24 special

முதல்வர் கவனத்திற்கு சென்ற வீடியோ...! யாத்திரையில் நடந்த நிகழ்வு...!

mk stalin, annamalai
mk stalin, annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் அல்லது அதை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்த நபர்களுக்கு ஒன்று தெரிந்து இருக்கும் யாத்திரையில் காவலுக்கு செல்லும் காவலர்களை காட்டிலும் மாநில உளவுத்துறையை சேர்ந்த அதிகாரிகளே யாத்திரையின் பல பகுதிகளில் முந்தி நிற்பதை அறிந்து கொள்ளலாம்.அந்த வகையில் சமீபத்தில் அண்ணாமலை கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியான சங்ககிரி பகுதியில் யாத்திரை மேற்கொண்டு இருந்தார் அப்போது இளம் பெண் ஒருவர் அண்ணா அண்ணா என கூப்பிட்ட படியே நடந்து சென்ற அண்ணாமலையிடம் கை கொடுக்க ஓடினார்.


மேலும் அண்ணாமலையிடம் கை கொடுத்த பின்பு சந்தோஷத்தில் துள்ளி குதித்தார், எனக்கு அரசியலே தெரியாது எனவும் அண்ணாமலை பேச்சுதான் என்னை அவரை பற்றி அறிய தோன்றியது அருமையாக பேசுகிறார் அவருக்கு தான் என் முதல் ஓட்டு என்று கூறினார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் இது முதல்வரின் கவனத்திற்கு சென்று இருக்கிறதாம், அண்ணாமலை யாத்திரையை கவனித்து வரும் பெண் அதிகாரி ஒருவர் கள நிலவரம் குறித்து மணிக்கு மணி சென்னைக்கு தகவல் கொடுத்து இருக்கிறார் அதன் அடிப்படையில் களத்தில் அண்ணாமலை யாத்திரை பெரும் மாற்றங்களை சிறுக சிறுக நிகழ்த்தி வருகிறது.

பள்ளி மாணவர்கள் தொடங்கி பெண்கள் அண்ணாமலையை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள், அண்ணாமலையை பார்த்த ஆராவாரத்தில் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இதன் மூலம் இது நாள் வரை அண்ணாமலை குறித்து தெரியாத பலரும் அண்ணாமலை குறித்தும் பாஜக குறித்தும் அறிந்து கொண்டு இருப்பதாக முதல்வர் வரை ரிப்போர்ட் சென்று இருக்கிறதாம்.மேலும் முதல்வர் கவனத்திற்கு சில அறிக்கைகள் செல்ல அப்போது இளம் பெண் அண்ணாமலையை பார்க்க காட்டிய ஆர்வம் குறித்த வீடியோவும் முதல்வர் கவனத்திற்கு சென்று இருக்கிறதாம், அப்போது இதை பார்த்து நாம் கவலை கொள்ள தேவையில்லை அதிமுக தான் கவலை படனும் பாஜக வளர்ந்தால் அதிமுகவிற்கு தான் இழப்பு என கூறி இருக்கிறாராம்.மேலும் அண்ணாமலை யாத்திரை செல்வது போலவே உதயநிதியும் நீட் தேர்வு உள்ளிட்ட விஷயங்களை மையமாக கொண்டு யாத்திரையை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.