24 special

என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிய நிலையில் முதல்வர்

Senthil balaji, mk stalin
Senthil balaji, mk stalin

அமலாக்க துறை சோதனை நடைபெற்று பல மணி நேரங்கள் கடந்த நிலையில் செந்தில் பாலாஜி இடங்களில் நடைபெற்ற சோதனை குறித்தும் செந்தில் பாலாஜியின் நிலைப்பாடு குறித்தும் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவர சற்று முதல்வர் ஸ்டாலின் அதிர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது.


செந்தில் பாலாஜி வீடு தொடங்கி அவரது தலைமை செயலக அலுவலகம் வரை இன்று அதிரடியாக 15 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர், கரூர் மற்றும் கோவையில் இப்போதும் சோதனை தொடர்கிறது, இந்த நிலையில் காலையில் இருந்து கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து இருந்த முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலகத்தில் அமலாக்க துறையினர் சோதனை நடத்துகிறார்கள் என்ற தகவல் கிடைத்த மறு நொடியே சற்று அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.

இனிமேலும் அமைதியாக இருந்தால் வேலைக்கு ஆகாது என நினைத்த முதல்வர் உடனடியாக ஆர் எஸ் பாரதியை அழைத்து நேரடியாக செந்தில் பாலாஜி இல்லத்திற்கு சென்று பாருங்கள், கட்சி உங்கள் உடன் இருக்கும் என கூறுங்கள் என அனுப்பி இருக்கிறார் அத்துடன் இப்படித்தான் கர்நாடக மாநிலத்தில் சிவகுமாரை தொடர்ந்து அமலாக்கதுறையை வைத்து பாஜக மிரட்டியது இன்று அவர் துணை முதல்வராக உள்ளார் என கூறி ஆறுதல் தெரிவிக்க கூறி இருக்கிறார் முதல்வர்.

அத்துடமன் தலைமை செயலகத்தில் நுழைந்து சோதனை நடத்துவதா இதெல்லாம் முறையா? என கண்டனமும் தெரிவித்து அறிக்கை கொடுத்து இருக்கிறார் இவையெல்லாம் நடைபெற்று கொண்டு இருக்கும் போதே விரைவில் செந்தில் பாலாஜி தவிர்த்து இன்னும் 6 அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு நடத்த போகிறார்கள்.

இவை அனைத்திற்கும் அண்ணாமலையே காரணம் அவர்தான் செந்தில் பாலாஜி மட்டுமல்ல யாரெல்லாம் அவருக்கு எதிராக பேசுகிறார்களோ அவர்களை சோதனை வளையத்தில் சிக்க வைப்பதாக கூறி புலம்பி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அடுத்து என்ன செய்வது என மூத்த நிர்வாகிகள் மற்றும்  அரசில் அங்கம் வகிக்கும் அரசு அதிகாரிகள் இடையேயும் முதல்வர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்,, அதற்கு பலரும் அமலாக்க துறை நாட்டில் அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ள உரிமை இருக்கிறது அவற்றை தடுக்க முடியாது என கூறி இருக்கிறார்கள்.

இதையடுத்து இதை அரசியல் ரீதியாக எப்படி எதிர் கொள்வது,2ஜி ஊழல் புகார் போன்று செந்தில் பாலாஜி விவகாரமும் டாஸ்மாக் விவகாரமும் விஸ்வரூபம் எடுக்க கூடாது அதனை சரி செய்யும் பணிகளில் இறங்க முதல்வர் தரப்பு தயாராகி வருகிறதாம்.

இந்த நிலையில் அமலாக்க துறை சோதனை முடிவில் செந்தில் பாலாஜி சகோதரர் மற்றும் நண்பர்கள் சிலரும் கைது செய்யப்படலாம் என கூறப்படும் காரணத்தால் செந்தில் பாலாஜி மட்டுமின்றி ஆளும் திமுக அரசின் பல முக்கிய புள்ளிகளும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்களாம்.

செந்தில் பாலாஜிக்கு இருந்த அனைத்து வாய்ப்புகளும் ஒன்றன் பின்பு ஒன்றாக அடைக்கப்பட்டு வருவதால் என்ன செய்வது என தெரியாமல் முழித்து வருகிறார்கள் ஆளும் திமுகவினர்.