நடிகர் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாள் இன்று. தனது சிறு வயது முதல் நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர் ஆரம்ப கால பருவத்தில் நாடகத்தின் மூலம் தன்னை தானே செதுக்கிக் கொண்டு சினிமாவில் நடிக்க ஈடுபடுத்தி, 1952 ம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த அவர் நடித்த முதல் படத்திலேயே அவரது நடிப்புக்கு மக்கள் பெரும் வரவேற்பு அளித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். தொடர்ந்து அவர் மலையாளம், கன்னடா, தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடிக்க தொடங்கினார் சிவாஜி கணேசன். மொத்தமாக 300க்கும் மேற்பட்ட இந்திய சினிமாவில் நடித்துள்ளார். 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் ஆவார். நல்ல கட்டு குரல்களுடன், உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, காதா பாத்திரத்திற்கு ஏற்பார் போல் நடிப்பை வெளிப்படுத்துவார். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று மக்களால் பெயர் வழங்கப்பட்டது. அக்காலத்தில், தேசத் தலைவர்களின் பத்திரங்களை ஏற்றுத் திறமையை
திறம்பட நடித்த முக்கிய நடிகர்களுள் ஒருவர் சிவாஜி கணேசன். ‘இராஜராஜ சோழன்’ மற்றும் ‘கப்பலோட்டிய தமிழன்’ ஆகிய திரைப்படங்களே இதற்கு சான்றாகும். பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்றிருந்தார்.நடிப்பு மட்டுமின்றி, அரசியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட சிவாஜி கணேசன் 1955 வரை திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1961ல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரானார். பின்னர், கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 1987ல் கட்சியை விட்டு விலகி, ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அப்போது கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள மாலை நேரத்தில் சென்றிந்தார், எனினும் அங்கு மைக்செட் அம்மைக்கும் நபர் வர வில்லை. காரணம் கட்சி தலைவர்கள் எப்போதும் கூட்டத்திற்கு கால தாமதமாக வருவார்கள், அதுபோல் உங்களை எண்ணினேன் என்ற அவர் தெரிவித்தார். அந்த காலத்தில் அரசியலை சிவாஜி கணேசன் சினிமா போன்றும், நாடகம் போன்றும் எண்ணியதால் அவருக்கு திரையில் வந்த ஓட்டு அரசியலில் கால் ஊன முடியவில்லை.
அவரது நண்பரான எம்ஜிஆர்-க்கு மக்கள் அரசியலில் ஆதரவு அளித்தனர் ஆனால் சிவாஜிக்கு வாய்ப்பு எட்டப்படவில்லை. ஆகவே, தனது இறுதிக்காலத்தில் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.1 அக்டோபர் 1928 ம் ஆண்டு விழுப்புரத்தில் பிறந்த இவர், சுவாச பிரச்சனை காரணமாக ஜூலை 21, 2001 ஆம் ஆண்டு தனது 74வது வயதில் மரணமடைந்தார். இருப்பினும் தற்போது தமிழ் சினிமாவில் ரஜினி, கமல்ஹாசன் போன்று அப்போது நடிகர் சிவாஜி கணேசன் சினிமா வாழ்க்கையில் இவருக்கென்று ரசிகர் பட்டாளம் பெரும் அளவில் இருந்தனர். இவர் மறைந்தாலும் மக்கள் மனதில் இன்னும் இவர் மறையவில்லை என்று தான் கூற வேண்டும். இன்று சிவாஜி கனேசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் மலர் தூவி மரியாதையை செலுத்தி வருகின்றனர்.