24 special

இதை கவனித்தீர்களா அதிமுகவில் உருவாகும் ஜாதி மோதல்... முடிவுக்கு வருகிறது அதிகார போட்டி!

edapadi
edapadi

தொடர் தோல்விகளை கண்டுவரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் உட்கட்சி பூசல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமியின் அதிகாரப்போக்கு அனைத்து சீனியர் அமைச்சர்களையும் கடுப்படைய செய்துள்ளது. எடப்பாடி யார் பேச்சையும் கேட்காமல் காங்கிரஸ் கட்சியின் சுனில் கனுகோல் பேச்சை கேட்டுக்கொண்டு ஆடி வருகிறார் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் தோல்விகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை. 


தற்போது அதிமுகவில் நடக்கும் அதிகார மோதல் சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கி உள்ளனர். இந்த நெருக்கடியின் விளைவாகவே அரசியல் மாற்றங்கள் ஏற்பட போவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். ஒருங்கிணைந்த அதிமுக மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்.என்ற குரல்கள் அதிமுக தொண்டர்களிடையே ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. 

அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் சேர்க்கபட வேண்டும். தலைமை தொடர்பான முடிவுகளில் மாற்றங்களை செய்ய வேண்டும். அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும். கட்சி நிர்வாகிகளிடம் கேள்வி கேட்பது மட்டுமின்றி அவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். அதிமுக பெரிய கூட்டணியை அமைக்க வேண்டும். இந்த கூட்டணிக்காக எடப்பாடி இறங்கி வர வேண்டும் என்றெல்லாம் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு உள்ளனவாம்.

இந்த நிலையில்தான் அதிமுக தோல்விக்கு நான் காரணம் இல்லை, நிர்வாகிகள்தான் காரணம் கூறிவருகிறாராம்  எடப்பாடி . நிர்வாகிகள் சரியாக வேலை செய்யவில்லை. நான் ஒரு தலைவராக உத்தரவுகளை சரியாகவே பிறப்பித்தேன். ஆனால் நிர்வாகிகள் சரியாக வேலை செய்யவில்லை என்று எடப்பாடி கூறி வருகிறராம்.அதிமுகவின் தோல்விக்கான காரணங்களை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.  இந்த கூட்டம்தான் அதிமுகவில் இருக்கும் அதிகார மோதலை தற்போது ஜாதி ரீதியிலான மோதலாக மாற்றி உள்ளதாம். 

சிதம்பரம் மற்றும் மதுரை நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் 4வது நாளாக தேர்தல் முடிவுகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை செய்தார். அதிமுகவிற்கு பலர் சரியாக வேலை செய்யவில்லை.தேர்தல் களத்தில் பணிகளை செய்யவில்லை. மதுரைக்கு மட்டும் 800 கோடிக்கு செய்து இருக்கிறோம். ஆனால் மதுரையில் நமக்கு ஏன் வாக்கு வரவில்லை. ஏன் தேர்தல் பணிகளை செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். மதுரை மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூவை நோக்கி அவர் இதை கேட்டுள்ளார்.

இதுகுறித்து  செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்துள்ளார். நிர்வாகிகள் அனைவரும் பம்பரமாக தான் பணியாற்றினோம் இதுக்கு மேல் எப்படி ஒரு கட்சியில் வேலை பார்ப்பது? மதுரை மாவட்டத்தில் மட்டும் வாக்கு குறையவில்லை. 800 கோடி திட்டம் கொடுத்தும் ஓட்டுவரலைனா நம்ம என்ன புரட்சிதலைவரா?? புரட்சிதலைவியா? முக்கியமாக எடப்பாடியை விமர்சனம் செய்யும் வகையில் செல்லூர் ராஜு பேசி உள்ளார்.மேலும் இங்கு ஒரு சமூகத்தினர் மோடி தான் பிரதமராக வவேண்டும் என நினைத்து வாக்களித்துள்ளார்கள் அதவாது முக்குலோத்தோர் சமூகம்  தினகரன் மற்றும் பன்னீர்செல்வம் பின் நின்றார்கள் என சொல்லாமல் சொல்லிவிட்டார். 

இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான் சசிகலா,தினகரன் பன்னீர்செல்வம் ,வைத்தியலிங்கம், போன்றோர் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அனைவரையும் புறக்கணித்துவிட்டார். விராலிமலை விஜயபாஸ்கர் செல்லூர் ராஜு போன்றோருக்கு அங்கு பெரிய அளவில் மதிப்பு தருவதில்லை, இந்த நிலையில் அதிமுக தமிழகம் முழுவதும் தோல்வியை தழுவியது குறிப்பாக அதிமுக கோட்டை என மார்தட்டி கொள்ளும் கோவை பகுதியில் டெபாசிட் வாங்க திணறியது. தேர்தல் தோல்விக்கு அவர் எல்லா பிரிவினரையும் விட்டுவிட்டு முக்குலோத்தோர் பிரிவை சேர்ந்த செல்லூர் ராஜூவை கேள்வி கேட்பதை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். 

ஏற்கனவே முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலாவை எல்லாம் ஓரம்கட்டி எடப்பாடி.. இப்போது செல்லூர் ராஜூவை ஓரம்கட்ட பார்க்கிறார் என்ற குரல்கள் கேட்க தொடங்கி உள்ளனநிர்வாகிகள் பதில்; ஆனால் கட்சியில் சிலநிர்வாகிகளோ .. எடப்பாடி வேண்டுமானால் அப்படி இருக்கலாம்.. ஆனால் கட்சியில் ஜாதி மோதல் இல்லை. உதாரணமாக சமீபத்தில் எடப்பாடியை 6 தலைவர்கள் சந்தித்து நெருக்கடி கொடுத்தனர். அதில் 3 பேர் எடப்பாடி ஜாதிதான்.அப்படி இருக்க இங்கே ஜாதி மோதல் இருக்கிறது என்று சொல்ல முடியாது. இது அதிகார மோதல்தான். எடப்பாடியின் செயல்பாடு தலைவராக சிறப்பாக இல்லை என்று புகார்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.