மனித வாழ்வை பொறுத்தவரையில் எல்லோருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தின் மீது நம்பிக்கை அதிகமாக இருக்கும். சிலர் சில பொருட்களை தங்களுடன் வைத்துக் கொண்டால் எந்தவித கஷ்டமும் ஏற்படாது சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைப்பார்கள். அது போல தான் தற்போது ஒரு பொருளை அனைவரும் விரும்பி போட்டுக் கொள்ளும் ஒன்றாக மாறியுள்ளது. அது என்ன என்று யோசிக்கிறீர்களா??அதுதான் தற்போது பல திரை பிரபலங்களும், இளைஞர்களும் கழுத்திலும் கைகளிலும் போட்டு இருக்கும் கருங்காலி மாலை!!! இந்த கருங்காலி மாலையிலே போட்டிருக்கும் பல பிரபலங்களை பார்த்து தற்போது உள்ள இளைஞர்களும் அதனை வாங்குவதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கருங்காலி மாலையில் பயன்கள் என்னவென்று பார்த்தால்... இந்த கருங்காலி மாலையை போட்டு கொண்டால் தீய சக்தி ஏதும் அண்டாமல் இருக்குமாம். செய்வினைகள், கருப்பு காற்று போன்றவை நம்மை அண்டாமல் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
மற்றவர்கள் நம் மீது வைக்கும் கண் திருஷ்டிகள் வந்து நம்மளை பாதிக்காமல் இருக்கும். தீய சக்திகளும், மற்றவர்கள் பார்க்கும் கழுகு பார்வைகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கும். இவ்வாறு இந்த கருங்காலி மாலையை அணிந்திருப்பவர்களின் வாழ்க்கையில் பல்வேறு அதிசயங்கள் நடந்து மேலும் அவர்கள் இந்த கருங்காலி மாலையை தொடர்ந்து அணிந்து வருகின்றனர் என்று பலரும் கூறுகின்றார்கள். ஆனால் இந்த கருங்காலி மாலையை துக்க விஷயங்களில் செல்லும்பொழுது போடக்கூடாது என்று கூறுகின்றனர். பகல் நேரத்திலும் சரி இரவு நேரத்திலும் சரி இதனை போட்டுக் கொள்ளலாம். தற்போது இந்த கருங்காலி மாலையை சினிமா துறையில் உள்ள பிரபலங்களான சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ், தனுஷ் போன்ற நடிகர்கள் கழுத்தில் போட்டுக் கொண்டு பல இடங்களில் செல்கின்றனர். அவற்றைப் பார்க்கும்போது அவர்களின் ரசிகர்களும் இதை போல் நாமும் போட வேண்டும் என்று விரும்புகின்றனர். எனவே தற்போது இதன் விலை மிகவும் அதிகமாகவே உள்ளது.
மேலும் பல மக்கள் கருங்காலி மாலை என நினைத்து வேறு ஏதாவது ஒரு மாலையை வாங்கி அணிந்து கொள்கின்றனர்.சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இந்த கருங்காலி மாலையை அணிந்திருப்பதற்கான காரணத்தை கூறியுள்ளார். இவர் மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கைதி, விக்ரம் மற்றும் லியோ போன்ற திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வந்தார். இவர் இயக்கிய அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஆக அமைந்திருந்தது. தற்போது இனிமேல் என்னும் ஆல்பம் பாடலில் ஸ்ருதிஹாசன் உடன் சேர்ந்து நடித்துள்ளார். இந்த பாடல் தற்போது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஏனெனில் இதில் அவர் அதிக அளவு ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார். இந்த பாடல் வெளியீட்டு விழாவில் ஸ்ருதிஹாசனும், லோகேஷ் கனகராஜ் கொடுத்த பேட்டியில் இந்த கருங்காலி மாலையை அணிந்திருப்பதை பற்றி கேள்வி எழுந்தது. அப்போது இந்த கருங்காலி மாலையை அணிந்திருப்பதற்கான காரணத்தை லோகேஷ் கனகராஜ் கூறினார். அது என்னவென்றால்!!
விக்ரம் படம் பிடிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் பொழுது விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் நண்பரான இயக்குனர் சதீஷ் இவருக்கு இந்த கருங்காலி மாலையை வாங்கி கொடுத்து அதை கழுத்தில் போட்டுக் கொள்ளுமாறு சொன்னார் என்று கூறினார். மேலும் நண்பன் அவருக்காக ஆசையாக வாங்கி கொடுத்தது என்பதால் இதனை அணிந்து இருக்கிறேன் மற்றபடி எனக்கு இதில் எந்த ஒரு நம்பிக்கையும் கிடையாது என்று கூறியுள்ளார். மேலும் தற்பொழுது சுருதிஹாசனுடன் நடித்த இனிமேல் ஆல்பம் பற்றியும் கூறும்போது இது எதேச்சையாக நடந்தது அதற்குள் எனக்கும் சுருதிஹாசனுக்கும் எதோ சம்மந்தம் இருப்பதாக தொடர்புபடுத்தி பேசுகிறார்கள் இதில் கொஞ்சமும் உண்மை எனக்கூறினார்...