
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு ரசிகர்களையும் பெயரையும் பெற்றுள்ள நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் மும்முறமாக நடித்த வருகிறார். முன்னதாக அவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெரும் தோல்வியை அடைந்தது, அதனால் அடுத்து ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் கங்குவா என்ற படத்தில் தீவிரமாக தனது உடலை உணர்த்துக் கொண்டு படபிடிப்பு கவனம் செலுத்தி வருகிறார். இப்படி படப்பிடிப்பில் தனது முழு கவனத்தையும் செலுத்திய சூர்யாவிற்கு தற்போது தமிழகத்தின் நிலைமை என்ன மக்கள் என்ன அவதிப்படுகிறார்கள் என்பது கூட தெரியாமல் போய்விட்டது. திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது அப்போதைய தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிக்கு குடைபிடிக்கும் வகையில் சில சினிமா பிரபலங்கள் அன்றைய ஆளுங்கட்சிக்கு எதிராக விமர்சனங்களையும் குற்றசாட்டுகளையும் முன்வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதும் சமூக வலைதளத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஆட்சியை பெற்ற பிறகு திமுகவோ மொத்தமாக அனைவரையும் ஏமாற்றிவிட்டது, இன்றளவும் அவர்களுக்கு வேண்டிய கோரிக்கைகளும் வாக்குறுதிகள் கொடுத்தவற்றை நிறைவேற்றாமல் இழுத்தடித்துக் கொண்டே வருகிறது. ஆனால் இவை அனைத்தையும் நான் பார்க்கவில்லை எனது கண்கள் கட்டப்பட்டுள்ளது என்று படத்தில் வரும் டயலாக்கை போல ரீல் நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார் நடிகர் சூர்யா, இதனால் தமிழக மக்களும் தற்போது அதனை கவனித்து எங்கே போனார் சூர்யா எதற்கும் துணிந்தவனை காணவில்லையே என்ற பல வகையான விமர்சனங்களை சமூக வலைதளத்தில் முன்வைத்து வந்தனர் அதோடு மீட்டருக்கு எதிராக போராடிய சூர்யா தற்போது வீட்டை எதிர்த்து ஏன் போராடவில்லை, அதனால் தற்போது மக்களின் ஆதரவை தன் பக்கம் திருப்பிக் கொள்வதற்கும் அவர்களின் கோபத்தை தணிப்பதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் அதன்படி, சூர்யா தலைமையில் நடந்து வரும் அகரம் என்ற அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்து அதில் கலந்து கொண்ட மாணவிகள் இடையே உரையாற்றினார்.
அப்பொழுது, அகரம் ஆரம்பிக்கப்பட்ட 15 வருடங்களில் 15 ஆயிரம் பேர் படித்து முடித்துள்ளனர் ஆனால் இதில் 70% பேர் பெண்கள் எனது தந்தை காலத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் அதிக மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெறும் எண்ணிக்கையில் பெண்களை அதிகமாக உள்ளார்கள் கல்லூரியில் இருந்து பட்டம் பெரும் மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது அதற்குப் பிறகு அவர்களது கனவு எங்கே செல்கிறது என்பதுதான் தற்போது கண்ணுக்கு தெரியாத கேள்வியாக இருந்து கொண்டே வருகிறது, என்னைச் சுற்றியுள்ள பெண்களை அதிக சக்தி வாய்ந்த பெண்களாகவே நான் பார்த்து வருகிறேன் பெண்களால் முடியாதது ஒன்றுமே இல்லை உடல் வலிமையை நம்பி உள்ள விளையாட்டுகளிலும் தற்போது பெண்கள் சாதித்து கொண்டு வருகிறார்கள்.
இது வெறும் ஆரம்பம் மட்டும் ஆனால் உங்கள் மனதில் நீங்கள் என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதுவாக உங்களால் நிச்சயமாக மாற முடியும் ஆண்களை விட உழைப்பதில் அதிக வலிமை பெற்றவர்கள் பெண்கள் தான், மேலும் உங்களுக்கு உத்வேகம் கிடைக்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் பெப்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான இந்திரா நூயி அவர்கள் எழுதிய மை லைஃப் ஃபுல் என்ற புத்தகத்தையும் வாங்கி படியுங்கள் அதில் பல தகவல்கள் உள்ளது, அதன் மூலம் உங்களுக்கு மோட்டிவேஷன் கிடைக்கும் என்றும் கூறியிருந்தார். இதனை அடுத்து சூர்யா பெண்கள் மத்தியில் இப்படி மாசாக பேசிய வீடியோக்களை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது அது மட்டும் இன்றி திமுகவை நோக்கி மக்களுக்கு ஆதரவான கேள்விகளை கேட்க முடியாமல் தற்போது இந்த ரூட்டில் சூர்யா திரும்பி விட்டார் என்ற விமர்சனங்களும் இதற்கு எழுந்துள்ளது.