24 special

அடுத்த ஐடி ரெய்டுக்கு தயாராகும் திமுகவின் முக்கிய புள்ளிகள்...!

Senthil balaji, mk stalin
Senthil balaji, mk stalin

செந்தில்பாலாஜி வெறும் துவக்கம் மட்டும்தான் திமுகவில் இன்னும் அமைச்சர்கள் சிக்குவார்கள் என்ற பட்டியல் வெளியாகி அறிவாலயத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.


தமிழக அரசியலில் ஒவ்வொரு கட்சியாக ஒவ்வொரு ஆட்சியில் மாறி தனது பதவியை தக்க வைத்த ஒரு அரசியல்வாதி இருந்தார் என்றால் அதற்கு எடுத்துக்காட்டாக அமைச்சர் செந்தில் பாலாஜியை கூறலாம். அந்த அளவிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி முதலில் அதிமுகவில் பிறகு தினகரனுடன் இணைந்து பிறகு திமுகவில் மாறினார் இப்படி மாறினாலும் அவரிடம் இருந்து பதவி மட்டும் என்றுமே பரிபோகவில்லை. அதிமுகவில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருந்த பொழுது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் நல்ல பெயரை பெற்றார், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களிடம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டார் இது பற்றிய வழக்கை அமலாகத் துறையினர் பதிவு செய்தனர் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கு பற்றி விசாரிக்க தடை விதித்திருந்தது. 

அதனைத் தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் கசப்பின் காரணமாக டிடிவி தினகரனுடன் இணைந்தார் அங்கு இணைந்ததும் அவரது பதவி பறிக்கப்பட்டதன் காரணத்தினால் டிடிவி தினகரனிடமிருந்து  விலகி திமுகவில் இணைந்தார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டி போட்டு எம்எல்ஏவான அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்வர் ஸ்டாலினின் அமைச்சரவையில் அதிக அதிகாரங்களை கொண்ட அமைச்சராக இருந்தார். அவருக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. கள்ளச்சாராய சாவுகள், பாட்டிலுக்கு பத்து ரூபாய் கொள்ளை, கரூர் கேங்க் அட்டகாசம், சட்ட விரோத பார்கள் என டாஸ்மாக் துறையை சுற்றி சர்ச்சைகள் மட்டுமே சூழல் போல திமுக ஆட்சியை விழுங்கும் அளவிற்கு சுழன்றடித்தன!

இதனால் தேசிய அளவில் பேசும் பொருளாக மாறிய அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை மேற்கொள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் அவருக்கு தொடர்புடைய பிற மாநிலங்களிலும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுதுகூட எங்கோ தானே வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொள்கின்றனர் தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாதது போல தன்னுடைய கோப்புகளை ஏந்திக்கொண்டு தனது அலுவலக அறைக்குச் சென்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஐடி அதிகாரிகள் அப்பொழுது மேற்கொண்ட ரைடின் மூலம் பல ஆவணங்களையும் ரகசிய டைரிகளையும் ஒப்பந்த கோப்புகளையும் மேலும் கணக்கில் வராத ரொக்க பணங்களையும் கைப்பற்றினர்.

கிட்டத்தட்ட எட்டு நாட்களாக தொடர்ந்த ஐடி ரெய்டில் பல முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை பெட்டி பெட்டியாக அதிகாரிகள் எடுத்து சென்றனர். இந்த நிகழ்விற்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த விசாரணைக்கு விலக்கு அளித்து விசாரணை நடத்தலாம் என்று அமலாக்க துறைக்கு சாதகமாக தீர்ப்பளித்தது இதனால் அமலாக்க துறையினர் கடந்த செய்வாய்க்கிழமை அதிகாலை முதல் நள்ளிரவு வரை சோதனைகளில் ஈடுபட்டது பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் விசாரணை மேற்கொள்வதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜியையும் அமலாக்க துறையினர் கைது செய்துள்ளனர் ஆனால் திடீரென அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கபட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். 

இந்த நிலையில் அடுத்தபடியாக அமலாக்க துறையினரின் ரெய்டு பட்டியலில் அடுத்து யார் உள்ளார் என்ற அதிரடி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அடுத்த லிஸ்டில் பெரும் முக்கிய தலைவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. 

நிலம் ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் ஐ பெரியசாமி கடந்த ஆண்டு அமலாக்க துறையினரின் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார் தற்போது அவரும், 2002 முதல் 2006 வரை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனும் பண பரிமாற்றம் செய்த வழக்கு தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணன், அடுத்ததாக திமுகவின் மூத்த அமைச்சராக உள்ள கே என் நேரு முன்பு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தவும், அமலாக்கத் துறையினரின் லிஸ்டில் உள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்ததகவல் தெரிந்த காரணத்தினால் தற்போது அறிவாலயம் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்து வருகிறது.