நடிகர் ரஜினிகாந்த் ஜெய்லர் திரைப்பட வெற்றியை தொடர்ந்து படம் வெளியாவதற்கு முன்னரே இமயமலைக்கு புறப்பட்டார் என்ற செய்தி வெளியானது மேலும் இமயமலையில் உள்ள பாபா குகையில் நடிகர் ரஜினிகாந்த் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலும் தியானத்தில் ஈடுபட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது இதனைத் தொடர்ந்து அமர்நாத், கேதர்நாத் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் வழிபாட்டு தலங்களையும் தரிசித்து விட்டு உத்திர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத்தை ரஜினிகாந்த் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத்தை சந்தித்ததும் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதாவது சில இடதுசாரி சமூக வலைதள வாசிகள் பலரும் தன்னைவிட வயது குறைந்த தலைவரின் காலில் ரஜினிகாந்த் விழுந்ததின் பின்னணி என்ன? என்ற கேள்விகளை ஒரு பக்கம் எழுப்பி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவாளர்கள் ரஜினிகாந்த் ஒரு ஆன்மீகவாதி என்பதால் தான் அவர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளர் வன்னி அரசு இது குறித்து தனது பதிவை தெரிவித்துள்ளார் 'துக்ளக் படிப்பவர்களை பெருமையாக பேசிய ரஜினிகாந்த் வலதுசாரிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு பாஜகவினர் பலர் ஆதரவு தெரிவித்ததோடு தமிழருவி மணியன் போன்ற அரசியல் புரோக்கர்களும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர் ஆனால் உடல் நலத்தை காரணம் காட்டி அரசியலுக்கு வரமாட்டேன் என தெரிவித்துவிட்டு தற்போது வலதுசாரிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என நடிகர் ரஜினிகாந்தின் மீது குற்றம் சாட்டினார்.
இதோடு விட்டு வைக்காமல் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை செயலாளர் வன்னியரசு தனது கருத்தை தெரிவிக்கையில் தற்போது ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து படத்தை புரமோஷன் செய்வதற்காக ரஜினிகாந்த் இமயமலை சென்று இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அவர் பாஜக ஆளும் மாநில ஆளுநர்களை சந்தித்து பேசி வருகிறார் மேலும் உத்தர பிரதேச முதல்வர் யோகி உடன் ஜெய்லர் படத்தை சேர்ந்து பார்க்கப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டது பிரமோஷன் என்று அனைவரும் நினைக்க வேண்டாம் என்று கூறியதோடு ஜெய்லர் பட ப்ரமோஷன் என்று கூறிக்கொண்டு ரஜினி இவ்வாறு செயல்படுவது பாஜகவின் எதிர்ப்பை மக்கள் மத்தியில் குறைப்பதற்கு தான் என்று நடிகர் ரஜினிகாந்த் மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்தார்.
நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது பாஜகவுடன் நெருங்கி பழகி வருவது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை எனவும் மேலும் பாஜகவில் இருக்கும் தலைவர்களுடன் உறவாடி வருவது மேலும் தேர்தல் நேரத்தில் பாஜக தேசிய தலைவர்களுடன் சந்தித்து ரஜினிகாந்த் பேசுவது ஆகியவை பாஜகவிற்கு வரும் தேர்தலில் ஆதரவை பெருக்கும் எனவும், இதனை எதிர்க்கட்சி முகாமில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஏற்கனவே பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் தேர்தல் நேரத்தில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என விடுதலை சிறுத்தைகள் பற்றி புலம்பி வருவதாக சில அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இதுமட்டுமிலால் சனாதனத்தை ஒழிக்கிறேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு நடத்திவரும் நிலையில் இப்படி இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார், நிறைய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நெற்றி நிறைய பட்டையுடன் சனாதன தர்மத்தை இப்படி கடைபிடிப்பது வேறு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பின்னடைவு எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.