24 special

தென் சென்னை தொகுதி திமுக, பாஜக யாருக்கு சாதகம்..?

Tamilisai, Tmilachi
Tamilisai, Tmilachi

தமிழ்நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட தொகுதிகளில் முதன்மையானதாக தென் சென்னை மக்களவை தொகுதி விளங்குகிறது. சென்னையை பொறுத்தவரை மூன்று மக்களவை தொகுதிகள் கொண்டுள்ளது. வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய தொகுதிகளில் திமுக கொடி கட்டி பறந்தது. இந்நிலையில், தென் சென்னையில் வேட்பாளர்கள் பெயர் தமிழை மையமாக கொண்டு களம் காணுகிறது. வெற்றி வாய்ப்பு யாருக்கு சத்தியமாக இருக்கும் என்பதை இதில் பார்ப்போம்..


                                                                                       

மக்களவை தேர்தலையொட்டி களத்தில் வேட்பாளர்கள் தீயாக வேலை செய்து வருகின்றனர். ஒரே கட்டமாக தமிழகத்தில் நடைபெறும் தேர்தலுக்கு இன்னும் 10நாட்களே உள்ளது. அந்த வகையில் தென் சென்னை தொகுதியில், இதுவரை நடந்த மக்களவை தேர்தலில் திமுக 9 முறை, காங்கிரஸ் 5 முறை, அதிமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. 

                                                                                         

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் தனது 26ஆவது வயதில் வெற்றி பெற்று இந்தியாவிலேயே இளம் வயது எம்பி என்ற பெருமையை பெற்றார். அந்த பிறகு 2019 மக்களவை தேர்தலின் போது திமுக சார்பாக போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றார். அந்த வகையில் தற்போது 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக சார்பாக தமிழச்சி தங்கபாண்டியனும், அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனும், நாம் தமிழர் கட்சி சார்பில் பேராசிரியர் தமிழ்ச்செல்வியும் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.

                                                                                  

தமிழ்கத்தில் உள்ள அனைத்தும் தொகுதியிலும் நான்கு முனை போட்டியாக நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த முறை போன்று தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெரும் முனைப்பில் இந்த தேர்தலை தனக்கு சாதகமாக கருதுகிறார். பாஜகவை பொறுத்தவரை தென்சென்னை தொகுதிக்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு களத்திற்கு வந்துள்ளார் தமிழிசை சவுந்தராஜன். தான் வசிக்கும் விருகம்பாக்கம் தொகுதி மக்களும், தி.நகர் மற்றும் மயிலாப்பூரில் நிறைந்து வாழும் பிராமணர்கள் ஓட்டுக்களும், பிரதமர் மோடியின் ஆட்சியை விரும்புவோர்களின் ஓட்டுக்களும் தன்னை டெல்லி வரை சென்று கரைசேர்த்துவிடும் என நம்புகிறார்.

                                                                                     

அதிமுங்க வேட்பாளர் வெற்றி தோல்வியை சந்தித்துள்ளார், புதியதாக களம் இறங்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி. இதனால் தென் சென்னை முழுக்க தமிழ்மயம் சூழ்ந்துள்ளது. இதில் தற்போது கிடைத்த தகவல் படி தாமரை முன்னேறி சென்று கொண்டு இருக்கிறது. இதில் திமுக பாஜக இடையே தான் போட்டி என்றும் அதிமுக நாம் தமிழர் கட்சி களத்தில் இல்லையென்று கூறப்படுகிறது. ஏற்க்கனவே தமிழச்சி தங்கபாண்டியனை தொகுதியின் உள்ளே விடமால் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கம் வரவில்லையென்றும் அதனால் மத்தியில் நடக்க கூடிய தேர்தல் என்பதால் மக்கள் தாமரையை தேர்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

                                                                                       

நாளை பிரதமர் மோடி சென்னை வருவதால் மக்களிடத்தில் மேலும் எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துள்ளது. இந்த முளை தேர்தலை பொறுத்தவரைக்கும் திமுக- பாஜக என்றே கூறப்படுகிறது. தென் சென்னை பொறுத்தவரைக்கும் பாஜகவுக்கு சாதகமாக உள்ளதால் தமிழிசை முன்னேறி வருவதாக கருத்து கணிப்புகள் தெரிவிகின்றன.