24 special

தென் சென்னை தொகுதி முன்னேறும் பாஜக.. தீவிரமாகும் தமிழிசை பிரச்சாரம்..!

Tamilisai, Thamilachi
Tamilisai, Thamilachi

நாடளுமன்ற தேர்தலில் தென் சென்னயில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் இந்த தேர்தலில் வெற்றி பெறுவதர்க்கு தீவிரம் காட்டி வரும் நிலையில் பிரச்சாரத்தில் மக்களுடன் மக்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். மாறாக அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் பிரச்சாரம் மெத்தனமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக வேட்பாளரின் விடியோவும், திமுக வேட்பாளரின் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


                                                                                       

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற போகிறது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னமும் 10 நாட்கள் உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிரமாக களம் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல வேட்பாளர்கள் காலை முதல் இரவு வரை தெருத்தெருவாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை, பாஜக சார்பில் தமிழிசை சௌந்திரராஜன், திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன், அதிமுக சார்பில் ஜெயவர்தன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். தமிழிசை சௌந்திராஜன், கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்பி தேர்தலில் களம் இறங்கி உள்ளார்.

                                                                                     

தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடும் பாஜக வேட்பாளர் தமிழிசை இது சிங்காரச் சென்னையா? சீர்கெட்ட சென்னையா? இதுதான சீர்கெட்டு கிடக்கும் தென் சென்னையின் அவல நிலை.. போன முறை வாக்களித்தவர்களுக்கே மீண்டும் வாக்களிக்க போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பி தமிழிசை வீடியோவும் வெளியிட்டிருந்தார். தெருத்தெருவாக களம் இறங்கி வாக்கு சேகரித்து வரும் தமிழிசை சௌந்திராஜன், தற்போது நவீன தொழில்நுட்பங்களையும் பிரச்சாரத்தில் பயன்படுத்த தொடங்கி உள்ளார். அதேபோல் தினமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் திமிழிசை மக்களுடன் மக்களாக உணவு சாப்பிடுவது, தெரு பிரச்சாரத்தின் போது கடைகளில் கூழ் குடிப்பது, பொதுமக்கள் கொடுக்கும் உணவுகள் சாப்பிடுவது தொண்டர்கள் வீட்டில் உணவு சாப்பிடுவது போன்ற வேலைகளை செய்து வருகிறார்.

                                                                                              

இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், மக்கள் பிரச்சாரத்தில் ஈடுப்படும் போது மக்களின் ஆதரவு பெருகி வருகிறதாம். தமிழிசை தென் சென்னையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுப்பதாக கூறி வருகிறாராம். மேலும், பள்ளிக்கரணை உள்ள பிரச்சனைகளை தீர்வு காண்பதாகவும், மக்களை வெள்ளத்தில் இருந்து பிரச்சனைக்கு தீர்வு கொடுப்பதாகவும் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார். இதனால் மக்களிடத்தில் ஆதரவு அதிகரித்துள்ளதாம்.

                                                                                          

இதற்கு மாறாக திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆரம்பத்தில் இருந்து சறுக்கலை சந்தித்து வருகிறார். பிரச்சாரத்திற்கு திமுக உள்ளே வந்தால் மக்கள் விரட்டியடிப்பும் கேள்வி கேட்பதும் தொடர்பான வீடியோக்கள் வெளியானது. இந்நிலையில், தமிழச்சி தங்கபாண்டியன் டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் செய்வது போல் மக்களுக்கு உரையாற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில்  மரியாதையை தெரியாதது போல் செய்கை செய்வதாக நெட்டிசன்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் இது போன்ற வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

                                                                                                 

தென் சென்னையில் போட்டியே திமுக மற்றும் பாஜக இடையே என்றும் இதில் பாஜக வளர்ந்து வருவதாகவும் ஆதரவு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழச்சிக்கு எம்பியாக இருந்த நிலையில் அவரது செய்லபாடுகள் மக்களிடத்தில் சோபிக்கவில்லை இதனால் மாற்றத்தை நோக்கி மக்கள் நகர்ந்துள்ளனர். வரும் 9ம் தேதி பிரதமர் மோடி சென்னையில் ரோடு ஷோவில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.