
Trending
24 special
அதிமுக முன்னாள் எம்எல்ஏ கந்தன் மீது மருமகள் சொன்ன அந்த புகார்.. வெளிவரும் உண்மைகள்....
- by Web team
- February 25, 2024

கடந்த மாதத்தில் பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் இருவரும் தனது வீட்டில் ஒரு சிறுமியை வேலைக்காக அழைத்து கொடுமை செய்த புகார் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டின் சூழ்நிலை காரணமாக தன் வீட்டை விட்டு திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் இருவரும் வசித்து வரும் வீட்டிற்கு பணி பெண்ணாக அமர்த்தப்படுகிறாள். ஆனால் அவர்கள் அந்த பட்டியலினச் சிறுமியை மிகவும் துன்புறுத்தி வேலை வாங்கியதோடு வன்முறை தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்சி எஸ்டி உட்பட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கருணாநிதி மகன் மற்றும் மருமகள் இருவரையும் கைது செய்ய காவல்துறையினர் முற்படும்பொழுது இருவரும் தலைமறைவாகி பிறகு மூன்று தனிப்படைகளை அமைத்து ஆந்திரா எல்லையில் இருவரையும் கைது செய்தனர். இது ஆளும் தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த செய்தி தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத்திலும் எதிரொலித்து பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் சோழிங்கநல்லூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபி கந்தன் மீது அவரது மருமகள் அதிரடியான புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது திருமணத்தின் போது 100 சவரன் வரதட்சணையை அதிமுக முன்னாள் எம்எல்ஏ கந்தன் மற்றும் அவரது மகன் கேட்டதாகவும் 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்த பிறகு 600 சவரன் தங்கம் 1.65 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு கார்கள் 20 கிலோ வெள்ளி ஆகியவற்றை பெண் வீட்டார் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது மேலும் 400 சவரன் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கேபி கந்தனின் மருமகள் ஸ்ருதி பிரியதர்ஷினி ஆவடிக்காவல் ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அழைத்துள்ளார். மேலும் தனது மகளை கே பி கந்தன் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியதாகவும் தனது மகளை பெண் குழந்தை பிறந்த பிறகு 2021ல் கந்தன் குடும்பத்தினர் வீட்டை விட்டு வரட்டி விட்டதாகவும் ஸ்ருதி பிரியதர்ஷினி தந்தை தெரிவித்துள்ளார்.
அதோடு என் மகளின் வாழ்க்கைக்காக அவர்களிடம் நான் நேரில் சென்று பேசும் பொழுது மேலும் 500 சவரன் 10 கோடி ரூபாய் தர வேண்டும் என்று கே பி கந்தன் என்னிடம் கேட்கிறார். அதுமட்டுமின்றி என் மகள் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த பொழுது சக நண்பர்களுடன் மருத்துவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தவறாக சித்தரித்து அவதூறு பரப்புகிறார்கள் இதனால் கேபி கந்தன் அவரது மனைவி மகன் கே பி கே சதீஷ்குமார் மற்றும் மகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை வேண்டும் என்று ஸ்ருதி பிரியதர்ஷினியின் தந்தை கோரிக்கையை முன் வைத்துள்ளார். இதுகுறித்து ஸ்ருதி பிரியதர்ஷினி பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேட்டி கொடுத்தார் இவை அனைத்துமே தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை அடுத்து கந்தன் குடும்பத்தின் தரப்பிலும் கந்தன் மகன் சதீஷ்குமார் இதற்கு எதிரான புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த 2022 ஆம் ஆண்டிலேயே விவாகரத்திற்கு நீதிமன்றத்தில் வழக்கு பதிந்ததாகவும் அந்த வழக்கு தற்போது கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது இந்த விசாரணைகளுக்கு நானும் ஆஜராகி கொண்டு தான் வருகிறேன் அவர்களும் ஆஜராகி கொண்டு தான் வருகிறார், இப்படி இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது ஒரு புகாரை இவர் முன் வைத்துள்ளார். இந்த தகவல் முற்றிலும் பொய்யானது! ஏற்கனவே ஒரு வழக்கு நீதிமன்றத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது இப்படி திடீரென காவல் நிலையத்தில் மற்றுமொரு புகாரை இவர்கள் கொடுத்ததில் இருந்தே தெரிகிறது தூண்டுதலின் காரணமாக கொடுக்கிறார்கள் என்று சதீஷ்குமார் டிஜிபி வளாகத்தில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
அதோடு இவர்களின் விவகாரத்திற்கு முன்பாக திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் செய்த விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்ட உள்ளனர். இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கந்தன் குடும்பத்தின் மீது அவரது மருமகள் இப்படி ஒரு புகாரை முன் வைத்துள்ளது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது அது மட்டும் இன்றி இதில் குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்கும் தீவிரத்திலும் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாட்டுல இப்படி ஒரு விநாயகரா... வேற லெவல்...
February 25, 2024Related News
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.
Don’t worry, we don’t spam