இன்று உள்ள காலகட்டத்தில் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்தால் நம் குடும்பத்தின் நிலையை மாற்றிவிடலாம் என்று அனைவரும் எண்ணுகின்றனர். ஆனால் அவ்வாறு வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்ப்பதில் பல விதங்களில் சிக்கல்களும் உள்ளன, பல போராட்டங்களை தாண்டி இருந்தான் வேலை பார்த்து கஷ்டப்பட்டு பணம் சேர்த்து தங்களின் குடும்பத்திற்காக அனுப்பி வைக்கின்றனர். அவ்வாறு சிக்கலில் மாட்டி கொண்டவர்கள் அந்த நாட்டில் இருந்து தன்னுடைய சொந்த நாட்டிற்கு வருவதற்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களின் சொந்தங்களும் பல முயற்சிகளில் ஈடுபட்டு எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்றும் எண்ணுகின்றனர். இது போல தான் தற்போது இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. அது என்னவென்றால்!!
கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த முல்லா முஹம்மது மற்றும் பாத்திமா ஆகிய தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். அவர்களின் மகன் அப்துல் ரஹீம் 2006 ஆம் ஆண்டு தன் தந்தையின் இறப்பிற்கு பிறகு சவுதி அரேபியாவிற்கு நவம்பர் மாதம் 28 ஆம் நாள் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் ஹவுஸ் டிரைவர் விசாவை வைத்து தான் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஒரு வேலைக்கு சேரும் பொழுது அவரின் வயது 26 ஆகும். சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் அப்துல்லா அப்துரஹ்மான் அல்ஷாஹ்ரியின் மகனான அனாசி அல்ஷாஹ்ரி என்ற 15 வயது சிறுவனை பராமரிப்பது தான் ரஹீமுக்கு கொடுக்கப்பட்ட வேலையாகும். அந்த சிறுவன் கொஞ்சம் உடல்நிலை குறைவால் இருந்துள்ளான். அவனுக்கு கழுத்திற்கு கீழ் உள்ள பகுதி எதுவும் செயல்படாமல் இருந்துள்ளது.
அதனால் அவன் கழுத்து பகுதியில் மட்டும் ஒரு நவீன கருவி ஒன்று பொருத்தப்பட்டு அவனுக்கு உணவு அளிக்கப்பட்டு வந்துள்ளது. ரஹீமுக்கு அந்த சிறுவனை பத்திரமாக சந்தைகளுக்கு காரில் அழைத்து செல்வதுதான் வேலையாகும். பொது ஒருமுறை காரில் அழைத்து செல்லும் பொழுது ட்ராபிக் சிக்னலில் காரை நிறுத்தியுள்ளார் ரஹீம்!! அதற்கு அந்த சிறுவன் காரை சிக்னலில் நிறுத்த வேண்டாம் என்று கூறியுள்ளான். அதற்கு ரஹீம் அப்படியெல்லாம் செல்லக்கூடாது என்று புரிய வைப்பதற்காக பின் சீட்டில் அமர்ந்திருக்கும் அந்த சிறுவனை பார்த்துள்ளார். அப்போது அந்த சிறுவன் ரஹீமின் முகத்தில் எச்சில் காரி துப்பி காரை எடுக்குமாறு அடம் பிடித்துள்ளார். இவ்வாறு அந்த சிறுவன் செய்யும் போது ரஹீம் அதனை தடுப்பதற்காக தனது கையை அந்த சிறுவனின் பக்கம் கொண்டு போய் உள்ளார். அதில் எதிர்பாராத விதமாக அந்த சிறுவனின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த நவீன இயந்திரத்தில் ரகிமின் கை தெரியாதத்தனமாக பட்டுவிட்டது. அதன் பின் அந்த சிறுவன் பேச்சு மூச்சு இல்லாமல் காரில் இருந்துள்ளான். அதனைப் பார்த்து பதறிப்போன ரஹீம் அதே சவுதி அரேபியாவில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த கோழிக்கோடு சேர்ந்த முஹமது நசீரை போனில் அழைத்துள்ளார்.
இவர்கள் இருவரும் செய்த தவறை மறைப்பதற்காக திருடர்கள் வந்து இப்படி செய்து விட்டனர் என்று பொய்களை கூறியுள்ளனர். அதன் பின் இருவரையும் போலீசார் விசாரிக்கையில் உண்மை வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில் ரகீமுக்கு மரண தண்டனையும் மேலும் 18 வருடம் சிறை தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது. அதன் பின் அந்த சிறுவனின் பெற்றோர்கள் ரஹீமை மன்னித்து விட அவர் மரண தண்டனையில் இருந்து தப்பியுள்ளார். ஆனால் தங்கள் மகனின் இறப்பிற்காக 34 கோடி இழப்பீடு கேட்டு அதை தந்தால் தான் விடுதலை என்று தற்போது கூறியுள்ளனர். இதற்காக தற்போது கேரளாவில் உள்ள மக்கள் அனைவரும் தங்களால் இயன்ற பணத்தினை கொடுத்து வந்துள்ளனர், மேலும் தன்னார்வலர்களின் உதவியால் ரஹீமிற்காக ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் தற்போது வரை 34 கோடி 40 லட்சம் வரை டெபாசிட்டுகளை செய்து வந்துள்ளனர். மேலும் ரகிமை மீட்பதற்காக இந்திய தூதரகம் விரைவில் அந்த பணத்தினை செலுத்தி ரகிமை மீட்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!! தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!!