நிர்வாகத்தில் நிறைய அவப்பெயர்களையும், திமுக ஆட்சிக்கு தலைவலியையும் ஏற்படுத்தி தள்ளாடிவரும் டாஸ்மாக் துறை முதல்வர் குடும்பத்தின் வசம் செல்கிறது.திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து இதுவரை இரண்டு முறை அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக கடந்த முறை அமைச்சரவை மாற்றம் முடிந்த சில நாட்களில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை குறி வைத்து ரெய்டு இறங்கிய காரணத்தினால் தமிழக அரசியலில் பிரளயம் ஏற்பட்டது. அமலாக்கத்துறை ரெய்டில் ஈடுபடும் பொழுது செந்தில்பாலாஜிக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது மட்டுமல்லாமல் செந்தில் பாலாஜி வசம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயதுறைத்தீர்வை எனப்படும் டாஸ்மாக் மற்றும் மின்துறை ஆகிய இரண்டும் வேறு அமைச்சர்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டன.
டாஸ்மாக் துறை அமைச்சராக முத்துசாமி பொறுப்பேற்றார். மின்துறை அமைச்சராக தங்கம் தன்னரசு பொறுப்பேற்றார். இது மட்டுமல்லாமல் செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கும் பொழுது டாஸ்மாக் கடைகளில் பத்து ரூபாய் அதிகம் வாங்குகிறார்கள் என்ற புகார் எழுந்தது இந்த 10 ரூபாய் எதற்காக வாங்குகிறீர்கள் என கேள்வி எழுந்த பொழுது டாஸ்மாக் பணியாளர்களே, 'எங்களிடம் கரூர் கேங்க் எனப்படும் கும்பல் வந்து ,மிரட்டி வசூலிக்கின்றனர், அதற்காக வாங்குகிறோம் என கூறினார்கள். மேலும் இது தொடர்பான வீடியோக்கள் பல இணையங்களில் வைரலாக உலா வந்தது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி மீது வைக்கப்பட்ட அமலாக்கத்துறை விசாரணை என்னவோ கடந்த ஆட்சிக்காலத்தில் செய்த பண மோசடி வழக்காக இருந்தாலும் வருமானவரித்துறையினரின் ரெய்டுக்கு டாஸ்மாக்கில் அதிகமாக வசூலித்த இந்த தொகையே காரணம் எனக் கூறப்படுகிறது. இப்படி தொடர் குற்றச்சாட்டுகள் செந்தில் பாலாஜி மீது எழுந்து வந்த காரணத்தினால் டாஸ்மாக் துறை எப்பொழுதும் கவனிக்கப்படும் துறையாக தற்பொழுது மாறிவிட்டது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசுக்கு அதிக வருவாயை தரும் துறையாகவும் டாஸ்மாக் இருந்து வருகிறது. ஒருபுறம் வருவாய். மறுபுறம் அதிக அவப்பெயர் என டாஸ்மாக் துறையில் சர்ச்சைகள் மாறி மாறி நீடித்து வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் திமுக அரசு குழம்பி வந்தது.
இந்த நிலையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் வசம் டாஸ்மாக் துறை ஒப்படைக்கப்படுகிறது என்ற பரபர தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. மூத்த அரசியல் விமர்சகராக உள்ள சவுக்கு சங்கர் தனது twitter பதிவில் 'டாஸ்மாக் உதயநிதி வசம் செல்கிறது டாஸ்மாக்கை இனி உதயநிதி கவுனிப்பார்' என தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்று செய்துள்ளார். இது தற்பொழுது வைரலாக பரவி வருகிறது, ஏற்கனவே டாஸ்மாக் துறையில் இவ்வளவு சர்ச்சைகள் இருக்கும் பொழுது அதை ஏன் வேறு அமைச்சருக்கு மாற்றி கொடுக்கக் கூடாது குறிப்பாக உதயநிதியைத்தான் நீங்கள் அமைச்சராக வேண்டும் என முடிவு செய்து அமைச்சராக்கிவிட்டிர்களே விட்டீர்களே! உதயநிதிக்கு கொடுக்கலாமே என பல்வேறு அரசியல் விமர்சகர்கள் கூறி வந்த நிலையில் தற்போது டாஸ்மாக் துறை உதயநிதி வசம் செல்ல போகிறது என்ற தகவல் பல விமர்சனங்களையும் மற்றும் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் டாஸ்மாக் துறை என்பது தற்பொழுது திமுக அரசுக்கு அதிக அவப்பெயர் ஏற்படுத்தும் துறையாக இருந்து வருவதால் தற்பொழுது உதயநிதி கவனித்தால் சிறப்பாக இருக்கும் என சிலரால் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிகிறது.