24 special

பாகிஸ்தான் வயிறை எரியவிட்ட சூரியகுமார் யாதவ் ! மைதானத்தில் பாகிஸ்தான் அமைச்சரை ஓடவிட்ட மாஸ் சம்பவம்

SHAHBAZSHARIF,SURYAKUMARYADAV
SHAHBAZSHARIF,SURYAKUMARYADAV

நடந்து முடிந்த ஆசியா கிரிக்கெட் கோப்பை போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் போட்டி அனைவரின் பிபியை அதிகரிக்க வைத்தது. மேலும் லீக் சுற்றில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தான் அணியினர் கடும் கோபத்திற்கு ஆளானார்கள். இந்த நிலையில் இறுதி போட்டிக்கு முன்பு இரு அணி கேப்டன்கள் வைத்து போட்டோ சூட்டும் நடத்தப்படவில்லை என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து இறுதிப்போட்டியில் டாஸ் போடும்போது ரவி சாஸ்திரி தான் கேப்டன்கள் இடம் நேர்காணல் எடுக்கப் போகிறார் என தெரிந்தவுடன், பாகிஸ்தான் ஒரு வினோத கோரிக்கையை வைத்தது.


அதில், நாங்கள் இந்தியர்களுடன் பேச மாட்டோம் என்றும் இறுதிப் போட்டியில் நேர்காணல் செய்ய பாகிஸ்தான் அல்லது வேறு நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர்களை நியமிங்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்திருக்கிறதுஇந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த வக்கார் யூனிசை நியமித்து பாகிஸ்தான் அணி கேப்டனை நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. 

 இந்த சூழலில் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் 9வது முறையாக ஆசிய கோப்பை இந்தியா கைப்பபோட்டி முடிந்ததும் மேடைக்கு வந்தபாகிஸ்தான் அமைச்சர்  நக்வியிடமிருந்து கோப்பையை பெற்றுக் கொள்ள இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மறுப்பு தெரிவித்தார். 

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய கவுன்சிலின் தலைவர் நக்வி மேடையில் 20 நிமிடம் காத்திருந்தார். அதன் பின்னர் இந்திய அணி வீரர்கள் வராததால் கோப்பையையும், பதக்கங்களையும் அவரே எடுத்துச் சென்றுவிட்டார். துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 147 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.5 ஓவர்களில் இலக்கை தாண்டி 150 ரன்கள் அடித்து வெற்றியை சாத்தியமாக்கியது.இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து ஆசியக் கோப்பையைப் பெற இந்தியா மறுத்துவிட்டது. நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும், பாகிஸ்தான் அமைச்சராகவும் உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

பின்னர் மேடைக்கு வந்த இந்திய அணி வீரர்கள் கோப்பையை பெறாமலயே கொண்டாடினர். இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா, “நாங்கள் அவரிடமிருந்து கோப்பையை பெற வேண்டாம் என்று முடிவு செய்தோம். ஆனால் அதற்காக அவரே கோப்பையையும் பதக்கங்களையும் எடுத்துச் செல்ல முடியும் என்று அர்த்தமல்ல. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவை விரைவில் இந்தியாவுக்குத் திருப்பித் தரப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இது குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறும்போது, “ஒரு அணியாக நாங்கள் (மொஹ்சின் நக்வியிடமிருந்து) கோப்பையை பெற வேண்டாம் என்று முடிவு செய்தோம். எங்களை யாரும் அப்படிச் செய்யுமாறு சொல்லவில்லை. ஆனால், போட்டியை வெல்லும் அணி கோப்பைக்கு தகுதியானது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் காலித் அல் ஜரூனியிடமிருந்து கோப்பையைப் பெறத் தயாராக இருப்பதாக இந்திய அணி அதிகாரிகளிடம் தெரிவித்தது. இருப்பினும், பாகிஸ்தான் அமைச்சார் நக்வி இதற்கு அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது.போராக இருந்தாலும் போட்டியாக இருந்தாலும் பாகிஸ்தானை அடிப்போம் என விரட்டி விரட்டி ஓடவிட்டுள்ளது இந்தியா!