24 special

உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட் - புலம்பலில் திமுக தலைமை

Stalin
Stalin

தமிழக அரசியல் இப்போதிருக்கும் நிலையில் உளவுத்துறை அறிக்கையால் கூட்டணி கட்சிகளை டீலில் விட திமுக போட்ட மெகா திட்டம்!


பாஜக அரசின் பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவடைய உள்ளதால் வரும் 2024 ஏப்ரலில் பொது தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் பணிகளை தொடங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அதன் பணிகளை ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக மின்னணு எந்திரங்களை சரிபார்த்து, ஒவ்வொரு மாநிலங்களிலும் தேவையான அளவிற்கு இருப்பு உள்ளதா என்று சோதித்து வருகிறது. ஏற்கனவே கடந்த இரண்டு முறையும் மத்தியில் பாஜக அரசு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நிலையில் இந்த முறையும் எப்படியாவது 3வது முறையாக மோடியை பிரதமராக்க வேண்டும் பாஜக முழுமுயற்சியாக ஈடுபட்டுவருகிறது. அடுத்த தேர்தலில் யார் பிரதமராக உள்ளார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளம்பி உள்ளது. 

இதனிடையில் பாஜகவை மறுபடியும் ஆட்சியில் அமர  விடக்கூடாது என்று அனைத்து மாநில எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாட்னாவில் எதிர்க்கட்சி மாநாட்டையே நடத்தினர். மேலும் திமுக தரப்பில் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தேசிய அளவில் பாஜகவை எதிர்த்து பிரதமரை முடிவுசெய்யும் லாபியில் இடம்பெறலாம் என்ற ஆர்வத்திலும் ஆசையிலும் இருந்து வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் மாநாட்டில் கலந்து கொண்டு வந்த பிறகு எதிர்க்கட்சிகள் மாநாடு மற்றும் தேசிய கட்சிகளின் கூட்டணி போன்ற எதுவுமே சரிப்பட்டு வராது என  உணர்ந்து திமுக தற்போது தேசிய அரசியல் எண்ணத்தை கைவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

ஆனாலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருக்கும் 39 தொகுதிகளையாவது தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவில் திமுக இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக  சீட்டு ஒதுக்கவும், மேலும் கடந்த முறை கூட்டணி கட்சியில் போட்டியிட்ட பலருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்காமல் புதிய நபர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கும், அதோடு ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தொகுதிக்கு வாக்கு கேட்டு சென்றால் வெற்றி பெற முடியாது என்ற காரணத்தினால் அவர்களை தொகுதி மாற்றவும் திமுக திட்டமிட்டுள்ளது. இதன் பின்னணியில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவு இருக்கும் என்ற உளவுத்துறையின் அறிக்கை இருப்பதாகவும், அதன் காரணமாகவே திமுக தற்போது அதிரடி முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது ஒரே தொகுதி ஒரே கட்சியில் பல ஆண்டுகளாக ஒரே நபருக்கு ஒதுக்கப்பட்டு அவர் ஒரே தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார், இருப்பினும் அந்த பகுதிகளில் கட்சியின் வளர்ச்சியும் தொகுதி முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை இதனால் கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த வாய்ப்புகளை வழங்கவும் முதல்வர் ஸ்டாலினுக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கே தொகுதிகளின் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாகவும் திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் கரூர் தொகுதியின் எம்பி ஜோதிமணிக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே மோதல்கள் இருந்து வருவதால் கரூர் தொகுதியில் திமுக தங்கள்  வேட்பாளரை நிறுத்தவும், உள்ளூரில் திமுகவினர் பற்றிய முழுபோக்கையும் தெரிந்து வைத்துள்ள ஜோதிமணி திருச்சி அல்லது ஈரோடுக்கு மாறுவார் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு திருவள்ளூர் தொகுதியும், இதனால் காங்கிரசுக்கு திருவள்ளூர் பதிலாக காஞ்சிபுரத்தை ஒதுக்கலாம் எனவும், ஈரோடு தொகுதியில் மதிமுகவிற்கு வாய்ப்பளிக்காமல் நீண்ட காலத்திற்குப் பிறகு திமுகவே இறங்க உள்ளதாகவும், வைகோ தனது மகன் துறைக்காக விருதுநகரை பேசி வைத்துள்ளார் எனவும் அதனால் காங்கிரசிற்கு விருதுநகரை கொடுக்க வாய்ப்பு இல்லை என்றும் திமுக தலைமை பேசி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் காங்கிரசிற்கு சிவகங்கையை ஒதுக்காமல் தேனியை தந்துவிடலாம் பிறகு சிவகங்கையில் திமுகவே போட்டியிடட்டும் என்றும், திருச்சியில் நேரு தன் மகனை நிறுத்த உள்ளதால் திருநாவுக்கரசருக்கு திருச்சியும் வழங்க முடியாது, அதோடு காங்கிரஸ் ராமநாதபுரத்தை தற்போது குறி வைப்பதாகவும் அது மாறினால் மயிலாடுதுறையை முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு கொடுக்கலாம் என்றும் அறிவாலய தரப்பு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

உளவுத்துறை கொடுத்த அறிக்கையால் ஆடிப்போன திமுக தலைமை வேட்பாளர்களை மாற்றியும், பாட்னாவில் ஏற்பட்ட தோல்வி காரணமாக 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் மட்டுமே நாம் கவனத்தில் செலுத்தலாம் என்று அறிவாலயம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.