லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சிறிய கட்சிகள் தொடங்கி சினிமா நட்சத்திரங்கள் வரை தங்களது ஆதரவை அரசியல் சார்ந்த கட்சிகளுக்கு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சினிமா பிரமபலமான நடிங்கர் சிவகுமார் திமுக கூட்டணி கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக நேரடியாக கடிதம் எழுதியுள்ளார். இதற்கு காரணம் சூர்யா தான் என்றும் பேசப்படுகிறது.திமுக கூட்டணியில் பயணிக்கும் திருமாவானவனுக்கு இந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளை திமுக கொடுத்துள்ளது. சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுகிறார். இதற்கிடையில் ரவிக்குமாருக்கு நடிகர் சிவகுமார் ஆதரவு தெரிவிப்பதாக கடிதம் எழுதியுள்ளார். எப்போதும் மறைமுகமாக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் சிவகுமார் குடும்பம் தற்போது விசிகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
அதாவது, அதிமுக ஆட்சியில் சமூக போராளியாக இருந்த கார்த்திக், சூர்யா தற்போது எந்த மூளையில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சினிமாவில் உள்ளவர்கள் சமீபத்தில் கட்சி தொடங்கி வருகின்றனர், கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்டோர் அரசியலில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விஜய் கூட தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். இப்படி எல்லோரும் அரசியலில் கர்வம் செலுத்துகையில் சிவகுமார் குடும்பம் மட்டும் அரசியலில் கால் பதிக்காமல் இருந்தது. தற்போது சிவகுமார் நாடளுமன்ற வேட்பாளர் விசிகவை சேர்ந்தஹ் ரவிக்குமாருக்கு ஆதரவாக கடிதம் எழுதியுள்ளார். அதில், விக்குமார் வெற்றி பெற அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தனித்து நின்றாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் ரவிக்குமார் போன்றவர்களை தமிழ் மக்கள் தேர்வு செய்து பார்லிமெண்ட்டுக்கு அனுப்ப வேண்டும் என பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ஏற்க்கனவே கடந்த முறை ரவிகுமார் போட்டியிட்டும் விழுப்புரம் தொகுதியை கண்டுக்கவில்லை என்றும் அவர் பெயரே பலர் தெரியவில்லை என்ற காணொளி இணையத்தில் வைரலானது. இந்தசூழ்நிலையில் சிவகுமார் எதற்காக விசிகாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுவது, சூர்யாவின் ஜெய்பிம் படம் வெளியான போது வன்னியர் சங்கங்கள் எதிப்பு தெரிவித்தனர். தற்போது நடைபெறும் லோக்சபா தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக கட்சியின் சார்பாக முரளி சங்கர் போட்டியிடுகிறார். பாமகவை எதிர்க்கும் விதமாகவே விடுதலை சிறுத்தைகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் சிவகுமார் என்றும் ஜெய்பிம் படத்தின் போது எழுந்த சர்ச்சைக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆதரவாக இருந்தது அதற்காக தற்போது ஆதரவு என்பது ஏற்று கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது.
நேரடியாகவே பாமகவை எதிர்க்க தான் ரவிக்குமாருக்கு சிவகுமார் ஆதரவு தெரிவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அது ஏன் சிதம்பரத்துக்கு கடிதம் எழுதாமல் விழுப்புரத்திற்கு எழுதினார் என்றும் வன்னியர்கள் அதிகம் உள்ள பகுதியாக விழுப்புரம் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த தேர்தலை பொறுத்தவரைக்கும் நான்கு முனை போட்டியாக உள்ளதால் திரை நட்சத்திங்கள் யாரு வந்து திமுகவுக்கு ஆதரவு கொடுத்தாலும் வெற்றி வாய்ப்பு என்பது மக்கள் தான் முடிவெடுப்பார்கள் என்றும் இன்னும் விசிகவுக்கு சின்னம் கிடைக்காமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.