24 special

முக்கிய லீடை பிடித்த என் சி பி... உண்மையைக் காக்கிய ஜாபர் சாதிக்!

JAFFER SADIQ
JAFFER SADIQ

போதை கடத்தல் மன்னனாக தலைமறைவாக இருந்து வந்த ஜாஃபரை சமீபத்தில் என் சி பி அதிகாரிகள் கைது செய்தனர். இதனை அடுத்து அவனை தன் காவலில் எடுத்த என்சிபி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டது போதை கடத்தல் மூலம் பெற்ற பணத்தை சினிமாவில் செலவழித்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ள ஜாபர் சாதிக் அடுத்தடுத்து பல தகவல்களை வாக்குமூலத்தில் கொடுத்து வருவதாக என்சிபி அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசந்துள்ளது. அப்படி ஜாபர் கொடுத்த வாக்குமூலத்தின் மூலமே அவனது கூட்டாளியான தொழிலதிபர் சதானந்தத்தை போலீசார் கைது செய்தனர். அதோடு அவனிடம் மேற்கொண்ட விசாரணையாலும் சென்னையில் போதை கடத்தல் குடோனாக ஜாபர் சாதிக் மற்றும் சதானந்தம் பயன்படுத்தி வந்த இடத்தையும் அதிகாரிகள் கண்டறிந்து அங்கும் தனது சோதனையை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.


இந்த விவகாரம் தற்போது தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் அனைவரும் தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கிய புள்ளியாக வளம் வந்தவர்கள் என்பதும் ஜாஃபர் சாதிக் திமுகவின் முக்கிய பிரிவு துணை செயலாளராக பொறுப்பு வகுத்துள்ளார்.மேலும் அவரது சகோதரர் சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பொறுப்பிலும் இருந்துள்ளார் இவர்கள் இந்த இரண்டு அதிகாரத்தை வைத்துக்கொண்டு தமிழகத்தின் இத்தனை வருடங்களாக போதை கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கிடையில் ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை இட்ட பொழுது பல போலி பாஸ்போர்ட்டுகள் மற்றும் ஜாபரின் வீட்டிற்கு சினிமா பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் அடிக்கடி வந்து சென்றதையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஜாபர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் பொழுது அவருடன் அரசியல் பிரமுகர்கள் சிலரும் சென்று வந்ததாக என் சி பி விசாரணையில் தெரியவந்துள்ளது, அதுமட்டுமின்றி ஜாபர் சாதிக்கு விவகாரத்தில் மணல் வியாபாரியாக உள்ள கரிகாலனுக்கும் முக்கிய தொடர்பு இருப்பதாகவும் அவரை தொடர்ந்து திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்களும் வரிசையாக சிக்க உள்ளார்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

சமீபத்தில் கூட அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் போதை கடத்தல் விவகாரத்தில் தமிழகத்தின் முக்கிய குடும்பம் மாட்டப் போகிறது அந்த குடும்பத்தை பிரதமர் மோடி நினைத்தால் கூட காப்பாற்ற முடியாது ஏனென்றால் இது போதை விவகாரத்தையும் தாண்டி உலக அளவில் கவனிக்கப்பட்டு வருகின்ற ஒரு விவகாரம் இதில் நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கும் அதற்குப் பிறகு உலகளவில் பல பிரச்சனைகளையும் நாம் சந்திக்க நேரிடும் ஏனென்றால் இது நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் போதை கடத்தல் குறித்த தகவலை முதலில் தெரிவித்தனர் அதனால் என் சி பி இதனை விவகாரத்தை நிச்சயம் எளிதில் கைவிடாது என்று கூறினார். இந்த நிலையில் என் சி பி அதிகாரிகள் ஜாபர் சாதிக்கு டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து அயப்பாக்கத்தில் இருக்கக்கூடிய தலைமை அலுவலகத்தில் வைத்து ஜபாரிடம் என் சி பி முக்கிய அதிகாரி அரவிந்த் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 

மேலும் தமிழகத்தில் இவர்களின் கூட்டாளிகள் எல்லாம் யார் யார் எங்கெல்லாம் குடோன் அமைத்து கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார் என் சி பி அதிகாரி! அதோடு இவருக்கு மதிய உணவாக மட்டன் பிரியாணியை வாங்கி கொடுத்து பல உண்மைகளை ஜாஃபரிடமிருந்து கறந்துள்ளனர், மேலும்  ஜாபர் சாதிக்கிடம் விசாரணை மேற்கொள்ள தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளை அனுமதிக்காமல் டெல்லி அதிகாரிகளே தீவிரம் காட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி மட்டன் பிரியாணி உண்ட பிறகு ஜாபரிடம் தீவிர விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர் மேலும் அவர் வாக்குமூலத்தை தன்னுடன் யார் யார் கூட்டாளியாக இருந்துள்ளார் யாரிடம் எல்லாம் போதை பொருள் கடத்தல் மூலம் பெற்ற பணத்தை கொடுத்து வைத்துள்ளேன் என்ற தகவலையும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.