24 special

சிபிஐ க்கு கொடுக்க பட்ட முக்கிய அனுமதியை ரத்து செய்த முதல்வர் ஸ்டாலின்...!

Senthil balaji, mk stalin
Senthil balaji, mk stalin

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் யாரை பாதித்ததோ இல்லையோ முதல்வர் ஸ்டாலினை பெரிய அளவில் பாதித்து இருக்கிறது. அதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் இருக்கிறது.


தமிழகம் முழுவதும் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பரவலான தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் கொங்கு மண்டலம் எனும் மேற்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெறவில்லை கொங்கு பகுதியில் படு தோல்வியை சந்தித்தது, இதனை மாற்ற செந்தில் பாலாஜி கொங்குமண்டல பொறுப்பு அமைச்சராக ஸ்டாலின் உத்தரவு போட்டு இருந்தார்.

செந்தில் பாலாஜி கோவையை திமுக கோட்டையாக மாற்றுவார் எனவும் ஸ்டாலின் நம்பிக்கை கொண்டு இருந்த நிலையில், செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார் என்பதை முதல்வர் ஸ்டாலினால் நம்ப முடியவில்லை.தொடக்கத்தில் செந்தில் பாலாஜி தொடர்பு உடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை என்பது செந்தில் பாலாஜியை மிரட்டி பார்க்க பாஜக பயன்படுத்தும் யுத்தி என்றே திமுக தலைமை கருதியது, அப்படி நினைத்த காரணத்தினால்தான் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி.. கர்நாடகாவில் சிவகுமாரை அமலாக்கதுறை மூலம் மிரட்டியது பாஜக இன்று அவர் எங்கு இருக்கிறார் துணை முதல்வராக இருக்கிறார் என நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

அமலாக்க துறை முதலில் சோதனை நடத்தும் என்றே நினைத்து இருந்த ஒட்டு மொத்த திமுகவும், செந்தில் பாலாஜி கைது செய்யப்படுகிறார் என தெரிந்த அடுத்த நொடியே அதிர்ந்து போயிருக்கிறது. எப்படியாவது செந்தில் பாலாஜியை டெல்லி அழைத்து செல்வதற்கு முன்னர் தடுத்து விட வேண்டும் என முழு அரசு இயந்திரமும் வேலை செய்து கொண்டு இருக்கிறதாம்.இவை எல்லாம் ஒருபுறம் இருக்க திமுகவிற்கு எப்போதும் சட்ட ஆலோசனை சொல்லும் டெல்லியை சேர்ந்த சட்ட வல்லுநர், உடனடியாக உங்கள் மாநிலத்தில் சிபிஐக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் அனுமதியை ரத்து செய்யுங்கள் என ஆலோசனை கொடுத்து இருக்கிறார். இதையடுத்து சிபிஐக்கு வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியை ரத்து செய்து கதவை இழுத்து மூடி இருக்கிறார் ஸ்டாலின்.

திமுகவை சேர்ந்த 7 அமைச்சர்கள் முதல்வர் ஸ்டாலின் உட்பட 8 பேர் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 6 நபர்கள் சிபிஐயிடம் புகார் கொடுத்து இருக்கும் நிலையில் எங்கு வருமான வரித்துறை, அமலாக்கதுறை ஆகியவற்றை தொடர்ந்து சிபிஐ உள்ளே வரலாம் என்ற காரணத்தினால் உடனடியாக சிபிஐக்கு கொடுக்கப்பட்ட முன் அனுமதி பெற தேவையில்லை என்ற விதியில் மாற்றம் கொண்டு வந்து அதனை ரத்து செய்து இருக்கிறது ஆளும் திமுக அரசு என்று கூறப்படுகிறது.

என்னதான் சிபிஐ மாநில அரசின் முன் அனுமதி பெறவேண்டும் என்ற விதியை திமுக அரசு கொண்டு வந்தாலும் நீதிமன்றம் உத்தரவு போட்டால் அதனை திமுகவால் தடுக்க முடியாது எனவும், அனைவரது ஊழல் கணக்குகளும் எழுத பட்டு விட்டன ஜூலை மாதம் வெளியாக இருக்கும் dmk 2 பைல்ஸ் பட்டியலில் யாரும் எதிர் பாரத விதமாக பல அதிர்ச்சி தகவல்கள் பலரது சொத்து பட்டியல் போன்றவை வெளியாக இருப்பதாக அடுத்து கூறுகின்றன பாஜக வட்டாரங்கள்.