24 special

ஜாக்கிரதை...! களம் நாம் எதிர்பார்த்தது போல் இல்லை - நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த மெசேஜ்...!

Mkstalin
Mkstalin

தமிழகம் பாஜக சார்பில் நடைபெற்று வரும் நடைபயணம் தென் தமிழக மக்கள் மனதில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அதனை உணர்ந்த திமுக வட்டாரம் அந்த தாக்கத்தை நமக்கு சாதகமாக மாற்ற வேண்டும் என்று எண்ணத்தில் திடீரென தங்களது பூத் கமிட்டி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டத்தை ஏற்பாடு செய்தது. 


அதில் இரண்டாவது கூட்டம் தென் தமிழகத்தின் அனைத்து முகவர்களை ஒன்றிணைக்கும் வகையில் ராமநாதபுரத்தில் நடைபெற்றது அதற்காக மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை அன்று தனது மாவட்ட செயலாளர்களை காணொளி காட்சி மூலமாக சந்தித்தார். தனது கட்சியின் நிர்வாகிகளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் காணொளி காட்சி மூலமாக சந்தித்து, நம் கலைஞர் கருணாநிதி 150 ஆண்டுகளில் செய்ய வேண்டிய நலத்திட்டங்கள் ஒவ்வொன்றையும் தனது 80 ஆண்டு காலத்தில் செய்து முடித்துள்ளார், இதனால் அவரது நூற்றாண்டு விழாவை திமுகவின் சார்பிலும் திராவிட மாடல் அரசின் சார்பிலும் தற்போது கொண்டாடி வருகிறோம். 

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வள்ளுவரின் சிலை வரை தமிழகமெங்கும் பாரம்பரிய மற்றும் பண்பாட்டு அடையாளங்களை நிறுவியவர் நம் கலைஞரே அவர் மேற்கொண்ட திட்டங்கள் ஒவ்வொன்றை பற்றி கூற வேண்டும் என்றால் இன்று ஒரு நாள் பத்தாது. 

கலைஞர் கருணாநிதி அவர்கள் மேற்கொண்ட ஒவ்வொரு திட்டங்களை தான் தற்போது மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது அந்த வகையில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்வது நம் கலைஞர் செயல்படுத்திய பண்பாட்டு அடையாளங்கள். ஆனால் அவற்றை தாங்கள் நிறைவேற்றியதாக சிலர் பறைசாற்றுகின்றனர் எனவே கலைஞர் செய்த சாதனைகள் மற்றும் படைப்புகள் ஒவ்வொன்றையும் திரும்பத் திரும்ப இளைய தலைமுறைகளிடம் எடுத்துக் கூற வேண்டும். 

இந்த செயலை செய்வதற்காகவே திமுகவின் தலைமை கழக மாவட்ட நிர்வாகிகளுக்கு மட்டுமின்றி கட்சியின் சார்பு அணிகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் பணிகளை வழங்கியுள்ளது. அதோடு இந்த ஆண்டு நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75 ஆவது ஆண்டு விழாவையும் கலைஞரின் நூற்றாண்டு விழாவும் ஒன்றாக வருகிறது. ஆதலால் கலைஞரின் நூற்றாண்டு விழாவை பவள விழாவுடன் சேர்த்து செப்டம்பர் 17ஆம் தேதிக்கு மேல் கொண்டாடலாம் எனவும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திராவிட மாடல் மறுபடியும் ஆட்சி அமைத்து 2024  ஜூன் மூன்றாம் தேதி நடைபெற உள்ள கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை கொண்டாட காணிக்கை செலுத்த வேண்டும் என்று தனது கழக நிர்வாகிகளிடம் உரையாற்றினார். 

இந்த நிலையில் மேலும் தனது கழக நிர்வாகிகளிடம் உரையாற்றிய முதல்வர் மு க ஸ்டாலின், தேர்தல் களம் பற்றி சில ஆலோசனைகளையும் காலத்தின் நிலவரங்கள் பற்றியும் எடுத்துரைத்துள்ளார். அதாவது தற்போது இருக்கும் கள நிலவரம் நமக்கு சாதகமானதாக இல்லை! நாம் எதிர்பார்ப்பது போல் இல்லை! வேறு மாதிரி இருக்கிறது எனக் கூறியதாகவும் எதற்கும் அனைத்திற்கும் எச்சரிக்கையாக இருங்கள் எந்த நேரத்தில் என்ன சம்பவம் நடக்கும் என்று யூகிக்க முடியவில்லை. 2024 ஆம் ஆண்டு தேர்தல் நாம் எதிர்பார்ப்பது போல் இருக்காது அனைத்திற்கும் தயாராக வேண்டும் என்று ஸ்டாலின் எச்சரிக்கை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் கள நிலவரம் வேறு தற்போது பாஜக கூட்டணிக்கு சாதகமாக இருப்பதால் திமுக தலைமை கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் சில தகவல்கள் கசிகின்றன.