கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக முழுவதும் லோக்சபா தேர்தல் பரபரப்பாக நடந்த முடிந்தது. இந்த தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சித் தரப்பில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது, அதில் திமுக தரப்பு பிரச்சாரம் மட்டும் பெருமளவில் மக்கள் எதிர்ப்பை பெற்றது. ஏனென்றால் கடந்த 2021ல் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து செய்வதாக கூறிய பல வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் மக்களை அலைக்கழிக்க வைத்ததால் தேர்தலுக்காகவே மக்கள் கோபத்துடன் காத்துக் கொண்டிருந்தனர் அதற்கு ஏற்ற வகையில் லோக்சபா தேர்தலும் நெருங்க அப்பொழுது மட்டும் ஓட்டுக்காக இதுவரை ஆட்சி காலத்தில் எட்டிப் பார்க்காத அமைச்சர்கள் சென்று தனக்குத் தானே வாங்கி கட்டிக் கொண்டனர்.
அந்த வகையில் நீலகிரி தொகுதி எம்பி ஆக இருந்த ஆ.ராசா அதே நீலகிரி தொகுதியில் போட்டியிட்டார் முன்னதாக அவர் நீலகிரி தொகுதிக்கு அடிக்கடி வருவதே இல்லை என்றும் எங்கள் பிரச்சனைகளை அவர் கேட்பதே இல்லை என்றும் பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. அதோடு ஒருமுறை ஆ ராசா நீலகிரி தொகுதி பக்கம் சென்ற பொழுது மக்கள் அவரை சுற்றி வளைத்து அடுக்கடுக்கான கேள்விகளையும் தங்கள் கோரிக்கைகளையும் முன் வைத்தனர். அதில் ஒரு வயதான முதியவர் எங்களுக்கு நியாயத்தைப் பெற்று தாருங்கள் என்னுடைய வயதில் இதற்கு மேல் நான் தெருவில் இறங்கி போராட வேண்டுமா என்ற தனது வேதனையை கூறியிருந்தார் அதற்கும் பதில் பேச முடியாமல் திரும்பி வந்த ஆ ராசா மீண்டும் நீலகிரியில் தான் போட்டி போட வேண்டுமா என்ற வகையில் யோசித்துக் கொண்டிருந்தார் அப்பொழுது கட்சி தலைமை நாங்கள் இருக்கிறோம் நமது கட்சி சின்னம் இருக்கிறது உங்களை ஜெயிக்க வைக்கும் என்று கூறி மீண்டும் நீலகிரி தொகுதியிலே நிற்க வைத்தது!
ஆனால் தேர்தல் பிரச்சார நேரத்திலும் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் நிலவ கட்சி தலைமையிடமிருந்து தேர்தலுக்கான செலவுகளும் சரிவர கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக திமுகவின் துணை பொதுச்செயலாளராக உள்ள ஆ. ராசாவிற்கு செலவுக்கு வேண்டிய பணம் கொடுக்கப்படாமல் இருந்ததால் ஆ ராசா கட்சி தலைமையிடம் முறையிட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி முதல்வர் மு க ஸ்டாலின் கொடைக்கானல் சுற்றுப்பயணத்திற்கு ஒரு பக்கம் செல்ல மறுபக்கம் ஆ.ராசா கட்சியில் உள்ள சில முக்கிய நிர்வாகிகளுடன் ரகசிய கூட்டம் ஒன்றை போட்டதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கூட்டத்தில் திமுகவில் உள்ள மூத்த மற்றும் முக்கிய அமைச்சர்கள் பங்கு பெற்றதாகவும் அதில் பலர் ஆ.ராசாவிற்கு சம்மதம் தெரிவித்து ஆ ராசாவின் முடிவுக்கு பச்சைக்கொடி காட்டியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
அதுமட்டுமின்றி வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட கொடைக்கானல் சென்ற முதல்வருக்கு இந்த செய்திகள் சென்று சேர அங்கும் அவரை யோசிக்க வைத்துள்ளது! இதனால் ஆ.ராசா கூடிய விரைவில் அறிவாலயத்தை கைப்பற்றுவதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்று மூத்த அரசியல் விமர்சிகர்கள் கருதுகிறார்கள். மேலும் இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தில் உள்ள தொண்டர்களிடையே விசாரிக்கும் பொழுது ஆ ராசாவின் தலைமையிலான ஒரு அணி தனியாக தயாராகி வருகிறது என்ற பேச்சு உலா வருகிறது! இதனால் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவோ அல்லது தேர்தல் முடிவுகள் வந்த உடனேவோ அறிவாலயத்தில் சில மாறுதல்கள் நடக்கலாம் என்றும் கட்சிக்குள்ளே பல மோதல்கள் நடைபெறலாம் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.