24 special

தமிழக ஆளுநர் செய்த "தரமான சம்பவம்" கதிகலங்கி நிற்கும் கூட்டம்..!

Rn ravi
Rn ravi

தமிழக ஆளுநர் கான்வாய் மீது கருப்பு கொடி கொண்டு தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் ஆளுநர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசியவர்கள் என அனைவரும் தற்போது தாங்கள் எப்போது கைது செய்யப்படுவோம் என அச்சத்தில் இருக்கிறார்களாம் அதற்கு ஆளுநர் குறித்து அவதூறாக பேசிய பசும்பொன் பாண்டியன் என்ற நபர் கைது செய்யபட்டதில் இருந்தே தெரியவந்துள்ளது.


இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு, மதுரை பிபி.சாவடி பல்லவன் நகர் 3-வது தெருவைச் சேர்ந்த அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் நிறுவனத் தலைவரான வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன்(56) தனியார் டிவியின் யூடியூப் சேனலுக்கு பிப்.4-ம் தேதி அளித்த பேட்டி ஒன்றை அளித்தார்.அதில் ஆளுநருக்கு எதிராக கண்ணியக் குறைவாகவும் இழிவான வார்த்தைகளையும் பயன்படுத்தி பேசியுள்ளார்.

இதனை கவனித்த ஆளுநர் மாளிகை நேராக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது.இதையடுத்து ஆளுநருக்கு எதிராக மக்களைத் தூண்டி கலகம் ஏற்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்துள்ளதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மதுரை நகர் நுண்ணறிவு பிரிவின் கீழ் செயல்படும் சமூக ஊடகப் பிரிவைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் எஸ்.சர்மிளா கரிமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் சமூகத்தில் உயர் பொறுப்புகளில் இருக்கும் தலைவர்கள் மீது உள்நோக்கத்துடன் செய்திகளை வெளியிட்டது, கலவரத்தை தூண்ட திட்டமிட்டது உள்ளிட்டவை புகார் மனுவில் இடம்பெற்றன, கஅதன்பேரில், கலவரத்தை தூண்டுதல் உட்பட 4 பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

பசும்பொன்பாண்டியன் மீது ஏற்கெனவே கரிமேடு, அண்ணா நகர், செல்லூர், திலகர் திடல், புதூர், ஜெய்ஹிந்த்புரம், எஸ்.எஸ். காலனி உள்ளிட்ட காவல் நிலையங் களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகப் போலீஸார் கூறினர் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என தரக்குறைவாக பேசிவந்த பசும்பொன் பாண்டியன் என்ற நபர் இப்போது கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார்.

இதையறிந்த பல போராளிகள் இப்போது தங்கள் வாயை மூடி அமைதியாகிவிட்டனர் போதாத குறைக்கு இது போன்று தரம் தாழ்ந்து பேசும் நபர்கள் பங்குபெறும் யூடுப் சேனலின் பக்கங்களை முடக்கவும் வாய்ப்புகள் இருப்பதால் பலர் அடுத்து நாம் சிக்க போகிறோமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்களாம்.

ஆளுநர் மாளிகை என்றால் என்ன அதன் அதிகாரம் என்ன என்பதை காட்ட களம் இறங்கி இருக்கிறதாம் ஆளுநர் மாளிகை இதனால் பல போராளிகள் நிலைமை இனி மோசமாகும் என்கின்றது ஆளுநர் மாளிகை வட்டாரங்கள்.