24 special

பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற உணவுகள்?....அண்ணாமலை குற்றச்சாட்டு!

mk stalin, annamalai
mk stalin, annamalai

தமிழ்நாட்டில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு உணவு திட்டங்களை காலை முதல் விரிவுபடுத்தப்பட்டது. மதியம் உணவில் தினமும் சத்தான முட்டைகளை வழங்க உத்தரவிட்டது. பல பள்ளிகளில்  மாணவர்களுக்கு தரமற்ற உணவுகள் வழங்குவதாக புகார் எழுந்ததது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மத்திய உணவு திட்டத்தின் கீழ் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் மதிய உணவுடன் வழங்கப்படும் முட்டைகள் கெட்டு போனதாகவும் அழுகிய நிலையில் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மூட்டை வழங்குவதை நிறுத்த சொன்னார்.


இல்லையெனில் மாணவர்களுக்கு உடல்நிலை பிரச்சனை ஏற்படும் என்று தெரிவித்தார்.இந்த சம்பவத்தால் மாணவர்களுக்கு சத்துணவுக்காக வழங்கப்படும் முட்டைகளின் தரத்திலேயே பிரச்னை இருப்பது, பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இதனை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசு மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்தது, 'ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகா மற்றும் கொடுமுடி தாலுகாவில் உள்ள பல பள்ளிகளில், கடந்த புதன்கிழமை முதல் அடுத்தடுத்த நாட்களில், மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்திருக்கின்றன.

கடந்த 3 நாட்களாக மாணவ மாணவியருக்கு மதிய உணவில் முட்டை வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கின்றனர். சுமார் 2,000 முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. அமைச்சர் கீதா ஜீவன், மாணவர்கள் குறித்த எந்தக் கவலையும் இல்லாமல்,  மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்குவதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்தாலும், தவறு செய்தவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைப்பதில்லை. 

குறைந்தபட்சம், முட்டை வழங்கும் நிறுவனங்கள் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்கிட, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கொண்டு வந்த போஷான் அபியான் திட்டம் மூலம், கடந்த ஏழு ஆண்டுகளில் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி ₹2,907 கோடி ரூபாய். சராசரியாக வருடத்திற்கு ஐம்பது லட்சம் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பலனடைகிறார்கள். 

ஆனால், தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தரமற்றதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அடிக்கடி எழுந்தாலும், அதைக் குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் இருந்து வருகிறது ஊழல் திமுக அரசு. குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எத்தனை முறை மதிய உணவில் அழுகிய முட்டைகளைக் கொடுத்தார்கள் என்பதற்குக் கணக்கே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் திமுகவுக்கு அத்தனை இளக்காரமாகி விட்டது. உடனடியாக இந்தாளுகிய மூட்டைகளை வழங்கி மாணவர்கள் உயிருடன் விளையாடுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பாக கேட்டுக்கொண்டார். 

தமிழகத்தில் தற்போது தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனை எழுந்து வருவது தொடர்கதையாகி விட்டது. அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக முதல்வர் ஆட்சி செய்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் ஈரோடு மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் இதுபோன்று தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகவும் முட்டைகளை மாணவர்களுக்கு வழங்காமல் வெளியில் விற்கப்படுவதாகவும் அதனை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.