Cinema

"வெந்து தணிந்தது காடு பிக் பாஸ்க்கு வணக்கத்த போடு"!..... கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டில்?

kamal , suresh
kamal , suresh

இன்று பிரமாண்டமாக விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு பிக் பாஸ் சீசன் 7 தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல்ஹாசன் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளார். கடந்த மாதம் பிக் பாஸ் சீசன் 7 தொடங்க இருப்பதற்கான முன்னோட்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உண்டாக்கினர். அந்த வகையில் இன்று முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகின்ற டிவி சேனல் TRP எதிரே வைக்க போகிறது, என்றெண்ண கூறலாம் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. 2017ல் முதல் நிகழ்ச்சி தொடங்கியது. ஆரம்ப காலகட்டத்தில் சின்னத்திரை பட்டாளங்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் பலர் பங்கேற்று 100 நாட்களுக்கு மேல் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சுவரசத்திற்கு பஞ்சம் இருக்காது.


சென்னை ஈவிபி பிலிம்சிட்டியில் இந்த முறை இரண்டு வீடுகளை கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் என தகவல் கசிந்துள்ளன. இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் இரண்டு வீடுகளில் போட்டி நடைபெறும் அதனை தற்போது தமிழ் நிகழ்ச்சி பின்பற்றுவதாக கருத்துகள் எழுந்துள்ளன.இன்று தொடங்க இருக்கும் நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நேற்றே முடிவடைந்த நிலையில் இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பெயர் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.. நேற்று ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் வனிதா விஜயகுமார் கலந்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவரது மகள்  ஜோவிகா இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை உறுதி செய்தார். மேலும், பிக் பாஸ் வீட்டிற்குள் 18 பேர் பங்கேற்பதாகவும் அவர்களது பெயர்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இவர்கள் தான் நிச்சயம் பங்கேற்பார்கள் என்று சில நட்சத்திரங்களின் பெயர் சமூக  தளத்தில் உலா வந்தன. அதாவது, நடிகர் அப்பாஸ், தர்ஷா குப்தா, விஜே பார்வதி உள்ளிட்டோர் பங்கேற்பதாக தகவல் வந்தன ஆனால் இவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது ரசிகர்களிடம்  கவலையை ஏற்படுத்தியுள்ளது.  

சரி யாரு தான் இந்த 7வது சீசனில் பங்கேற்க போகிறார் முதலில் அதை சொல்லு என நீங்கள் கூறுவது புரிகிறது. இதில் ஆண் போட்டியாளர்கள் 9 பேரும், பெண் போட்டியாளர்கள் 9 பேரும் மொத்தம் 18 பேர்  இதில் கலந்துகொள்கின்றனர். அவர்கள், 1. விஜய் வர்மா 2. சரவண விக்ரம் 3. கூல் சுரேஷ் 4. யுகேந்திரன் 5. நிக்சன் 6. பிரதீப் ஆண்டனி 7. மணி சந்திரா 8. விஷ்ணு விஜய் 9. பாவா செல்லதுரை  10. ஐஷு 11. விசித்ரா 12. ரவீனா 13. பூர்ணிமா ரவி 14. ஜோவிகா 15. வினுஷா தேவி 16. அக்‌ஷயா உதயகுமார் 17 . மாயா கிருஷ்ணன் 18 . அனன்யா ராவ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர் . இதில் வைலட் கார்டு மூலம் யார் பாதியில் உள்ளே வருவார் என தெரியவில்லை. பங்கேற்பவர்கள் அனைவர்க்கும் உலக நாயகன் கமலஹாசன் பரிசுகளை கொடுத்து வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். கூல் சுரேஷ் இதுநாள் வரை சினிமா படத்தை பார்த்து விட்டு யூடியூப்பர்களுக்கு கண்டெண்ட் கொடுத்து வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தினமும் ஒரு கண்டெண்ட்  தருவார் அதில் மாற்றமில்லை என ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் இதில் கடைசி வரை இந்த வீட்டில் யார் சண்டை சச்சரவுகளை பொறுத்திருந்து வெற்றி பெறுவார் என காத்திருப்போம். #திருவிழா இன்று முதல் தொடங்குகிறது என சமூக தளத்தில் கமெண்டை பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.