24 special

சிக்கிய சிவகார்த்திகேயன், கமல்...! மொத்தமா வச்சு செய்யப்போறாங்களாம்...

sivakarthikeyan,kamal
sivakarthikeyan,kamal

கமலஹாசன் தமிழ் சினிமாவின் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர், திரைத்துறையில் அதிக செல்வாக்கையும் ரசிகர்கள் பட்டாளத்தையும் புகழையும் கொண்டுள்ள கமலஹாசன் 2018ல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார் அதனை தொடர்ந்து தனது கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என சின்ன மற்றும் கொடி என அனைத்தையும் அறிவித்த கமலஹாசன் அன்றிலிருந்து தற்போது பகுதி நேர அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார் ஏனென்றால் எவரேனும் சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்தால் அவர் முதலில் தனது சினிமா பணியை விட்டுவிட்டு அதிலிருந்து மொத்தமும் வெளியே வந்து அரசியல் செய்ய ஆரம்பிப்பார்கள் ஆனால் முதல் முறையாக கமலஹாசன் நடிப்பு எனது பணி அரசியல் எனது சேவை என இரண்டையும் பிரித்து ஒரு பக்கம் நடித்துக் கொண்டு மறுபக்கம் அரசியலையும் மேற்கொண்டு வருகிறார். 


அப்படி ஆரம்பத்தில் கமலஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய போது தன்னிச்சையாகவும் எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்ற வகையிலே தனது பேச்சுக்களை முன்வைத்து எந்த கட்சியுடனும் சாராமல் தேர்தலில் ஈடுபட்டார். அதே சமயத்தில் தன் சினிமா துறையையும் அவர் கைவிடவில்லை ஒரு பக்கம் படங்கள் மற்றொரு பக்கம் தனியா தொலைக்காட்சியின் பிரபலமான ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் தனது பணியை ஆரம்பித்தார் கமலஹாசன். இந்த நிலையில் கமலஹாசன் தனது அரசியல் பயணத்தை வேறு விதமாக மாற்றி உள்ளார் முன்பு தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்ற முடிவை எடுத்த கமலஹாசன் தற்போது அதனை மாற்றி திமுக உடன் கூட்டணியில் இணைவதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது இதற்கு சான்றுகளாக 2018 - 19 இல் கமலஹாசன் பேசிய பேச்சுக்கள் மற்றும் சமூக வலைதளங்களின் முன்வைத்த கருத்துக்கள் அனைத்தையும் இன்று போய் பார்த்தால் முற்றிலும் வேறுபட்டதாகவும் வேறுவிதமான பேச்சு இருப்பதையும் பார்க்க முடிகிறது. 

இருப்பினும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயுத்த வேலைகளிலும் கமலஹாசன் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் கமலஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில்  ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. அதோடு சமீபத்தில் இப்படத்திற்கான டீசரை இப்பட குழு வெளியிட்டதை அடுத்து ஆங்காங்கே இப்படத்திற்கு எதிர்ப்புகளும் கண்டனங்களும் முன் வைக்கப்படுகிறது. அதாவது இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், பட்டியலின மக்கள் இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும் சில தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

மேலும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின தமிழக முழுவதும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி கொண்டு வரும் அமரன் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதுமட்டுமின்றி இந்த படத்தில் பட்டின மக்கள் இழிவு படுத்தப்படுவதான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும் சில வதந்திகள் எழுந்தை அடுத்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் விடுதலை தமிழ் பொய்கை அமைப்பினர் காந்தி பூங்கா அருகில் கமல் மற்றும் சிவகார்த்திகேயனின் உருவப் புகைப்படங்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு இருவரின் உருவப் புகைப்படங்களை கிழித்து காலால் மிதித்து அவர்களின் உருவ பொம்மைகளையும் எரிக்க முற்பட்டுள்ளனர் இதனை அருகில் இருந்த காவல் அதிகாரிகள் தடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். மேலும் இசுலாமிய அமைப்புகள் வேறு படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர், அதுவும் வேறு படக்குழுவிற்க்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கமலஹாசன் 2019 - 20 ஆண்டுகளில் முன்வைத்த கருத்துக்கும் இப்பொழுது அவர் பேசும் கருத்திருக்கும் அதிக வேறுபாடு இருப்பதாக சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டப்பட்டு பேசு பொருளாக மாறி உள்ளது. அதே சமயத்தில் சிவகார்த்திகேயன் குறித்த சில சர்ச்சைகளும் கடந்து சில மாதங்களாக வைரலாக பேசப்படுகிற நிலையில் இருவரும் சம்பந்தப்பட்ட ஓர் இடத்தில் இருவருக்கும் எதிரான போராட்டங்கள் ஆங்காங்கே வெடித்திருப்பது இரு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.