தற்போது தமிழ்நாட்டின் பாஜக தலைவராக இருந்து வரும் அண்ணாமலை தனது கல்லூரி படிப்பை முடித்ததற்கு பிறகு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய குடியியல் பணிகள் தேர்வில் 2011 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்று கர்நாடகாவின் காவல்துறை பணியாளராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு சிக்கமகளூரு மாவட்டத்திற்கு தலைமை காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார். என்னைத் தொடர்ந்து பெங்களூரு தெற்கு காவல் துணை ஆணியேராகவும் பதவி உயர்வு பெற்று சிறப்பாக பணியினை தொடர்ந்து வந்தார். இவர் காவல்துறையில் பணியாற்றிய பொழுது முதல்வர் மற்றும் பல உயர் அதிகாரிகளிடமிருந்து விருதுகளை பெற்றுள்ளார். மேலும் மிகவும் தைரியமாக கற்பழிப்பு வழக்கு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கலவரங்களை கட்டுப்படுத்துதல் போன்ற செயல்களில் சிறப்பாக பணியாற்றி வந்தார்.
அதன் பிறகு நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் தலைவர் அமித் சா ஆகியோரை சந்தித்து பாஜகவின் மீது ஏற்பட்ட இருப்பினை கூறி அதன் பிறகு அந்த கட்சியில் சேர்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து 25 ஆகஸ்ட் 2020 ஆம் ஆண்டு காவல்துறை பணியினை விட்டு விலகினார். அவ்வாறு தனது பணியினில் இருந்து விலகி ஒரு வருடம் கழித்து பாஜகவில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்தார். இதன்பிறகு 2021 ஆம் ஆண்டில் வந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி பகுதியில் நின்று 24,816 வாக்கு வித்தியாசத்தில் திமுகவில் போட்டியிட்ட ஆர். இளங்கோவிடம் தோற்றார். அதன் பிறகு எல் முருகன் மத்திய அமைச்சரான பிறகு அண்ணாமலை அவர்கள் தமிழகத்தின் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் கோவை மாவட்டத்தில் பாஜக சார்பாக போட்டியிட்டார்.
இந்த நிலையில் அவருடைய வாழ்க்கையை பயோ பிக் வகையில் வெளியிடப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பயோ பிக்கினை ஒரு பிரபல நிறுவனம் இயக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பயோபிக்கில் அண்ணாமலை கதாபாத்திரத்தில் ஒரு பிரபல நடிகர் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது!! இந்த பிரபல நடிகர் யார் என்றால் புரட்சி தளபதி என்று அனைவராலும் அழைக்கப்படும் விஷால்தான் பாஜக தலைவர் அண்ணாமலை கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த திரைப்படத்தில் அண்ணாமலை காவல்துறையில் பணியாற்றிய போது நடந்ததையை கதையாக அமைக்கப்படுமா?? அல்லது தற்போது பாஜகவில் இணைந்து அரசியலில் பணியாற்றி வருவது குறித்து கதையினை உள்ளடக்கி பயோ பிக் எடுக்கப்படுமா?? என்று தற்போது கேள்விகள் எழுந்து வருகிறது.
ஏற்கனவே தோனி, சச்சின் போன்றவர்களின் பயோபிக் வெளியாகி இருந்தது. மேலும் தற்போது இளையராஜாவின் பயோ பிக்கில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த வரிசையில் தற்போது பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பயோட்டிக்கும் வெளியாகப் போவது குறித்த செய்திகள் பரவி வருவது அரசியல் வட்டாரத்திலும், பாஜகவின் ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அண்ணாமலையின் பயோபிக் எப்படி இருக்கும் என்றும் அதில் நடிகர் விஷால் சூப்பராக நடிக்கப் போகிறார் என்றும் தற்போது அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது போன்ற முன்னணி நடிகர்கள் மற்றும் விளையாட்டுத்துறையில் உள்ளவர்களின் பயோபிக்குகள் வெளியாகி வரும் நிலையில் ஒரு முன்னணி அரசியல்வாதி பயோபிக் என்றால் முதலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கிற்கு பிறகு அண்ணாமலையின் பயோபிக் தான் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது அரசியல் தரத்திலும் சினிமா வட்டாரத்திலும் கவனத்தைப் பெற்று வருகிறது!!ஆனால் இது குறித்து எந்த ஒரு தகவலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!!!