24 special

சவுக்கு விவகாரத்தில் திடீர் திருப்பம்.. திமுகவுக்கு அதிர்ச்சி...

savukkusankar , mkstalin
savukkusankar , mkstalin

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல அரசியல் விமர்சகராகவும் யூடியூப்பர் ஆகவும் அறியப்படுகின்ற சவுக்கு சங்கர் பெண் காவலரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு பரபரப்பாக கைது செய்யப்பட்டார். இவரது கைது நடவடிக்கையிலிருந்து நீதிமன்றத்தில் இவரை ஆஜர் படுத்து வரை தொடர்ந்து பல அதிர்ச்சிகர சம்பவங்கள் நடைபெற்றது. அதுமட்டுமின்றி போலீசார் சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கைது செய்யும் பொழுது சவுக்கு சங்கர் தங்கி இருந்த இடத்தில் கஞ்சா இருந்ததாகவும் அவர் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


அதுமட்டுமின்றி சவுக்கு ஷங்கருக்கு எதிராக பெண் காவலர்கள் திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து புகார்களை அளித்தனர். மேலும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியதாகவும் சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்படி சவுக்கு சங்கர் என்று மாட்டுவார் அவர் மீது இத்தனை வழக்குகளை போடலாம் என ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது போன்று தொடர்ச்சியாக பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டதே அரசியல் வட்டாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது மட்டுமின்றி சவுக்கு சங்கரின் விவகாரத்தில் திமுக அரசின் மீது பெரும் சந்தேகத்தை எழுப்பியது. 

இதற்கிடையிலேயே சவுக்கு ஷங்கர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் சவுக்கு சங்கரின் தாயார் குண்டர் சட்டத்தின் கீழ் தனது மகனை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த பொழுது நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யும்படி உத்திரவிட்டார். ஆனால் நீதிபதி பாலாஜி இதில் அரசு தரப்பு பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். சவுக்கு சங்கரின் தாயார் கொடுத்த வழக்கில் இரு நீதிபதிகளும் இரு வேறு தீர்ப்புகளை வழங்கியதால் இந்த வழக்கு மூன்றாம் தரப்பு நீதிபதியிடம் சென்றது. அதனை விசாரித்த  மூன்றாம் தரப்பு நீதிபதி, நீதிபதி பாலாஜியின் உத்தரவை ஏற்று வழக்கை ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி பரிந்துரைத்தார். இதனை அடுத்து இந்த வழக்கு எம்எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த பொழுது கூடுதல் அவகாசம் கேட்ட தமிழக அரசு சார்பில் வாதாடிய நீதிபதியின் கோரிக்கையை எடுத்துக்கொண்டு அந்த வழக்கை ஒத்து வைத்தனர். ஆனால் சவுக்கு சங்கரின் தாயார் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு இந்த மாத தொடக்கத்தில் விசாரணைக்கு வந்த பொழுது அந்த வழக்கிலிருந்து விலகுவதாகவும் தான் இடம்பெறாத அமர்வு முன்பு வழக்கை பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் நீதிபதி சுந்தரேஷ் உத்தரவிட்டார். இதனை அடுத்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன் துலியா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தடுப்பு காவலில் சவுக்கு சங்கர் வைக்கப்பட கூடிய அளவிற்கு அவர் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருந்தாரா? மிகக் கடுமையாக நீங்கள் அவரிடம் நடந்து கொள்ள முடியாது. அவரின் நடவடிக்கையையும் மன்னிக்க முடியாதது தான், ஆனால் ஏன் இடைக்கால நிவாரணத்தை வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதனை அடுத்து இந்த வழக்கை ஜூலை 18ஆம் தேதி ஒத்திவைத்தார் உச்ச நீதிமன்ற நீதிபதி. மேலும் உச்ச நீதிமன்றம் நாளை இந்த வழக்கு குறித்த விசாரணையை மேலும் தீவிரப் படுத்தி சவுக்கு சங்கருக்கு ஜாமினை வழங்கும் என்றும் வெளியே வந்து இந்த திமுக அரசு தன்னை சிறையில் வைக்க என்னென்ன செய்தது என்பதை கூறுவார். 

அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் அவர் சிறையில் இருந்த பொழுது நடந்த பல சம்பவங்களின் பின்னணியில் யார் இருக்கிறார் என்பதை குறித்து தகவல்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவார் என அரசியல் வட்டாரங்களில் கிசு கிசுக்கப்படுகிறது. மேலும் சவுக்கு வெளியில் வரக்கூடாது என ஆளும் திமுக தரப்பில் சிலர் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன...