24 special

கரூர் சம்பவத்தால் மொத்தமாக மாறிய தமிழக அரசியல் களம்! கூட்டணியில் விழுந்த அடி! திமுகவுக்கு இடியை இறக்கிய செய்தி

MKSTALIN,VIJAY
MKSTALIN,VIJAY

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் சொல்ல, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் கரூர் வந்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின்பேரில் கேசி வேணுகோபால் கரூருக்கு வந்துள்ளார். 


கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூர்  வேலுசாமிபுரத்தில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டு நின்றிருந்தது.. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, பிரதமர் மோடி, ஜனாதிபதி முதல் பல்வேறு மாநில தலைவர்களும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.

அந்தவகையில் காங்கிரஸ் எம்பியும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியும் தன்னுடைய இரங்கல் பதிவில், "கரூரில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் கரூர் அசம்பாவிதம் குறித்து பல்வேறு சந்தேகங்ககளை அரசியல் கட்சி தலைவர்கள் எழுப்பி வருகிறார்கள். தமிழக அரசு மீது நேரடி குற்றசாட்டை வைத்து வருகிறார்கள். மேலும் ஒரு கூட்டத்துக்கு அனுமதி தரும்போது ஆம்புலன்ஸ் செல்ல வழியிருக்கிறதா என பார்க்க வேண்டும். விஜய் பேசும்போது விளக்குகள் அணைந்தன, செருப்புகள் வீசப்பட்டன. ஆளில்லாத ஆம்புலன்ஸ்கள் வந்தன. இரவோடு இரவாக பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது.உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல 40 ஆம்புலன்ஸ்கள் தயார் செய்து, திமுக மருத்துவர் அணி என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணம் ஏற்பட்டபோது, அங்கு செல்லாத முதல்வர், இரவோடு இரவாக இங்கு வந்து அஞ்சலி செலுத்துகிறார். 

பிரச்சார கூட்டத்துக்கு காவல் துறை போதிய பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். பாதுகாப்புக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்தால் அவர்கள் அதை கடைபிடித்து இருக்கவேண்டும். கடைபிடிக்க முடியாத கட்டுப்பாடுகள் இருந்தால், அவர்கள் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கலாம். என ஆளும் கட்சி திமுக மீது குற்றசாட்டுகளை வைத்துள்ளார்கள். மேலும் இது தமிழக அரசின் சட்ட ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது

இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று(நேற்று) ஆணையத் தலைவர் விசாரணை நடத்தியபோது, அவரிடம் புகார் தெரிவித்தவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இதனால், ஒரு நபர் ஆணையம் நேர்மையாக விசாரணை மேற்கொள்வதாக தெரியவில்லை. எனவே, சிபிஐ விசாரணை வேண்டும் என கூறி வருகிறார்கள். 

இந்த நிலையில் தான் தவெக தலைவர் விஜய்க்கு போன் செய்து ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.. இருவரும் சுமார் 15 நிமிடங்கள் போனில் பேசியதாக தெரிகிறது.. கரூரில் என்ன நடந்தது என்று கேட்டறிந்த ராகுல்காந்தி, விஜய்க்கு ஆறுதல் சொல்லி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த ராகுல்காந்தி அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது.

, ராகுல் காந்தி விஜய்யிடம் போனில் பேசியிருப்பது, இரு விதமான விவாதங்களை அரசியல் களத்தில் கிளப்பி விட்டுள்ளது.. அதாவது, தமிழக வெற்றி கழகத்தின் குற்றச்சாட்டுகளை நீர்த்துப் போக செய்யும் வகையில், உண்மைகளை தடுப்பதற்கு , நடிகர் விஜய்க்கு அழுத்தம் கொடுக்க ராகுல் காந்தி மறைமுக முயற்சி எடுத்து வருவதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது..

விஜய்யுடன் கூட்டணி வைக்கலாம் என்று ராகுலிடம், தமிழக காங்கிரஸின் சில தலைவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி வரும் நிலையில், விஜய்யுடன் ராகுல் போனில் பேசியிருப்பது, ஒருவேளை கூட்டணிக்கான அச்சாரமா? என்றும் கேட்டு வருகிறார்கள்.