தமிழக ஊடகங்கள் பலவும் வெளியில் சொல்லாத சம்பவம் நேற்று நீதிமன்றத்தில் அரங்கேறியது, நீதிமன்றத்தில் அமலாக்கதுறை சொல்லிய ஒரு வார்த்தை செந்தில் பாலாஜியின் மொத்த கனவையும் கலைத்து இருக்கிறது.
அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த செந்தில்பாலாஜி நேற்று கைது செய்யப்பட்டார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில்பாலாஜியை, சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.அல்லி நேற்று நேரில் சென்று சந்தித்தார். செந்தில்பாலாஜியின் உடல்நலம் குறித்து மட்டுமே தாம், விசாரிக்க வந்திருப்பதாகவும், வாதங்களை நீதிமன்றத்தில் வைத்துக்கொள்ளுமாறும் நீதிபதி இரு தரப்புக்கும் அறிவுரை வழங்கினார்.
அதேநேரத்தில், செந்தில்பாலாஜி தரப்பில் ஜாமீன் மனுவும் நீதிபதியிடம் உடனடியாக தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு நீதிபதி, ‘நீதிமன்றத்தில் விசாரணைக்கு பிறகு முடிவெடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார். ஆனால், விசாரணை எப்போது நடைபெறும் என்பதை சொல்லவில்லை. இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில்பாலாஜி மனுவை நிராகரித்து, நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.செந்தில்பாலாஜியை 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க முதலில் உத்தரவிடப்பட்டது.
ஆனால், பின்னர் நேற்று மாலையே செந்தில்பாலாஜி ஜாமீன் மனு குறித்து விசாரணை தொடங்கியது. இங்குதான் அமலாக்க துறை சொன்ன வார்த்தை செந்தில் பாலாஜியின் தூக்கத்தை தொலைத்து இருக்கிறது.
செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ என்பவர் ”இந்த கைது சட்டவிரோதமானது; ஆகையால், ரிமாண்டை நிராகரிக்க வேண்டும். அவரது, உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். மேலும், செந்தில்பாலாஜி கைது குறித்து அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத் துறை தகவல் தெரிவிக்கவில்லை. தவிர, கைதுக்கான காரணங்களை செந்தில்பாலாஜியிடமே தெரிவிக்கவில்லை. உடல்நலப் பாதிப்பால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில்பாலாஜிக்கு 3 அடைப்புகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்யவும் பரிந்துரைத்துள்ளது. இஎஸ்ஐ மருத்துவக் குழு அறிக்கையும் அதை ஏற்றுக் கொண்டுள்ளது. அவருடைய உயிரின் முக்கியத்துவத்தைக் கருதி அறுவைசிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அறுவைசிகிச்சைக்காக காவிரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். கடந்த 22 மணி நேரம் அவர் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்” என வாதத்தை வைத்தார்.
அதற்கு அமலாக்கத் துறை சார்பில் ஆஜராகிய மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ”சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் குற்ற விசாரணை முறை சட்ட விதிகள் பொருந்தாது. கைது காரணங்கள் சொல்லப்பட்டன. கைது மெமோவை பெற செந்தில்பாலாஜி மறுத்தார். கைது செய்யப்படுவோம் என தெரிந்தே அதைப் பெற மறுத்து விட்டார். ரிமாண்ட் செய்யப்பட்டுவிட்ட நிலையில் அதை நிராகரிக்க கோர முடியாது. ரிமாண்ட் உத்தரவு சரியானதே.
ஆகையால், ஜாமீன் வழங்கக்கூடாது. இடைக்கால ஜாமீன் வழங்கவும் சட்டத்தில் இடமில்லை. எங்களிடமும் மருத்துவக் குழு உள்ளது. தற்போதே அவர், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில்தான் உள்ளார். நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தவர், தற்போது உடல் நலகுறைவு எனக் கூறுகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால், நாங்களே உரிய சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம். அவருக்குத் தேவையான சிகிச்சையை வழங்குவோம். சுதந்திரமான மருத்துவக் குழு அமைக்க வேண்டும். மருத்துவ அறிக்கையில் நம்பிக்கை இல்லை” என வாதம் வைத்தார்.
மேலும் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கால கட்டத்தில் செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கில் 1.34 கோடி ரூபாய் வந்து இருக்கிறது, மேலும் அவரது மனைவி மேகலா பெயரில் செந்தில் பாலாஜி வங்கி கணக்கில் 25 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது ம்
ஆனால் இவை எதற்குமே செந்தில் பாலாஜி எந்த வகையில் வருமானம் வந்தது என்ற கணக்கை காட்டவில்லை, இது தவிர செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சாதாரண குற்ற வழக்கு கிடையாது, பண பரிமாற்ற மோசடி வழக்கு, இந்த வழக்கில் இடைகால ஜாமீன் வழங்க முடியாது அதற்கு சட்டத்தில் இடமில்லை என அழுத்தம் திருத்தமாக ஒரே போடாக போட்டார் அமலாக்க துறை சார்பில் வாதடிய வழக்கறிஞர்.
இந்த நிலையில் இந்த தகவல் சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவமனை அறை எண் 6084-ல் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு தெரியவர கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார் செந்தில் பாலாஜி. என்னடா இது இடைக்கால ஜாமீன் வழங்க சட்டத்தில் இடமே இல்லையா? ஒரு வேலை திகார் சிலை உறுதியானதா என அதிர்ச்சியில் இருக்கிறதாம் செந்தில் பாலாஜி தரப்பு.
ஒரு வேலை குற்றவியல் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமின் கிடைத்தால் அது சட்ட சிக்கலை மேலும் உண்டாக்கும் எனவும் குறிப்பாக மேலவை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமின் மனு ரத்து செய்யவே அதிக வாய்ப்புகள் இருக்கும் என்பதால் செந்தில் பாலாஜிக்கு திகார் உறுதி என அடித்து கூறுகின்றனர் சட்டம் அறிந்தவர்கள்.
செந்தில் பாலாஜி வங்கி கணக்கில் வரவு வந்த 1.34 கோடி, மனைவி பெயரில் டெபாசிட் செய்யப்பட்ட 25 லட்சம்.. போன்றவை செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியை மட்டுமல்ல அரசியல் ஆட்டத்தையும் முடிவிற்கு கொண்டு வந்து இருக்கிறது.