24 special

உங்களுக்கு மறுபிறவியே வேண்டாமா? அப்போ இந்த கோவிலுக்கு போய் இந்த மந்திரத்தை சொல்லுங்க...!

SHIVAN TEMPLE
SHIVAN TEMPLE

 எவர் ஒருவர் தனக்கு மறுபிறவியே வேண்டாம் என்றும் இந்த பிறவியில் பட்ட பாடே போதும் என்றும் நினைக்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய கோவில் ஒன்று உள்ளது. ஏனென்றால் தற்போது மனித பிறவியாக இருந்தாலும் சரி எந்த ஒரு பிறவி எடுத்திருந்தாலும் எடுத்துக் கொண்டிருக்கின்ற உருவத்தில் போதிய மகிழ்ச்சியும் மன நிம்மதியும் போதிய உணவும் கிடைக்காமல் பாடு படுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக மறு பிறவி ஒன்று இருக்கிறது என்பதை நம்ப மாட்டார்கள் ஒருவேளை நம்பினாலும் அது தனக்கு நடக்கவே கூடாது என்று நினைப்பார்கள். அல்லது முன் ஜென்மங்களில் செய்த பாவ விணைகளால் போராடிக் கொண்டிருப்பவர்களும் தனக்கான மறு பிறவியை எதிர்பார்க்க மாட்டார்கள். 


அப்படி தனக்கு மறு பிறவி வேண்டாம் என்று நினைப்பவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வந்தால் அவர்கள் வேண்டிய வரம் கிட்டும் என்பது நம்பிக்கையாகும். நாகப்பட்டினம் மாவட்டம் திருமுல்லைவாசல் என்ற ஊரில் அருள்மிகு முல்லைவர நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் சிவபெருமானுக்கு உகந்த கோவிலாகும் மேலும் சிவனே லிங்கமாக மூன்றரை அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த கோவிலுக்கு அருகிலேயே தற்போது கடற்கரை அமைந்துள்ளதால் இந்த பகுதி சுற்றுலாத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தளமாகவும் விளங்குகிறது. அதுமட்டுமின்றி முன்னொரு காலத்தில், கரிகாலச் சோழனின் பாட்டனார் முதலாம் கிள்ளிவளவன் சரும நோயால் மிகவும் வேதனை பட்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் நோய் தீர சிவதலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டும் என்று அரண்மனை வைத்தியர் கூறியதால் தனது பரிவாரங்களுடன் ஒரு சிவதலம் நோக்கி முதலாம் கிள்ளி வளவன் வந்து கொண்டிருந்த பொழுது இந்த பகுதி முழுவதும் முல்லை கொடியாக இருந்துள்ளது.

அந்த முல்லை கொடிகள் குதிரையில் குளம்பில் சிக்கிக் கொண்டதால் குதிரையால் அதற்கு மேல் நகர முடியாமல் திணறிய பொழுது கிள்ளிவளவன் முல்லைக் கொடிகளை தன் வாளால் வெட்டினார், அப்படி வெட்டும் பொழுது கீழே லிங்கமாக வீற்றிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு ரத்தம் பெருக ஆரம்பித்தது. அதனைக் கண்ட கிளி வளவன் தெரியாமல் மாபெரும் தவறு செய்து விட்டேனே என்று நினைத்து தன்னைத்தானே குத்திக் கொள்ள முயன்றான், உடனே சிவனும் பார்வதியும் ரிஷபாரூடராக காட்சியளித்து கிள்ளிவளவனை காப்பாற்றினார்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகே இந்தப் பகுதிக்கும் இந்த கோவிலுக்கும் திரு முல்லை வாசல் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது மேலும் கிள்ளிவளவனின் வாளால் வெட்டப்பட்ட அடையாளம் இன்னும் லிங்கத்தில் அப்படியே இருப்பதை காணலாம் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சிவபெருமானும் பார்வதியும் தனக்கு காட்சியளித்து தனது நோயின் குணப்படுத்தியதால் கிள்ளிவளவன் இந்த திருத்தலத்தை கட்டியதாகவும் வரலாறு கூறுகிறது. 

மேலும் சிவ தலங்களில் பள்ளியறையும் பள்ளியறைக்கு பூஜை செய்வதும் வழக்கமாக நடைபெறும் ஒன்றாகும் ஆனால் இந்த கோவிலில் பள்ளியரையே இல்லாதது மற்றொரு சிறப்பு! ஏனென்றால் பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்வதற்காக இங்கிருக்கும் முல்லைவன நாதரை அம்பாள் வழிபட்டதால் சிவபெருமானே குருவாக வந்து அம்பாளுக்கு கற்றுக் கொடுத்துள்ளார் ஆதலால் இங்கு சிவன் ஒரு குருவாகவும் அம்பாள் ஒரு சிசியையாகவும் இருந்ததால் இந்த தரித்தலத்திற்கு பள்ளியறை இல்லை என்றும் அதனால் பள்ளியறை பூஜையும் நடப்பதில்லை என்றும் கூறுகிறார்கள். மேலும் முன் கூறியதுபடியே இந்த கோவிலில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம், அம்மாவாசை காலங்களில் வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறுபிறவி என்பதை கிடையாது என்று கூறப்படுகிறது. ஆதலால் இத்தகைய அற்புதங்களையும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வரும் சிவனை தரிசிப்பவர்களுக்கு நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.