24 special

கர்ப்பிணிகளுக்கு கரு கலையாமல் நிலைத்திருப்பதற்கு என ஒரு கோவில் உள்ளதா???

shivan temple
shivan temple

இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைவரும் புதிதாக திருமணமான தம்பதிகளை பார்த்து கேட்பது ஏதும் விசேஷம் இல்லையா??என்று தான்!! திருமணமாகி கொஞ்ச மாதங்களிலேயே இந்த கேள்வியை கேட்க ஆரம்பித்து விடுகின்றனர். சிலர் இன்னும் முன்பாக திருமணத்திற்கு வரும்பொழுது கூடிய விரைவில் நல்ல விஷயத்தை சொல்லுங்கள் அப்படின்னு சொல்லிட்டு போயிடுவாங்க!! எத பத்தி சொல்லுறேனுதான  பாக்குறீங்க.. குழந்தை பாக்கியத்தை பற்றி தான் சொல்கிறேன்!!இன்று உள்ள இளைஞர்கள் திருமணம் ஆன உடனே குழந்தை வேண்டாம் என்று நினைக்கின்றார்கள். சிறிது காலம் கழித்து பெற்றுக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றனர். அது ஒன்றும் தவறு இல்லை!! ஆனால், அவ்வாறு சிறிது காலம் கழித்து அவர்கள் குழந்தைக்கு முயற்சிக்கும் பொழுது ஏதேனும் காரணத்தினால் குழந்தை பாக்கியம் இல்லாமலேயே போய்விடுகிறது!! அதோடு அவர்கள் சிறு வயது முதல் இளம் வயது வரை உண்ணும் உணவு பழக்கங்களின் முறையாலும் இதுபோன்று நடக்கிறது, இன்னும் சிலர் குழந்தை பாக்கியம் பெற்றாலும் கூட அந்தக் குழந்தை கருவில் தங்காமல் களைந்து விடுகிறது.


இதற்குக் காரணம் அவர்கள் எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் எல்லா வேலைகளையும் செய்வது, கடினமான ரோடுகளில் பயணம் செய்வது மற்றும் சிலருக்கு விதிவசத்தாலோ  அக்கரு கலைகிறது. இதற்காக இன்று உள்ள உலகில் பல டெக்னாலஜி விஷயங்கள் வளர்ந்து விட்டது என்பதால் அவர்கள் அனைவரும் ஒவ்வொரு மருத்துவமனையாக சென்று இதனை சரி செய்வதற்கு முயற்சிக்கின்றனர். நிறைய பணங்கள் செலவழித்தும் அவர்களுக்கு உள்ள பிரச்சனை சரி செய்ய முயற்சிக்கிறார்கள் ஆனால், எல்லா நம்பிக்கைகளையும் இழந்து துன்புறுகின்றனர் மேலும் சிலர் அதிகமாக மன அழுத்தமும் கொள்கின்றனர். அவர்களுக்குப் பின் திருமணம் ஆன தம்பதியர்களுக்கு கூட குழந்தை பிறக்கும் போது அதனை பார்த்து அதிகமாக ஏக்கம் கொள்வார்கள். எத்தனை மருத்துவமனைக்கு செல்வது?? எவ்வளவு மருத்துவர்களை பார்ப்பது?? இன்னும் என்ன தான் செய்ய வேண்டும் என்று கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலர் கர்ப்பம் கலையாமல் நிலைத்திருக்க வேண்டும் என்று பல கோவில்களுக்கு செல்வார்கள்.

இவை எல்லாவற்றிக்கும் பதில் சொல்லும் வகையில் பதிகம் ஒன்று உள்ளது. அவர்தான்  திருக்கருகாவூர் இறைவி கருக்காத்த நாயகி, மற்றும் இறைவர் கர்ப்பபுரீஸ்வரர் ஆவார். இங்கு அமைந்திருக்கும் சிவபெருமான் முல்லைவனதராக தோன்றி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். பஞ்ச ஆரணியம் என்று சொல்லப்படுகின்ற ஐந்து காடுகள் நிறைந்த ஊராக இந்த திருக்கருகாவூர் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் சிவபெருமான் முல்லை கொடிகளை சுற்றி  சுயம்புலிங்கமாக தோன்றியுள்ளார். இங்குதான் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளுடன் மூவர் தேவாரத்தையும் பெற்றார்க்கலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலமானது தஞ்சாவூருக்கு வடக்கில் 20 கி.மீ. தொலைவிலும் வெட்டாற்றின் தென் கரையிலும் இக்கோயில் அமைந்துள்ளது.

இந்த திருப்பதிகத்தில் நிச்சயமாக வரக்கூடிய கருச்சிதைவிலிருந்து கர்ப்பிணிகளை பாதுகாத்து அந்தக் குழந்தை பரிபூரணமாக பிறப்பதற்கு  வழி வகிக்கிறது. மேலும் கருவில் உள்ள குழந்தை முழு வளர்ச்சியுடன் எந்த ஒரு குறைபாடும் இல்லாமல் பிறப்பதற்கு இங்கு அமைந்திருக்கும் இறைவி  வழிபாடு மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் குழந்தை ஏதேனும் குறைபாடுடன் பிறந்து, அது வாழ்வு முழுவதும் கஷ்டப்படுவதற்கு அப்படி எதுவும் நடக்காமல் இருப்பதற்காக இந்த இறைவியை வழிபட்டு வந்தால் குழந்தையின் ஒவ்வொரு உறுப்பும் முழுமையாக வளர்ந்து நல்லபடியாக பிறக்கும் என்று பல புராணங்கள் கூறுகிறது. இப்படிப்பட்ட சிறப்பான வரலாறு அமைந்திருக்கும் இந்த தளத்திற்கு பெருமளவு மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மேலும் குழந்தை வரம் இல்லாதவர்கள் கூட இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வதனால் அவர்களுக்கு குழந்தைச் செல்வம் கிடைக்கிறது என்று கூறுகின்றனர். அதிலும் கர்ப்பிணி பெண்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் மிகவும் சிறப்பு!!!