24 special

கூகுளே சொல்லிடுச்சி... அதனால நோ ஜாமின்...உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Senthil Balaji
Senthil Balaji

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் நீதிமன்றம் மருத்துவ காரணத்திற்காக ஜாமின் வழங்க முடியாது என்று உத்தரவிட்டது. இதற்கு பிறகு ஏன் மருத்துவமனையில், எப்போது புழல் சிறைக்கு செல்வார்? இன்னும் எத்தனை நாட்களுக்கு சிறையில் இருப்பார் என்று தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.


கடந்த ஜூன் மாதம் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஐகோர்ட்டு கடந்த மாதம் 19-ந் தேதி தள்ளுபடி செய்தது. அதன் பிறகு செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மேல் முறையீடு செய்தார். இதற்கிடையில் தொடர்ந்து சிறையில் இருந்து வரும் அவரை விசாரித்த அமர்வு நீதிமன்றம் காவலை 11வது முறையாக நீட்டித்து டிசம்பர் 4ம் தேதி வரை சிறையில் இருக்க உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் கடந்த 20ம் தத்தி விசாரணைக்கு வந்த பிறகு செந்தில்பாலாஜி தரப்பு மற்றும் அமலாக்கத்துறை தரப்பு வாதத்தை கேட்டு நவ., 28ம் தேதி ஒத்திவைத்து.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, ''இன்றைய வாதத்தின் போது பக்கவாதம் வர வாய்ப்புள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு கூறியது. இதற்கு நீங்கள் கூறுவது போல சீரியசாக பிரச்சனை ஏதும் இல்லை. தற்போது பை பாஸ் சிகிச்சை அப்பண்டிக்ஸ் போல சாதாரணமாகிவிட்டது. chronic பிரச்சனைகளை மருந்துகளால் தீர்க்க முடியும் என google கூறுகிறது'' என நீதிபதிகள் தெரிவித்தனர். இலாகா இல்லாத அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. சாதாரண ஜாமீன் மனு தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தி, வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமலாக்கத்துறை ஒரு முடிவில் உள்ளது. அதாவது ஜாமின் கொடுத்து செந்தில் பாலாஜி வெளியே சென்றால் அதிகார பவரை வைத்து சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக வாதத்தை தொடர்ந்து முன் வைக்கின்றனர். ஆனால், முதலமைச்சரே செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராகவும் அறிவிக்காமல் தண்டனையை அனுபவிக்கட்டும் போல் செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி "உடல் நிலையை காரணம் காட்டி பிணை கேட்டிருந்த அமைச்சர்  செந்தில்பாலாஜியின் கோரிக்கையை ஏற்க மறுத்தது உச்ச நீதி மன்றம். பிணை கொடுக்கும் அளவிற்கு உடல்நிலை அப்படி ஒன்றும் மோசமில்லை என்றும் தேவையெனில் வழக்கமான பிணை மனுவை விசாரணை நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும் அறிவுறுத்தல். மீண்டும் புழல் சிறைக்கு செல்வாரா அமைச்சர் செந்தில் பாலாஜி? இன்னும் எத்தனை நாட்கள் சிறையில் இருப்பார் தமிழக அமைச்சர்? இது தான் திராவிட மாடலா?'' என கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் விமர்சகர்களும் மருத்துவமனையில் ஜாமீனுக்காக நாடகம் ஆடியது போதும் புழலுக்கு வண்டியை கிளப்புங்கள் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.