இப்போது உள்ள நடிகைகளில் எல்லோரும் மெயினான கேரக்டர்களில் ஹீரோயின் ஆக மட்டுமே நடிக்க வேண்டும் என்று அதிகமாக ஆசைப்படுகின்றன. அதிலும் இளம் வயதில் உள்ள நடிகைகள் ஹீரோயினை தவிர வேறு எந்த கேரக்டரிலும் அதிகமாக நடிக்கும் ஆர்வம் இல்லாமல் இருப்பர். ஆனால் இவற்றிற்கெல்லாம் மாறாக ஒரே ஒரு ஹீரோயின் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி இந்த வயதிலேயே பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் அதிக அளவில் வரவேற்பையும் பெற்றுள்ளார். அவர் யார் என்று தானே கேட்கிறீர்கள்??? அன்பு வாழ்க்கையில் ஹீரோயினாக மட்டும் நடிக்கும் ஆசை உள்ள நடிகைகளுக்கு மத்தியில் இந்த சின்ன வயதிலேயே அம்மாவாகவும், தங்கையாகவும் மற்றும் காதலியாகவும் மனைவியாகவும் என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அவற்றை நடிக்க மாட்டேன் என்று கூறாமல், அனைத்து ரோல்களிலும் நடித்து தனது திறமையை வெளிக் கொண்டு வந்து உள்ளவர் தான் நாம் எல்லோருக்கும் பிடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!!!
இவரின் எதார்த்தமான நடிப்பும் இயல்பான மேக் அப்பும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து இந்த திரைப்படங்கள் மிக அதிக அளவில் திரையரங்குகளில் வரவேற்கப்பட்டது. மேலும் இவர் நடித்த திரைப்படங்களுக்கு பல விருதுகளும் கிடைத்தது. இவரின் ஒட்டுமொத்த குடும்பமே சினிமா துறையினை சார்ந்தது ஆகும். என்னதான் இவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சினிமா துறையினை சார்ந்திருந்தாலும் கூட இவருக்கு சினிமாவில் அவ்வளவு எளிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நீதானா அவன் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானார். இவர் நடித்த திரைப்படங்களில் பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை போன்ற திரைப்படங்கள் இவருக்கு திருப்புமுனையாக அமைந்திருந்தது. காக்கா முட்டை திரைப்படத்தில் இந்த இளம் வயதிலேயே அம்மா கேரக்டர் செய்து எளிமையான மேக்கப்புடன் தனது சூப்பரான நடிப்பினால் அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்தார்.
வழக்கமாக டூயட் பாட விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தது பார்க்கும் அனைவரையும் மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அதன் பின் வெளியான கனா திரைப்படத்தில் இவரின் ரோல் மிகவும் அருமையாகவே இருந்திருக்கும். கடந்த வருடம் இவரின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருந்தது. இவரின் திரைப்படம் வெளியாகாத வெள்ளிக்கிழமையே கிடையாது. வெள்ளிக்கிழமைகள் தோறும் இவரின் திரைப்படங்கள் வெளியானதால் இவரை வெள்ளி நாயகி என்றே செல்லமாக அழைத்தனர். இவ்வாறு பல திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றியை கண்டு வந்த இவர் சமீபத்தில் பர்கானா என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்திற்கு அதிக அளவில் வரவேற்பு கிடைக்காமல் போனது. இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. அதனால் இவருக்கு போலீஸ் பாதுகாத்து கூட ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து பல சர்ச்சைகளுக்கு ஆளான பிறகு இவரைப் பற்றி எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது. ஆனால் தொடர்ந்து வேறு ஏதோ திரைப்படங்களில் நடித்துக் கொண்டு உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி வந்தது. கடந்த வருடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு எப்படி தொடர்ந்து பல திரைப்படங்கள் வெளியானதோ அதேபோல இந்த வருடம் ஜிவி பிரகாஷுக்கு தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டே உள்ளது இன்னமும் வெளியாகப் போகிறது என்பதால் இவர், போன வருடம் அனைவரும் வெள்ளி நாயகி என எண்ணை கூறினர் ஆனால் இந்த வருடம் ஜிவி பிரகாஷை தான் கூற வேண்டும் என்று டியர் திரைப்படத்தின் பிரஸ் மீட்டில் கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனால் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு கிடைத்த சில எதிர்ப்புகளைப் போன்று ஜிவி பிரகாஷிற்கும் எதிர்ப்புகள் கிடைக்குமா அதை மையப்படுத்தி தான் ஐஸ்வர்யா ராஜேஷ் இதை கூறி இருக்கிறாரா என்ற வகையிலான விமர்சனங்கள் தற்போது முன்வைக்கப்படுகிறது.