இன்றைய காலத்தில் திறமை இருந்தும் அதனை சரியான காலமும் இடமும் கிடைக்காமல் பலர் தள்ளாடி வருகின்றனர். அதில் சிலர்தான் தொடர்ந்து முயற்சித்து அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக போராடி வருகின்றனர். ஆனால் அது சிலருக்கு மட்டுமே அதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. அது போல தான் தற்போது நடக்கும் ஐபிஎல் போட்டியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது என்னவென்றால் சமீபத்தில் ப்ரீத்தி ஜிந்தா ஒரு ஐபிஎல் வீரருடன் சேர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்து அதனை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அந்த வீரரை பற்றி மிகவும் புகழ்ச்சியாக சில வார்த்தைகளை கூறியிருந்தார். அது என்னவென்று பார்த்தால் ப்ரீத்தி ஜிந்தா கிரிக்கெட்டில் போட்டியிடும் வீரர்களை ஏலத்தில் எடுக்கும் நோக்குடன் சென்றுள்ளார். அப்போது அவர் சஷாங்க் இன்னும் 20 வயது இளைஞரை ஏலத்தில் எடுக்க சென்றுள்ளார்.
அப்போது ஏலத்தில் உள்ளவர்கள் சஷாங்க் என்ற பெயரை கூறியவுடன் ப்ரீத்தி ஜிந்தாவும் தான் எடுக்க வந்த நபர் தான் இவர் என்று நினைத்து கையை தூக்கி விட்டார். ஆனால் கடைசியில் பார்த்தால் இவர் ஏற்றுக் கொண்டது என்னவோ அந்த 20 வயது உடைய சஷாங்க் என்னும் வீரர் கிடையாது. அதற்கு பதிலாக இவர்கள் அதே பெயரில் உள்ள வேறு ஒரு வீரரை தேர்ந்தெடுத்து உள்ளனர். அவர் தான் சீனியர் சஷாங்க் என்னும் வீரர் 35 வயதில் உள்ளவர் ஆவார். ஆனால் அவசரப்பட்டு தான் ஏலத்தில் எடுக்க வந்த நபர் இவர்தான் ப்ரீத்தி ஜிந்தா கையை தூக்கி விட்டார். அதனை பார்த்துவிட்டு பக்கத்தில் இருப்பவர்கள் இவர் நாம் எடுக்க வந்த ஆள் கிடையாது என்று கூறியுள்ளனர். மற்றவர்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் தவறாக கையை தூக்கி விட்டோம் என்று கூறி அந்த நேரத்தில் கூறியிருப்பார்கள். ஆனால் ப்ரீத்தி ஜிந்தாவோ இவரை இதுவரை யாரும் எடுக்கவில்லை என்ற உண்மை தெரிந்து, நாமும் இப்போது கையை தூக்கி விட்டு இனி வேண்டாம் என்று கூறினால் தவறாகி விடும் என்று நினைத்து இருக்கட்டும் பரவாயில்லை இந்த முறை இவரே விளையாடட்டும் என்று எந்த 35 வயது படைத்த வீரரான சஷாங்க்கு வாய்ப்பு அளித்துள்ளார்.
மேலும் ஏலம் விடும் குழுவினரிடமும் நாங்கள் இவரையே எடுத்துக் கொள்கிறோம் என்று கூறி 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளனர். இதுபோன்ற வாய்ப்புக்கு அதிக காலமாக காத்துக் கொண்டிருந்த சஷாங்க்கு இதுதான் சரியான சமயமாக அமைந்துள்ளது. கடைசியாக நடந்த போட்டியில் கூட ஹாஃப் செஞ்சரி அடித்து வெற்றி பெற வைத்துள்ளார் இவர். இதனை பயன்படுத்தி அவரும் கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் தனது முயற்சியினால் சூப்பராக விளையாடி தன்னை ஏலம் எடுத்த குழுவிற்கு பெருமையை சேர்த்துள்ளார். இப்படி எதார்த்தமாக கிடைத்த வாய்ப்பினை மீண்டும் அவரிடம் இருந்து பறிக்காமல் இருக்க வேண்டும் என்றும் இதனை தொடர்ந்து அவரும் பல போட்டிகளில் கலந்துகொண்டு இன்னும் சூப்பராக விளையாடிக் கொண்டு உள்ளார் என்பது தெரிய வருகிறது.
மேலும் இது குறித்து ப்ரீத்தி ஜிந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஏலம் எடுக்கும் போது நம்பரை மாற்றி எடுத்திருந்தாலும் கூட இந்த 35 வயது படைத்த சஷாங்க் அந்த வாய்ப்பினை பாஸிட்டிவாக பயன்படுத்தி வந்துள்ளார். ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி அதில் வெற்றி பெற வேண்டும் என்பதற்கு இவரை எடுத்துக்காட்டாக உள்ளார் என்பதைப் போல ஒரு வாக்கியத்தை அமைத்து மேலும் சீனியர் சஷாங்க் உடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ப்ரீத்தி ஜிந்தா!!!