
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 52 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.கரூரில் தவெக மாநாட்டில் நடைபெற்ற கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது: இந்த சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்
பொதுவாக எடிஜிபி டேவிட்சன் பொது இடங்களில் அதிகம் பேசாதவர் எந்த பிரச்சினையிலும் பெரிதாக தலைகாட்டாதவர் அவரே நேரடியாக வந்து பேசியது தற்போது பெரிய கவனத்தை திருப்பியுள்ளது.
அவர் கூறுகையில் விஜய்க்கு வழங்கபட்டபாதுகாப்பில் எந்தவித குறையும் இல்லை , சுமார் 500 காவலர்களும் உயர் காவல் அதிகாரிகளும் எஸ்,பி தலமையில் பந்தோபஸ்து ஏற்பாடுகளை செய்தார்கள், என்பதையும் கூட்டம் கூடியபோதும் காவலர்கள் அதனை சமாளித்தார்கள் என்பதையும் சொல்கின்றார்
ஆனால் விஜய் பேசதொடங்கி மக்கள் ஆர்வமாக முன்னால்சென்றபோது ஏதோ நடந்திருகின்றது அதுபற்றி விசாரணையில் தெரியவரும் என முடித்து கொண்டார் ஆக விசாரணை அவசியம் என அவரும் ஒப்புகொள்கின்றார்
மேலும் விஜய் உரையாற்றியபோது மின் தடை செய்யப்பட்டது என்பது திட்டவட்டமாக மறுக்கப்படுகிறது. மேலும், விஜய் வருவதற்கு முன்பு மரத்தின் மீதும், டிரான்ஸ்பர் மீதும் சிலர் ஏறியதால், போலீசாரின் அறிவுறுத்தலின்படி மின்சாரம் சற்று நேரம் துண்டிக்கப்பட்டு, அவர்களை மரத்தின் மீதிருந்தும், டிரான்ஸ்பார்மர் மீதிருந்தும் அப்புறப்படுத்தி உடனே மின்சாரம் வழங்கினோம். ஆனால், விஜய் வரும்போது மின் தடை செய்யவில்லை” என்றார். மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி,
இப்படி அரச தரப்பு முதல் கட்ட தகவலை சொல்லி முடித்து கொண்டது, விசாரணை நடக்கட்டும் முடிவு வரட்டும் என்பதை சொல்லிவிட்டார்கள், இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:- முதலில் இந்த சம்பவத்துக்கு தமிழக அரசு தான் காரணம். எதோ பல தவறுகள், சில குளறுபடிகள் நடந்திருக்கிறது. மக்கள் கூட்டத்தை சரியாக கையாள்கின்றோமா என்று பார்த்தால் இல்லை.. எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீது தான் வேலுச்சாமிபுரம் என்பது மிக குறுகலான இடம். அங்கு ஏன் போலீசார் அனுமதி கொடுக்க வேண்டும். விஜய் பேசும் போது யாரோ செருப்பை கொண்டு வீசுகிறார்கள், கரண்டை கட் செய்கிறார்கள்.விஜய் மீது அவரது ரசிகர்களே வீச மாட்டார்கள்.. இப்போது அமைந்திருக்கும் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கை இல்லை. சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். லாக் அப் டெத் வழக்கில் மட்டும் சிபிஐ விசாரணை கோரும் முதல்வர் இந்த சம்பவத்தில் ஏன் அப்படி சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார். டேவிட்சனும் கடைசியில் ஏதோ நடந்தது அது விசாரணையில் தெரியவரும் என்கின்றார் அண்ணாமலையும் அது தெளிவாக தெரிய சிபிஐ விசாரணை அவசியம் என்கின்றார். ஒரு பக்கம் ஆளுநர், மற்றொரு பக்கம் மத்திய அரசு என என மாறி மாறி தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதுஇதில் மிகப்பெரிய உண்மைகள் வெளிவரலாம் என்று சொல்கிறார்கள் டெல்லி வட்டாரங்கள்!