே முடிவுகள் சொல்வது என்ன? விரிவாக பார்க்கலாம் மறக்காமல் tnnews24 பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.